search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனா நினைவு சின்னம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 325-வது ஆலோசனை கூட்டம் இன்று புது டெல்லியில் நடக்கிறது.
    • ஆலோசனையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை, இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இது கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் அமைய இருக்கிறது. அங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

    இதனை பொதுமக்கள் வந்து பார்த்து செல்லும் வகையில் இரும்பு பாலம் மற்றும் பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் நடைபாதை அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த பிரம்மாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது. பொதுமக்க ளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மேலும், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்து அனுமதி வழங்கிவிட்டது.

    இதன் அடுத்தகட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக பேனா நினைவு சின்னம் திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்து உள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு விரிவாக கடிதம் எழுதி இருந்தது.

    இந்நிலையில் இன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 325-வது ஆலோசனை கூட்டம் இன்று புது டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு குழுவின் தலைவர் தீபக் அருண் அப்டே தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் தான் இன்று மெரீனா கடலில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கடிதம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று நிபுணர்கள் குழுவினர் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக காணொலியில் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

    இந்த ஆலோசனையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். ஏற்கனவே தமிழக பொதுப்பணித்துறை அளித்துள்ள கடிதத்தில் பேனா நினைவு சின்னம் அமைய உள்ள இடத்தில் கடல் ஆமைகளோ, புற்களோ இல்லை என்றும், இதனால் மீனவர்களுக்கோ, கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து நிபுணர் குழு தீவிரமாக ஆலோசனை மேற்கொள்கிறது. இந்த குழுவில் பல்வேறு நிபுணர்களும் பங்கேற்று ஆலோசிக்கின்றனர். ஆலோசனையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நிபுணர் குழு ஆலோசனை முடிந்ததும், அவர்கள் இது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளது. அதன்பின்னரே பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவரும். இருப்பினும் மத்திய அரசு விரைவில் இதற்கு அனுமதி வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சி குழுவிடம் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி பெறவும் அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
    • பரிசீலனைக்கு பிறகே பேனா சின்னம் அமைக்க கடற்கரை மண்டலம் அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவரும்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை, இலக்கிய சிந்தனைகளை நினைக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    மேலும் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் அமைய இருக்கிறது. இதனை பார்க்க இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது. பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இதன் அடுத்தகட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக பேனா நினைவு சின்னம் திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்து உள்ளது.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

    இது தொடர்பாக வருகிற 17-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குழு பரிசீலனை செய்கிறது. இதன் பின்னரே பேனா சின்னம் அமைக்க கடற்கரை மண்டலம் அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சி குழுவிடம் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி பெறவும் அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக பாலம் அமைக்கப்படும்.
    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க திட்டமிட்டு அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடை யும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும்.

    பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக பாலம் அமைக்கப்படும்.

    சென்னையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட் டப்பட்டு உள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது.

    இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்கு முறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற் கட்ட அனுமதி வழங்கிவிட்டனர்.

    இந்நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பி இருந்தது.

    தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித் துறை தலைமை அதிகாரிகளும் பங்கேற்று கருத்து கேட்டனர்.

    அப்போது அந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 12 பேர் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். பேனா நினைவு சின்னத் துக்கு ஆதரவாக 22 பேர் கருத்துக்களை பதிவு செய்தி ருந்தனர்.

    இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொதுப்பணித் துறை தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளது.

    அதில் பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி பேனா நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இதனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.
    • 34 பேரின் கருத்துகள் அதில் இடம் பெற்றுள்ளது.

    சென்னை :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் மெரினா கடலில் பேனா வடிவ நினைவு சின்னத்தை ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக கடந்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி சென்னையில் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.

    இதனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. இதில் மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு நிர்வாகிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதில் சீமான் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் பேனா சின்னம் அமைக்க எத்தனை பேர் ஆதரவு அளித்துள்ளனர், எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளர் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

    இதற்கான விரிவான அறிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளது. அதன்படி, 34 பேரின் கருத்துகள் அதில் இடம் பெற்றுள்ளது. அதில் 22 பேர் ஆதரவு கருத்தும், 12 பேர் எதிர்ப்பு கருத்தும் இடம் பெற்றுள்ளது.

    இந்த கருத்து கேட்பு கூட்ட அறிக்கையை தமிழக பொதுப்பணித்துறை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிக்க உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' என பெயரிடப்பட்டுள்ளது.
    • கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பேசினார்கள்.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக தமிழக மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தங்கம், ராமநாதபுரத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:-

    கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்தை அறியாமல் இந்த சின்னம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக மீனவர்களின் கருத்தை அறியாமல் இந்த சின்னத்தை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

    கடலில் இந்த 134 அடி உயரம் கொண்ட நினைவு சின்னம் அமைப்பது என்பது தவறானது. இயற்கை நீதிக்கு எதிரானது.

    இந்த நினைவு சின்னம் மற்றும் அதற்கான பாதை கட்டுமானங்கள் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    இதேபோல் இந்த சின்னம் அமைப்பது சி.ஆர்.இசட். மண்டலத்துக்குள் வருவதால், இது கடல் வளத்தை பாதிக்கும், கடல் வளம் பாதிக்கும் என்பதை அறிந்தும் பொதுப் பணித்துறை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே பல சூழியலாளர்கள் இந்த விவகாரத்தில் ஆட்சேபனை தெரிவித்தும் அதனை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை.

    மேலும் சென்னை மாநகரில் நினைவிடங்கள் அமைக்க பல்வேறு இடங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கையில் மெரினா கடலில் நினைவு சின்னம் அமைப்பது கடல் வளத்தையும், கடலின் சூழலையும் கடுமையாக பாதிக்கும்.

    பேனா நினைவு சின்னத்தை உருவாக்குவதால் அது கடலையே வாழ்வாதாரமாக நம்பி உள்ள 32 மீனவ கிராமங்களை பாதிக்கும். எனவே பேனா நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

    • தமிழக அரசியல் தலைவர்கள் நினைவைப் போற்றுகிற வகையில் நினைவுச் சின்னம் எழுப்பியவர் கலைஞர்.
    • உலக நாடுகளில் பார்த்தால் நூற்றுக்கணக்கான அருங்காட்சியகங்களும் சுரங்கப்பாதைகளும் பல கீ.மீ. ஆழத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த கலைஞருக்கு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு அருகில் கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    தமது பொது வாழ்க்கையை எழுத்து, பேச்சை அடிப்படையாகக் கொண்டு அரசியல் பணியாற்றி, தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்து சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர். கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழக அரசியல் தலைவர்கள் நினைவைப் போற்றுகிற வகையில் நினைவுச் சின்னம் எழுப்பியவர் கலைஞர். தமது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றிய மகத்தான தொண்டினை போற்றுகிற வகையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இத்தகைய முடிவை எதிர்த்து அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    கடற்கரை மணல் பரப்பிலிருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதனால் சுற்றுச் சூழலுக்கு என்ன பாதிப்பு வந்து விடும் என்று தெரிய வில்லை. இதற்கான தெளிவான விளக்கத்தை தமிழக அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஒரு மாத காலம் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரை பகுதியில் அதிகாலையில் ஆய்வு செய்து அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது.

    நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களும் கடலில் தான் இருப்பதைப் பார்த்துப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ஏறத்தாழ 10 மைல் தொலைவிற்கு கடலில் தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்கள் ?

    அதேபோல, இந்தியாவில் முதன்முறையாக கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைக்கிற பணியை இந்திய கடற்படை, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஒரு அரசு சாரா நிறுவனத்துடன் கை கோர்த்து நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் மத்திய அரசு தொடங்க உள்ளது. கடலில் மூழ்கடிக்கப்பட்டு, நீருக்கு அடியில் 26 மீட்டர் ஆழத்தில் உள்ள ஐ.என்.எஸ். கடலூர் என்ற கப்பலையே இத்திட்டத்தின் மூலமாக அருங்காட்சியகமாக மாற்றியமைக்க உள்ளார்கள். இந்த அருங்காட்சியகத்தை காண கடற்கரையில் இருந்து 7 கி.மீ. தொலைவிற்குச் செல்ல வேண்டும். இத்தகைய அருங்காட்சியகத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று இதுவரை எவரும் குரல் எழுப்பவில்லை.

    மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் உள்ளே அரபிக் கடலில், மராட்டிய அரசு சார்பில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவிடம், 3,600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நினைவிடத்தில், குதிரை மீது மன்னர் சிவாஜி அமர்ந்திருப்பது போல 210 மீட்டர் உயரத்துக்கு சிலை அமைக்கப்படுகிறது. இதுதான் உலகிலேயே உயரமான சிலையாக இருக்கும். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.

    அதேபோல, உலக நாடுகளில் பார்த்தால் நூற்றுக்கணக்கான அருங்காட்சியகங்களும் சுரங்கப்பாதைகளும் பல கீ.மீ. ஆழத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன.

    காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சித்து வருகிறார்கள். இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியும்.

    தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞருக்குத் தமிழக அரசு அமைக்கும் பேனா நினைவுச் சின்னத்தை ஆதரித்தால் ஊடக வெளிச்சம் கிடைக்காது. விமர்சனம் செய்தால் தான் ஊடகத்தின் வெளிச்சமும், பார்வையும் கிடைக்கும் என்ற நப்பாசையில் இவர்களது விமர்சனங்கள் அமைந்துள்ளன. மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தைத் தான் எதிர்பார்க்க முடியும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அணுகுமுறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் வகுத்த பாதையில், நிமிர்ந்த நடையோடு, நேர்கொண்ட பார்வையோடு செயலாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த நினைவுச்சின்னம் 3 பகுதிகளாக கட்டப்படும்.
    • உரிய தொழில்நுட்பத்தின்படி கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.

    சென்னை :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

    அப்போது பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    இயல், இசை மற்றும் நாடகத் துறைகளுக்கு கருணாநிதி தனது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றியுள்ள தொண்டின் நினைவாக பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.

    இந்த நினைவுச்சின்னம் 3 பகுதிகளாக கட்டப்படும். முதல் பகுதி, கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் காங்கிரீட் பாலம் கட்டப்படும்.

    இரண்டாம் பகுதி, காங்கிரீட் பாலம் முடியும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்படும். கடற்கரையின் தன்மை மாறாத வகையில் அதற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்படும்.

    மூன்றாம் பகுதி, இரும்பு பாலம் முடியும் இடத்தில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும். பேனா நினைவுச்சின்னத்திற்கு செல்லும் பாலத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் காங்கிரீட் தூண்கள் அமைக்கப்படும். நல்ல இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்படுவதால், மீன்பிடி படகு போக்குவரத்திற்கு இடையூறு இருக்காது.

    பேனா நினைவுச்சின்னம் 30 மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். நினைவுச்சின்னத்தை அணுகும் பாலம் 9 மீட்டர் அகலமும், கடல் பரப்பு மற்றும் மணல் பரப்பில் இருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட உள்ளது.

    இந்த திட்டத்திற்காக கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அதுதொடர்பான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், இடர் மதிப்பீடு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஆகிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

    அந்த பகுதியில் நேரிடக்கூடிய பேரிடர்களை கருத்தில் கொண்டு, அவற்றைத் தாங்கும் வகையில் உரிய தொழில்நுட்பத்தின்படி கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.

    இந்த நினைவுச்சின்னத்தை காணவரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்த உள்ளது.

    சுனாமி, நிலநடுக்கம், புயல் ஆகியவற்றை முன்னறிய அங்கு கருவிகள் பொருத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும். அதுபோன்ற ஆபத்தில் யாரும் சிக்கினால், வளாகத்தில் இருந்து மக்களை மீட்க பயிற்சி பெற்ற மீட்புப்படையினர் அங்கிருப்பார்கள்.

    மீட்பின்போது மின்சார வாகனங்கள், மீட்புப் படகுகள் பயன்படுத்தப்படும். மீட்புக்கு வசதியாக, ஒரு நேரத்தில் 300 பேருக்கும் மேற்படாத வகையில் மக்கள் அனுமதிக்கப்படுவர்.

    கட்டுமானத்தின் போது ஏற்படும் கழிவுகள், சூழலியல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அகற்றப்படும். கடல் மண்ணரிப்பு, மண் சேமிப்பு போன்ற ஆய்வு, தேசிய கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நினைவுச்சின்னத்தால் அங்கு ஏற்பட உள்ள கூடுதல் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம், சாலை இணைப்பு பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.

    மும்பையில் மாராட்டிய அரசால் அமைக்கப்படும் சத்ரபதி சிவாஜி உருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக கொண்டு பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து தான் எங்களின் கருத்தும்.
    • எதிர்ப்பதோ எங்கள் நிலைப்பாடு அல்ல. நல்ல நோக்கத்திற்காக அவர்கள் செய்கிறார்கள், அதை நாம் பாராட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் வைக்கப்பட உள்ள பேனா நினைவு சின்னம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-

    பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து தான் எங்களின் கருத்தும். பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது; அதன் முடிவு வரட்டும்.

    பேனா சின்னத்தை உடைப்பேன் என்று சீமான் கூறுவதை பற்றி நீங்கள் (பத்திரிகையாளர்கள்) அவரிடம்தான் கேட்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கருத்து சொன்னாலும் அதை நாகரிகமாக தெரிவிக்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சி நடக்கிறது. ஒரு மிகப்பெரிய கட்சியின், தற்போதைய ஆளும் கட்சியின் மூத்த தலைவருக்கு நினைவு சின்னம் எழுப்பப்படும்போது எதனால் எதிர்க்கிறோம் என்பதை எதிர்ப்பவர்கள் விளக்க வேண்டும். அதை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ எங்கள் நிலைப்பாடு அல்ல. நல்ல நோக்கத்திற்காக அவர்கள் செய்கிறார்கள், அதை நாம் பாராட்ட வேண்டும்.

    பல்வேறு நினைவு சின்னங்கள் தேசிய தலைவர்களுக்கும், மாநில தலைவர்களுக்கும் அமைக்கப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? அதன் பயன் என்ன? என்பதை கலந்து பேசி நல்ல முடிவுக்கு வர வேண்டும். கருணாநிதியை எனக்கு உறுதியாக பிடிக்கும். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். எங்கள் அரசியல் பாணி 1972-ல் இருந்து நாங்கள் வேறு அவர்கள் வேறு என்றாகிவிட்டது. என்னுடைய அரசியல் பயணம் நாகரிகமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
    • கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெரினா கடலில் கருணாநிதி நினைவாக ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    42 மீட்டர் உயரத்தில் இந்த நினைவு சின்னம் அமைகிறது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பாலம் வரை 6 மீட்டர் உயரத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. நிலப்பரப்புக்கு மேல் 290 மீட்டரும், கடல் பரப்புக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இந்த பாலம் அமைகிறது.

    இந்த பாலத்தின் அகலம் 9 மீட்டர் ஆகும். இதில் 2 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலமும் உள்ளது.

    மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் முதலாவதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த கல்யாணராமன் பேசினார். அவர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும். கருணாநிதி சமூக மாற்றங்களை கொண்டு வந்தார்.

    கார்கில் நினைவு சின்னம், போர் நினைவு சின்னம் போல வருங்கால தலைமுறையினர் கருணாநிதி பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுகிறது. இதை வரவேற்கிறேன்" என்றார்.

    சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த அருள் முருகன் பேசுகையில், "கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். எனவே இதை வேறு இடத்தில் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

    இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கலெக்டரும், போலீசாரும் அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது முன் இருக்கையில் இருந்த சிலர் கருத்து தெரிவிப்பது அவரவர் உரிமை என்று வாக்குவாதம் செய்தனர். வாக்கு வாதம் காரணமாக கூட்டம் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

    பின்னர் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது கலெக்டர் அமிர்தஜோதி, "சுற்றுச் சூழல் தொடர்பாக மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் பேசகூடாது. கூட்டத்துக்கு ஒத்துழைப்பு தாருங்கள்" என்றார்.

    பின்னர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சங்கர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி விதிமுறைகளை பின்பற்றி நடக்கவில்லை" என்றார். இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பதை நான் வரவேற்கிறேன். இதை கண்டிப்பாக அமைக்க வேண்டும். மெரினா கடற்கரைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்" என்றார்.

    அதற்கு கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர், "இங்கு அரசியல் பேசக்கூடாது. சுற்றுச்சூழல் பற்றி மட்டும்தான் பேச வேண்டும்" என்றனர்.

    நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பெருமாள் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்க கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

    நீலாங்கரையை சேர்ந்த பா.ஜனதா மீனவர் அணி தலைவர் முனுசாமி கூறுகையில், "மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்" என்று கூறி சில வார்த்தைகளை தெரிவித்தார்.

    இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை விலக்கிவிட்டனர். அப்போது கலெக்டர் அமிர்தஜோதி அவரிடம், "உங்களின் கோரிக்கைகளை எழுதி கொடுங்கள்" என்று கூறினார். பின்னர் போலீசார் பாதுகாப்புடன், முனுசாமியை கூட்டத்துக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர்.

    அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர் பேசுகையில், மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைக்ககூடாது. பேனா நினைவு சின்னம் வைக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் பேனா நினைவு சின்னம் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். இதற்கும் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து கூட்டம் நடை பெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாற்று கருத்து கூறினாலே கூச்சலிடுவது அநாகரீகம்.
    • பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு அல்ல கடலில் வைக்கவே எதிர்க்கிறோம்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது.

    இதையொட்டி பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 31-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று காலை கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தங்களது தரப்பு கருத்தை முன்வைக்க பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல் எழுப்பப்பட்டது.

    கூட்டத்தில் சீமான் பேசியதாவது, பேனா நினைவு சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன். உங்கள் கூச்சலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன். மாற்று கருத்து கூறினாலே கூச்சலிடுவது அநாகரீகம். பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு அல்ல கடலில் வைக்கவே எதிர்க்கிறோம். கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடலில் பேனாவை வைத்தால் ஒரு நாள் வந்து உடைப்பேன் என்று ஆவேசமாக பேசினார்.

    இதையடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீமான் அழைத்து செல்லப்பட்டார்.

    • பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    2.21 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் கருணாநிதி நினைவிடத்தில் கட லுக்குள் இந்த பேனா நினைவு சின்னம் இடம் பெறுகிறது. ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் இந்த பேனா சின்னம் அமைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கு மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில் மெரினா கடற்கரை உள்பட நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் வரையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொட்டிவாக்கம் கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையும் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதியாக மீன்வளத்துறை 27.9.2016 அன்று அறிவித்துள்ளது. ஆமைகள் குஞ்சு பொரிக்கும் இந்த பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    இந்த பகுதியில் இறந்த நபர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் புதைக்கவோ தகனம் செய்யவோ, கல்லறை கட்டவோ நினைவாலயங்கள் கட்டவோ தடை விதிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள கடல் பரப்பில் சிலைகள் அமைப்பது மற்றும் நினைவாலயங்கள் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.

    மெரினா கடற்கரையில் தற்போது கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவாலய கட்டிடப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். மெரினா கடலுக்குள் கட்ட உள்ள பேனா நினைவு சின்னத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனுக்கள் இன்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த மனுவை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில், 8 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு வருகிற பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    • மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது.
    • மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளிபடங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க திட்டமிட்டு அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும்.

    பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக பாலம் அமைக்கப்படும்.

    சென்னையின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டு விட்டது.

    இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கி விட்டனர்.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதிகோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

    தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

    இப்போது அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த அறிக்கையை விரிவாக 4 ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

    அனைத்து அனுமதிகளையும் பெற்று அடுத்த கட்ட கட்டுமான பணியை தொடங்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

    இதன் மூலம் ரூ.81 கோடியில் பேனா நினைவு சின்னம் அமைப்பது உறுதியாகி உள்ளது.

    ×