search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனிதநீர்"

    • வானத்தில் கருடன் வட்டமிட கடத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
    • வட மேற்கில் நாகராஜாவும், வட கிழக்கில் ஆஞ்சநேயரும், தென்மேற்கில் விநாயகரும் அமைந்துள்ள தனிச்சிறப்பாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைமஹா தான தெருவில்உள்ள ருக்குமணி சத்தியாபாமா உடனாகிய வேணுகோபால சாமி கோவிலில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    விழாவிற்கு அம்பாபாய் டிரஸ்ட் மற்றும் விழாக்குழு தலைவர் பிரபாகர் தலைமையில் நாகராஜா ஆச்சாரியார் முன்னிலையில் தண்தரசா ரெந்தம் மத்வாச்சாரியா முறைப்படி ஐந்து காலயாகசாலை பூஜைகளுடன் வேத மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கிருஷ்ணா.. கிருஷ்ணா.. என கோஷம் எழுப்பினர்.

    பின்னர், வானத்தில் கருடன் வட்டமிட கடத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் கருவறையில் உள்ள கிருஷ்ணன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    கோவில் உள் வளாகத்தின் மையத்தில் கருடன், துளசி மாடம், வட மேற்கில் நாகராஜாவும், வட கிழக்கில் ஆஞ்சநேயரும், தென்மேற்கில் விநாய கரும் அமைந்துள்ள தனிச்சிறப்பாகும்.

    விழாவில் ஆர்.எஸ்.கே. பாண்டுரெங்கன், நகர மன்ற துணைத்தலைவர் எஸ்.எஸ்.குமார், நகர மன்ற உறுப்பினர் காந்திமதி தனபால், கலியமூர்த்தி, கவி மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவிலில் உள்ள அம்மனுக்கு மதுவநாயகி என்றும், சிவபெருமானுக்கு மதுவனேஸ்வரர் என பெயர் பெற்றது.
    • கடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ராமாயண காலத்தில் சீதையும் ராமனும் இந்த பகுதிக்கு வந்தனர்.

    அப்போது இப்பகுதியில் நல்ல நீரோட்டம் நல்ல பசுமை ஆகியவை இருந்த காரணத்தினால் சீதை இந்த நிலத்திற்கு நல்ல நிலம் என பெயரிட்டு காலப்போக்கில் அது மருவி நன்னிலம் என பெயர் பெற்றது.

    இங்கு உள்ள கோவிலில் உள்ள அம்மனுக்கு மதுவ நாயகி என்றும், சிவபெ ருமானுக்கு மதுவனேஸ்வரர் என பெயர் பெற்றது சோழர் மன்னர்களில் ஒருவனான கோச்சோங்கண்ணனால் கட்டிய யானை புகாமாட கோவில் வகையை சார்ந்த கோயிலாகும்.

    பழமை வாய்ந்த மதுவ நாயகி உடனுறை மதுவனே ஸ்வரர் கோவில் கும்பாபிஷே கத்தையொட்டி நான்கு கால யாக பூஜைகள் மகா பூர்ணாகுதி நடைபெற்றது.

    மேளதாளங்கள் முழங்க கடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு வலம் வந்து கோபுரத்தைஅடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த உசிலாவுடைய அய்யனார், கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனை பல கிராம மக்கள் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அய்யனார் மற்றும் அம்மனுக்கு ராஜகோபுரங்கள் அமைத்து, அய்யனார், விநாயகர், காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பர், சின்னகருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் திருப்பணிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    அதன் பின்னர் புனித நீர் குடங்கள் எடுத்து மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • யாகசாலையில் புனித நீர் கொண்டு வரப்பட்டு விநாயகர் வழிபாடு உடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    • கும்பாபிஷேகத்திற்கு பின்னர் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த கெங்கை சமுத்திரம் பகுதியில் ஆனந்த விநாயகர் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம்இன்று நடைபெற்றது. இக்கோவி லில் ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயத்தின்முன்புறம் யாகசாலை அமைக்கப்பட்டு இருந்தது. யாகசாலையில் புனித நீர் கொண்டு வரப்பட்டு விநாயகர் வழிபாடு உடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. முதல் கால யாகசாலை பூஜைக்கு பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜை இன்று காலை தொடங்கியது. இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றவுடன் புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இசை முழங்க புறப்பட்டது.

    புனிதநீர் அடங்கிய கடம் கோவில் வலம் வந்த பின்னர் கோவிலின் மூலஸ்தான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாலசு ப்பிரமணியர் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆகிய அமைந்துள்ளசன்னதி களுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது.கும்பாபி ஷேகத்திற்கு பின்னர் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகவிழா ஏற்பா டுகளை கெங்கசமுத்திரம் கிராம பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஆர்ப்பாக்கத்தில் பூரணபுஷ்க லாம்பிகா சமேத அய்யனார் ஆலய கும்பாபிஷேகம 6வது ஆண்டு நிறைவு விழா, சம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்க ப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

    ×