search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனா நினைவு சின்னம்"

    • 60 அடி நீளம் உள்ள பேனா வாகனத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
    • பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.

    பல்லடம்: 

    தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழை இளைய தலைமுறையினர் அறிய செய்யும் வகையில் அமைக்கப்பட்ட பேனா ஊர்தி நேற்று பல்லடம் நகருக்கு வந்தது.

    கடந்த நவம்பர் 11-ல் கன்னியாகுமரியில் இந்த வாகனம் புறப்பட்டது. 60 அடி நீளம் உள்ள பேனா வாகனத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வாகனத்தின் உள்ளே கருணாநிதியின் சிலை இடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, சிவகங்கை, கோவை மாவட்டங்கள் வழியாக தற்போது பல்லடம் நகருக்கு வந்தது. அந்த வாகனத்திற்கு பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    பின்னர் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. ஊர்தியின் உள்ளே கருணாநிதியின் கோபாலபுர இல்ல அமைப்பு, அஞ்சுகம் அம்மாளின் சிலை, அதன் அருகில் கருணாநிதி இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை, அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன.

    இந்த தேர் முன்பு மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் நேரில் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அந்த வாகனம் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக, உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட உள்ளது.
    • கருணாநிதி நினைவிடத்தை அவரது நினைவு நாளான ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி திறக்க முதலில் திட்டமிடப்பட்டது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

    கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள் எழுத்தாற்றல், சிந்தனைகள், அரசியல் ஆளுமையை விளக்கும் வகையில் நினைவிடத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக, உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவையும் அமைய உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தை அவரது நினைவு நாளான ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி திறக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் வேலைகள் முடிவடையாததால் திறப்பு தள்ளி போனது.

    அதன் பிறகு இந்த மாதம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி திறக்கலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பணிகள் முடிவடையாத காரணத்தால் அந்த தேதியும் தள்ளிப்போகிறது. செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதனால் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு இன்னும் 2 மாதத்துக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.

    • பேனா நினைவு சின்னத்தால் 32 மீனவ கிராமங்களின் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த மோகன் உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 'மெரினா கடற்கரையில் திட்டமிடப்பட்டு உள்ள பேனா நினைவு சின்னத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழக அரசின் இந்த திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக உள்ளது.

    பேனா நினைவு சின்னத்தால் 32 மீனவ கிராமங்களின் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேனா நினைவு சின்ன திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. எனவே பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிட வேண்டும்' என கோரப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனுவுக்கு உதவிடும் வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பொதுநல மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் தவே வாதிட முற்பட்டபோது, நீதிபதி எஸ்.கே.கவுல், 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு என்ன செய்ய முடியும்?, என்ன அடிப்படை உரிமை மீறப்பட்டு உள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது?, மீனுக்கு எப்படி இது பொருந்தும்? தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்லுங்கள் அல்லது சென்னை ஐகோர்ட்டை நாடுங்கள். ஏன் அனைத்து விவகாரங்களையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் சில காலம் இருந்துள்ளேன்.

    அரசியல் போராட்டத்தில் கோர்ட்டை தலையீடு செய்ய வைத்ததில்லை. அரசியல் போராட்டத்தை வேறு எங்காவது நடத்துங்கள். இந்த விவகாரம் சுற்றுச்சூழல் சார்ந்ததா? அப்படி என்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுங்கள்' என குறிப்பிட்டார்.

    பின்னர் வக்கீல் சித்தார்த் தவே, 'அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளதால், சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம்' என வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள், 'ரிட் மனு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டை அதற்கான பணியை மட்டும் செய்ய விடுங்கள். இது போன்ற மனுக்களால் முடியாத நிலை உருவாகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்வதற்கு எது தடையாக உள்ளது?

    மாநிலத்துக்குள்ளான பிரச்சினையை மாநிலத்தில் உள்ள ஐகோர்ட்டு முதலில் விசாரிக்க வேண்டும்' என குறிப்பிட்டனர்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், 'பேனா நினைவு சின்ன திட்டம் குறித்து நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் மனுதாரர் பங்கேற்கவில்லை. ரிட் மனுவை ஜனவரி மாதம் தாக்கல் செய்துவிட்டு ஜூலை மாதம்தான் தமிழ்நாடு அரசுக்கு அளித்தார். இது போன்றுதான் மனுதாரர் இந்த வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்த வழக்கு முழுவதும் அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 6 அடி நிலம் தர மறுத்த நபர்தான் பேனா நினைவு சின்னம் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்' என வாதிட்டார்.

    மற்றொரு மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, 'நினைவிடம் அமைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையிலேயே அது தடை செய்யப்பட்ட பகுதி இல்லை என கூறி பேனா நினைவு சின்னத்தை எழுப்ப திட்டமிட்டு உள்ளனர். இதில் எவ்வித பொதுநலனும் அடங்கவில்லை' என வாதிட்டார்.

    சென்னை ஐகோர்ட்டு அனுமதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தீர்களா? என நீதிபதி எஸ்.கே.கவுல் கேட்டார்.

    இதைத்தொடர்ந்து மனுவை திரும்ப பெற அனுமதி பெற்று அனுமதித்து தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    • பேனா நினைவுச் சின்னம் அமைக்க தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
    • தமிழக அரசு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக வங்கக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனுமதியை பல்வேறு நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது மறைவையடுத்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். இதையடுத்து, நினைவிடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது.

    இந்நிலையில், கருணாநிதி நினைவிடம் பின்புறம் நடுக்கடலில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவெடுத்தது.

    42மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து 290மீ தூரத்திற்கு கடற்கரையிலும், 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு கண்ணாடி பாலம் அமைக்கப்படுகிறது.

    குறிப்பாக பேனாவின் பீடம் 2263.08 சதுர மீட்டர், கடலுக்கு மேல் நடைபாதையானது 2073.01 சதுரமீட்டர், கடற்கரை- நிலம் இடையில் பாலம் 1856 சதுர மீட்டர், கடற்கரையில் நடைபாதை 1610.60 சதுர மீட்டர், நினைவிடம் முதல் பாலம் வரை 748.44 சதுர மீட்டர் பாதை என மொத்தம் 8551.13 சதுர மீட்டரில் இந்த நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

    மேலும், கடற்கரையில் இருந்து நினைவுச் சின்னத்துக்கு செல்ல கடற்பரப்பில் இருந்து 6 மீட்டருக்கு மேல் அமைக்கப்படும் 650 மீட்டர் நீள பாலமானது 7 மீட்டர் அகலத்தில் அமையும். அதில் 3 மீட்டர் கண்ணாடி தளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது

    இந்த நினைவிடத்துக்கு மாநில அரசின் கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் அனுமதியளித்த நிலையில், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    கடந்தாண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில், திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், இத்திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்க அறிவுறுத்தியது. தொடர்ந்து, கருத்து கேட்பு நடத்தப்பட்டு, அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அனுப்பியது.

    அறிக்கையை ஆய்வு செய்த கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம், வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கி இருந்தது.

    பேனா நினைவுச் சின்னம் அமைக்க தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு உள்ளது.

    இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 7-ந்தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட உள்ளது. அங்கேயே சிறிய அளவில் பேனா நினைவு சின்னம் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தமிழக அரசு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பதில் கருணாநிதியின் நினைவிடத்தில் பேனா நினைவுச்சின்னம் சிறிதாக அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

    • மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
    • பேனா நினைவுச் சின்ன திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    புதுடெல்லி:

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். பேனா நினைவுச் சின்ன திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது.
    • ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 13 சதவீதம் மட்டுமே உள்ளது. எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக மாற்றி மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவோம்.

    நீர் ஆதாரங்கள் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. விதையில் விஷம் தடவுவதால் தாய்ப்பால் நஞ்சாக மாறி வருகிறது. வேளாண்மை என்பது தொழில் அல்ல. அது தமிழர்களின் பண்பாடு அதனை அரசு வேலையாக செயல்படுத்துவோம்.

    கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது. கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைப்பதை ஏற்க முடியாது. தற்போது பேனா நினைவு சின்னம் வைப்பதை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவறினால் எங்களிடம் அதிகாரம் வரும்போது அவற்றை அகற்றுவோம் என்றார்.

    முன்னதாக ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    பூமிக்கு எந்த உயிரினங்களாலும் ஆபத்து இல்லை. மனிதர்களால்தான் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற நுண்ணுயிரியிடம் இந்த உலகம் தோற்றுப்போனது. ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மரங்களை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை விதிப்போம். மக்களின் தேவைக்காக மட்டுமே மணல் அள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது சொந்த தேவைகளுக்காக அள்ளி வருகின்றனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஷி, கிரைண்டர் கொடுக்க மாட்டோம். நல்ல குடிநீர், காற்று, தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடக்கச் செய்து பூமித்தாயை 10 ஆண்டுகளில் பச்சைப் போர்வையால் போற்றுவோம் என்றார்.

    • பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • மீனவர்கள் கருத்துக்களை அறியாமல் தமிழக அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவும் ஒப்புதல் அளித்து உள்ளது. இதையடுத்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் கருத்துக்களை அறியாமல் தமிழக அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடல் வளமும் பாதிப்படையும். மேலும் கடலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள 32 மீனவ கிராமத்தினர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்க தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷண்கவுல், சுதன்துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நினைவிடங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டுமான பணிகள் போன்றவற்றுடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளையும் விஸ்வநாதன் கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நினைவிடங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டுமான பணிகள் போன்றவற்றுடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளையும் விஸ்வநாதன் கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

    • உலகப் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரையை அழிக்க கூடிய வகையில் இந்த அரசு பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கிறது.
    • மக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னை ஓட்டேரியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேனா நினைவு சின்னம் அமைப்பதால் மீன் உற்பத்தி பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    உலகப் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரையை அழிக்க கூடிய வகையில் இந்த அரசு பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கிறது.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களுக்கு பயன்படாத பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகமும் தானும் மத்திய அரசிடம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தோம்.

    நினைவுச் சின்னம் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    மெரினா கடற்கரை என்றாலே படகுகள், கட்டு மரங்கள், வலைகள் இருப்பதுதான் அழகு. எதிர் காலத்தில் மெரினா கடற்கரை பெயரை அடித்து விட்டு பேனா கடற்கரை என பெயர் மாறிவிடும்.

    தமிழகத்தில் கொலை. கொள்ளை கற்பழிப்பு பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. நில அபகரிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் நீதிமன்றத்திற்கு சென்றவருக்கு இந்த நிலை என்றால் பொது மக்களுக்கு எந்த நிலை ஏற்படும்?

    திருநெல்வேலி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கை வெளிப்படை தன்மையுடனும் நேர்மையுடனும் விசாரிக்க வேண்டும் இந்த கொலையில் யார் சம்பந்தப்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை இருந்து வருகிறது. மக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

    பட்டன் தட்டினால் மதுபானம் வருவது தான் தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது.

    அதிமுக மற்றும் பாஜக தோழமைக் கட்சிகள் உள்ளன. ஆனால் பாஜக பொருளாளராக இருக்கக்கூடிய சேகர் என்பவர் அதிமுக குறித்து அவதூறான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர் பேசியது தவறு என தெரிவிக்க வேண்டும். எங்களுக்கும் அது போன்ற விமர்சனங்கள் வைக்கத் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா நினைவு சின்னம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் நுழைவாயில் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும்.

    பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரை அமைப்பாக பாலம் அமைக்கப்படும்.

    சென்னையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டு விட்டது.

    இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்கு முறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கி விட்டனர்.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

    தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிகளும் பங்கேற்று கருத்து கேட்டனர்.

    அப்போது அந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 12 பேர் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவாக 22 பேர் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

    இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொதுப்பணித்துறை தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளது.

    அதில் பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் கூடி ஆலோசித்தனர்.

    பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.

    அப்போது மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

    இதுதொடர்பாக அந்த குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு 15 நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் விவரம் வருமாறு:-

    * மெரினா கடலோரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் இருப்பதால் அவர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

    * பேனா நினைவு சின்னம் கட்டப்படும்போது கடலோர நிபுணர் குழுவினர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    * பேனா நினைவு சின்னம் கட்டுவதற்கு எந்த காரணத்தை கொண்டும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது.

    * எதிர்காலத்தில் பேனா நினைவு சின்னம் தொடர்பாக கோர்ட்டு ஏதேனும் உத்தரவு விதித்தால் அவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    * பேனா நினைவு சின்னத்தை பார்ப்பதற்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

    * சென்னை கடலோர பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலக்கட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

    * பேனா நினைவு சின்னத்திற்கு சரியான சாலை வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    * போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை சரியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

    * விதிமுறைகள் மீறப்பட்டால் திட்ட அனுமதி திரும்ப பெறப்படும்.

    உள்ளிட்ட 15 நிபந்தனைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரைபடத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி பேனா நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என நிபந்தனை
    • மக்களின் கருத்தினை அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என சீமான் காட்டம்

    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னையில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

    பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

    மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத -சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது.

    இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

    பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என்று ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
    • அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

    இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.

    இதைத்தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது.

    இதில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.

    கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

    ×