search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banglore"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்து இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து சென்றால் அபராதம் வசூலிப்பது வழக்கம்.
    • அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய சோதனையில் சுமார் 170 ஆண்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓடும் நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் அமர்ந்து சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து கழக ஊழியர்கள், நடத்திய சோதனையில் 170 ஆண்கள் பல்வேறு நகர பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து பயணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணிகளிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பி.எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் மாணவர்களுக்கான தேர்வில், மாநில முதல்வரை கேலி செய்யும் வகையில் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். #BangloreTeacherDismissed
    பெங்களூரு:

    பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் ஆங்கில உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னட மொழிப்பாடத் தேர்வுக்காக தயாரித்த வினாத்தாளில், ‘சரியான விடையை தேர்வு செய்க’ எனும் தலைப்பில்,  அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.

    ‘விவசாயிகளின் நண்பன் யார்?
    அ) மண்புழு, ஆ) முதல்வர் குமாரசாமி, இ) பாஜக தலைவர் எட்டியூரப்பா’ என அந்த கேள்வி இருந்தது.

    அந்த கேள்வி இடம்பெற்றிருந்த வினாத்தாளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவர் எட்டியூரப்பா ஆகியோர் குறித்த மீம்ஸ்களும் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.



    இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவேந்திரா கூறுகையில், ‘இந்த கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி விட்டோம். பள்ளியின் தலைமைக்கு தெரியாமலேயே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியினரையும், அரசியலையும் ஊக்குவிக்கும் எண்ணத்தோடு பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன்’ என்றார். #BangloreTeacherDismissed 

    கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ சென்ற கார் மோதியதில் 2 பேர் பலியாகினர். #BJPMLA #CarAccident
    பெங்களூரு:

    கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான சி.டி.ரவி, இன்று அதிகாலை சிக்கமங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே சென்றபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இரு சக்கர வாகனத்துடன் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். காரில் பயணம் செய்த எம்எல்ஏ ரவி சிறிய காயங்களுடன் தப்பினார்.

    காரில் பயணம் செய்தபோது தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஏர் பேக் திறந்த பின்னரே ஏதோ அசம்பாவிதம் நடந்ததை உணர்ந்ததாகவும் எம்எல்ஏ தெரிவித்தார்.

    ஆம்புலன்சை வரவழைத்து உயிரிழந்தவர்களின் சடலங்களை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தானும் அதே மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்ததாகவும் தெரிவித்தார். #BJPMLA #CarAccident

    மருத்துவ காப்பீடு பெற்றுள்ள தனிநபர்களுக்கு இனி மனநோய்க்கும் சிகிச்சை அளிக்கும் புதிய நடைமுறையை இந்திய காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகமை வலியுறுத்தியுள்ளது. #HealthPolicy #IRDAI
    பெங்களூரு:

    மனிதர்களை தாக்கும் நோய்களை காட்டிலும், அதற்கு ஆகும் செலவுகள் குறித்த அச்சம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையை மாற்ற அரசு சார்பிலும், வங்கிகள் சார்பிலும் காப்பீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த காப்பீடு திட்டங்களை ஒழுங்குமுறை படுத்தும் முகமையான காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகமை சமீபத்தில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

    அதில், உடலில் ஏற்படும் சாதாரண நோய்களுக்கு அளிக்கப்படும் காப்பீடு உதவியை போல், மனநோயையும் காப்பீடு திட்டத்துக்குள் அனைத்து வங்கிகளும் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்மூலம், மனநோயாளிகளும் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை காப்பீடு மூலம் பெற இயலும். இதுகுறித்து பேசிய டிடிகே நிறுவனத்தின் சி.ஓ.ஓ, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விழிப்புணர்வையும், அவர்களை ஏற்கும் மனநிலையையும் அளிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். #HealthPolicy #IRDAI
    ×