search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

    கோவில் கும்பாபிஷேகம்

    • தேவகோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த உசிலாவுடைய அய்யனார், கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனை பல கிராம மக்கள் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அய்யனார் மற்றும் அம்மனுக்கு ராஜகோபுரங்கள் அமைத்து, அய்யனார், விநாயகர், காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பர், சின்னகருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் திருப்பணிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    அதன் பின்னர் புனித நீர் குடங்கள் எடுத்து மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×