search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் டீசல்"

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் குறைந்துள்ளது. #Petrol #diesel
    சென்னை:

    கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத்தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று ரூ. 80.56-க்கும், டீசல் விலை ரூ. 76.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் குறைந்து பெட்ரோல் இன்று ஒரு லிட்டர் ரூ. 80.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து ரூ.76.30-க்கு விற்பனையாகிறது.



    தொடர்ந்து 27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவை சந்தித்து வருகிறது. கடந்த 27 நாட்களில் பெட்ரோல் விலை ரூ. 5.68-ம், டீசல் விலை ரூ.3.74-ம் குறைந்துள்ளது.
    சென்னையில் இன்று லிட்டருக்கு 17 காசுகள் குறைந்த பெட்ரோல் விலை 80.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #Petrol #Diesel
    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது.

    தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், சீராக இவற்றின் விலை குறைந்தது வாகன ஓட்டிகள் இடையே நிம்மதியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 காசுகள் குறைந்து இன்று ரூ.80.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.76.59-க்கு விற்கப்படுகிறது.
    நாட்டில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. #PetrolDieselPrices #DieselCostlier
    புவனேஸ்வர்:

    சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த முடியாதபடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில நாட்கள் ஏறுவதும், இடையில் ஒருசில நாட்கள் இறங்குவதுமாக உள்ளது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியைப் பொருத்து விலை மாறுபடுகிறது. பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை சற்று குறைவாக உள்ளது. 



    இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, அதாவது ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைந்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து ரூ.74.92க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.86.91க்கும், டீசல் ரூ.78.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தா மற்றும் சென்னையில் பெட்ரோல் ரூ.83.29-க்கும்,டீசல் ரூ.84.64-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolDieselPrices #DieselCostlier
    சென்னையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 15 காசுகளாகவும், டீசல் விலையை 31 காசுகளாகவும் எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. #FuelPrice
     சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது. இதற்கிடையே, கலால் வரியை குறைத்துக் கொள்வதன் மூலம் 2.50 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 

    இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 84.89 ரூபாயாகவும், டீசல் விலை 77.42 ரூபாயாகவும் விற்பனையானது.
    இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

    அதன்படி, பெட்ரோல் விலையில் 15 காசுகள் உயர்த்தி 85.04 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்த்தி 77.73 ரூபாய்க்கும் எண்ணை நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

    பெட்ரோல்-டீசல் விலையின் இந்த தொடர் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPrice
    பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைத்துள்ளதால் பெட்ரோல் டீசல் மீதான விலை மொத்தம் ரூ.2.50 குறைகிறது. #Petrol #Diesel #ArunJaitley
    புதுடெல்லி :

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை கண்டுள்ளதால், பெட்ரோல் டீசல் விலையும் தினம்தினம் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

    இதனால் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று அவசர அலோசனை நடத்தினார்.

    இந்த அலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதிமந்திரி அருண் ஜேட்லி, தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உண்ணிப்பாக கவணித்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உண்ணிப்பாக கவணித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் பேரலுக்கு 86 டாலராக உயர்ந்துள்ளது.

    இது பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணாமாக அமைந்து விட்டது, எனவே, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரூ.1.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது.

    இதனால், மொத்தம் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைகிறது. மாநில அரசுகளும் இதைப்போன்று(ரூ.2.50) பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு மாநிலங்கள் எங்களின் வலியுறுத்தலை ஏற்று விலையை குறைத்தால் மொத்தம் ரூ.5 குறைய வாய்ப்புள்ளது.



    பல பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 4 சதவிகிதத்திற்கு கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    #Petrol #Diesel #ArunJaitley
    நாளொரு ஏற்றமும், பொழுதொரு உயர்வுமாக அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. #Petrolprices #dieselprices
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

    இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

    ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததை எல்லாம் ஈடு செய்யும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.

    கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து சென்னையில் ரூ.86.13 ஆக விற்பனையாகிறது.

    டீசல் விலையும் 10 காசுகள் உயர்ந்து, சென்னையில் ரூ.78.36 ஆகவும் விற்பனையாகிறது. இதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
     
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் கார், லாரி, பஸ் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். #Petrolprices  #dieselprices
    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னை:

    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன்மாதம் கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

    இதனால் தினமும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். இன்று பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.



    இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.69 ஆகவும் டீசலின் விலை லிட்டர் ரூ.78.10 ஆகவும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #PetrolPriceHike

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் காங்கிரஸ்.-தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

    கோவை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.முழு அடைப்பு போராட்டம் நடத்திய காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தி.மு.க. பெறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மோகன் குமார்,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் இலக்கியன் மற்றும் கொ.ம.தே.க. ஆதித் தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, த.மு.மு.க. மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பி.எஸ். சரவண குமார், நிர்வாகிகள் கணபதி சிவகுமார், சவுந்திர குமார், வீனஸ் மணி, காந்த குமார், வக்கீல் கருப்பசாமி, துளசிராஜ், தி.மு.க. சார்பில் பொறுப்பு குழு உறுப்பினர் நாச்சி முத்து, இளைஞரணி கோட்டை அப்பாஸ், பீளமேடு பி.டி. முருகேசன், கொ.ம.தே.க. கருப்பசாமி, தனபால், வடிவேல், சி.ஐ.டி.யூ. பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது-

    மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு இது வரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.

    பெட்ரோல் 85 ரூபாயாகவும், டீசல் 76 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இது அடித்தட்டு மக்களை மிகவும் பாதித்து உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருக்கிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டது. கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் பாரதீய ஜனதாவுக்கு வருகிற தேர்தலில் மிகப்பெரிய அடி விழும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BharathBandh #PetrolDieselPriceHike 

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. #BharathBandh #PetrolDieselPriceHike

    புதுக்கோட்டை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்திற்குட்பட்ட கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

    புதுக்கோட்டை நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கீழராஜவீதி, பிருந்தாவனம், டி.வி.எஸ். கார்னர் ஆகிய இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஓட்டல்களும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

    இருப்பினும் பஸ் நிலையங்களுக்கு குறைவான பயணிகளே வந்திருந்தனர். 50 சதவீத ஆட்டோக்கள் இயக்கப்பட வில்லை. புதுக்கோட்டை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பஜார் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடின.

    இந்தநிலையில் பெட் ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக் கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் -தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீன வர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் அளவுக்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆட்டோக்கள், லாரிகள் இயங்க வில்லை. சரக்குகள் ஏற்றி செல்ல முடியாததால் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கொசு வலைகள், சிமெண்ட், காகிதம், முருங்கைக்காய், ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ராஜூ கூறுகையில், எங்களது பேரமைப்பு சார்பில் கடையடைப்பு தொடர்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. ஆனால் கோரிக்கைக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. கரூர் உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கின.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் ஒரு சில மட்டும் இயக்கப்பட வில்லை.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்டிரைக்கால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சி.ஐ.டி.யு. சங்கத்திற்கு உட்பட்ட ஆட்டோக்கள் மட்டும் இயங்கவில்லை. மற்ற வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மேலும் கடைகளும் திறக்கப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துறையூர், லால்குடி, திருவெறும்பூர், துவாக்குடி, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருச்சி மாநகர பகுதியில் இன்று காலை வழக்கம்போல் திறக்கப் பட்ட கடைகள் காலை 10 மணிக்கு மேல் அடைக்கப்பட்டன.

    பெரியகடை வீதி, என். எஸ்.பி. ரோடு, மலைக்கோட்டை, மெயின்கார்டு கேட், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட இடங்களில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடின. அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின.  #BharathBandh #PetrolDieselPriceHike 

    மத்திய அரசுக்கு எதிராக நாளை நடக்கும் போராட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும, ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெட்ரோல் டீசலின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் மத்திய பா.ஜனதா அரசு வேடிக்கை பார்த்து வருவது வேதனைக்குரியது. எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை மாற்றியமைக்கும் நடை முறை கொண்டு வரப்பட்டதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, நமது நாட்டில் குறைக்காமல், அதன் முழுபயனை மக்களுக்குத் தராமலும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து மத்திய பாரதீய ஜனதா அரசு.

    தற்போது சர்வதேச பிரச்சினைகளால் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது.

    மத்திய அரசின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க கோரியும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் நாளை நாடு தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×