search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்
    X

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு வழங்கிய போது எடுத்த படம்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்

    • போக்குவரத்து துறை அமைச்சரிடம் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியோர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பேருந்துகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியோர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக சட்டமன்ற அலுவலகத்திற்கு அதிகமான மனுக்கள் வந்துள்ளதாலும், பொதுமக்கள் பலமுறை நேரில் சந்தித்து என்னிடம் கோரிக்கை வைத்துள்ளதாலும் கீழ்கண்ட வழித்தடங்களில் இயங்கி கொண்டிருந்த பேருந்துகளை மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்கி தந்து உதவுமாறு அமைச்சரை கேட்டு கொள்கிறேன்.

    கருங்கலில் இருந்து கருமாவிளை, திக்கணங்கோடு, திங்கள் நகர், இரணியல், வழித்தடத்தில் நாகர்கோவிலுக்கு செல்லும் பாயிண்டு டூ பாயிண்டு முழுநேர பேருந்து, மற்றும் புதுக்கடை, சடையன்குழி, கிள்ளியூர், தொலையாவட்டம், பாலூர், கருங்கல், கருமாவிளை, கருக்குப்பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, பாளையம், திங்கள்நகர் வழியாக தக்கலை செல்லும் தடம் எண் 10 C - புதுக்கடை - தக்கலை முழுநேர பேருந்து மற்றும் வடசேரி, பார்வதிபுரம், சுங்கான்கடை, பரசேரி, இரணியல், திங்கள்நகர், திக்கணங்கோடு, மத்திகோடு, கருங்கல், இனையம்புத்தன்துறை, இனையம், ஹெலன் நகர் வழியாக ராமன்துறை செல்லும் தடம் எண் 309 E மற்றும் 309 E, F.P - நாகர்கோவில் - ராமன்துறை முழுநேர பேருந்து, மற்றும் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, குருந்தன்கோடு, இரணியல், திங்கள்நகர், பாளையம், திக்கணங்கோடு, மத்திகோடு, கருங்கல், மிடாலக்காடு வழியாக மிடாலம் செல்லும் தடம் எண் 7 J - நாகர்கோவில் - மிடாலம் பேருந்து, குளச்சல், பாலப்பள்ளம், கருங்கல், பாலூர், கம்பிளார், வேங்கோடு, புதுக்கடை, நித்திரவிளை வழியாக நீரோடி காலனி செல்லும் தடம் எண் 302 A - குளச்சல் - நீரோடி பேருந்து, கருங்கலில் இருந்து

    பாலூர், தெருவுக்கடை, தொழிக்கோடு, செந்தறை, பரவை, பொத்தியான்விளை, வில்லாரிவிளை, கீழ்குளம், தேங்காப்பட்டணம், புதுக்கடை, காப்பிக்காடு வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87B - மார்த்தாண்டம் - கருங்கல் பேருந்தை ஒரே வழித்தடத்தில் முழுநேர பேருந்தாக இயக்க வேண்டும். இனையம் முதல் தேங்காப்பட்டணம் வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87A - பேருந்தை இனையத்திலிருந்து உடவிளை, ஈத்தன்காடு, செந்தறை, தொழிக்கோடு, தெருவுக்கடை வழியாக கருங்கல் வரை பொதுமக்கள் நலன் கருதி நீட்டிப்பு செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×