search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தக திருவிழா"

    • ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் கலெக்டர் பங்கேற்று தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 'முகவை சங்கமம்" என்னும் 5-வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 9-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுடன் புத்தகத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவு வருகை தந்து புத்தகங்கள் வாங்கிச் செல்லும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மேலும் புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரங்குகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் தங்கள் துறையின் மூலம் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் வழங்க வுள்ள நலத் திட்டங்களின் விவரம் குறித்து ஒவ்வொரு நாளும் வருகை தரும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து அரசின் திட்டங்களை பெறுவதற்கு துறை அலுவலர்கள் உறு துணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவில் 80 ஆயிரம் புத்தகங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.
    • சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கடந்த 23-ந் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சி நேற்று வரை நடைபெற்றது.

    மொத்தம் 104 அரங்குகள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. புத்தக திருவிழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    1 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் புத்தக திருவிழாவினை பார்வையிட்டு உள்ளனர். மேலும் 80 ஆயிரம் புத்தகங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றியக் குழுத்தலைவர். மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர், சரஸ்வதி மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய குழுத் துணைத் தலைவர் நித்தியா சுகுமார் கலந்து கொண்டனர்.

    • புதிய பஸ் நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது.
    • ரூ.10 முதல் 1000-க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பட்டு உள்ளன. இதில் ரூ.10 முதல் 1000-க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த புத்தகத் திருவிழாவை தினமும் ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள். பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமான புத்தங்களை வாங்கி செல்கின்றனர். இன்றுடன் விழா நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் புத்தகத் திருவிழா வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

    இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் முதலாவது புத்தகத் திருவிழா கே.வி.எஸ். பொருட்காட்சி மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இன்று (24-ந் தேதி) முதல் ரூ.200-க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தினசரி குலுக்கல் முறையில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.6 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.4 ஆயிரம், அன்றைய இரவே சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கி கவுரவிக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • விருதுநகரில் புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என விழாவில் அமைச்சர்கள் பேசினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதா னத்தில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது.

    இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதலாவது விருதுநகர் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தக கண்காட்சியை தெடாங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

    புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திரு விழாக்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையா டுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.

    • இலக்கிய களம் சார்பில் 9-வது புத்தகதிருவிழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • இன்று கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் சார்பில் 9-வது புத்தகதிருவிழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இன்று கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் நகரில் 8 முனைகளில் இருந்து இந்த பேரணி தொடங்கியது.

    நத்தம் ரோடு குடகனாறு இல்லம், மதுரை ரோடு பான்செக்கர்ஸ் கல்லூரிமுன்பு, சிலுவத்தூர் ரோடு எம்.எஸ்.பி பள்ளி முன்பு, வத்தலக்குண்டு ரோடு பார்வதீஸ் கல்லூரி, தாடிக்கொம்பு ரோடு எம்.வி.எம் கல்லூரி முன்பு, திருச்சி ரோடு உழவர்சந்தை, பழனி ரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, குஜிலியம்பாறை ரோடு பெஸ்கி கல்லூரி முன்பு என 8 இடங்களில் இருந்து பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தலைைமயில் பேராசிரியர்கள் தொடங்கி வைத்து வழிநடத்தினர். புத்தக திருவிழா நடைபெறும் டட்லி பள்ளியில் பேரணி நிறைவடைந்தது. அங்கு தலைவர் மனோகரன் தலைமை வகித்து பேசினார். துணைத்தலைவர் சரவணன், எழுத்தாளர் ராமமூர்த்தி, இணைச்செயலாளர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
    • ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை :

    உடுமலை புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் தளி ரோடு தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, சிறுகதை, கவிதை, மாணவர்களுக்கான பொது அறிவு, தமிழ், ஆங்கில நாவல்கள், வண்ண கோலங்கள், மருத்துவம், திரைப்படம் என ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, தேவையான புத்தகங்களை வாங்கியும் செல்கின்றனர்.

    இந்நிலையில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் கண்ணகி தலைமையில் புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். பின் தேவையான புத்தகங்களை வாங்கினர். இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் செய்திருந்தார். தொடர்ந்து வலசுபாளையம் சக்தி பவளக்கொடி குழுவினரின் வள்ளி, கும்மியாட்டம் கலைநிகழ்ச்சி நடந்தது.

    • சேரும், சகதியுமாக புத்தக திருவிழா அரங்கம் மாறியது
    • கனமழை காரணமாக

    கரூர்:

    கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் மழை வெள்ளம் புகுந்ததால், புத்தகங்கள் சேதமடைந்தன. நுழைவாயில் பகுதி சேறும், சகதியுமானதால் நேற்று மாலை வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் கரூர் புத்தகத் திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 135 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 115ல் புத்தக அரங்குகள், காவல்துறை, மாவட்ட நூலகத்துறை, வனத்துறை, இல்லம்தேடி கல்வி உள்ளிட்ட அரசின் துறைகளின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

    கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக புத்தகத்திருவிழா அரங்குக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் முன் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளின் உள் சுமார் 1 அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்ததில் புத்தகங்கள் வீணாகின. அரங்கின் முன் பாதி பகுதியில் அமைந்திருந்த சுமார் 70 கடைகள் பாதிக்கப்பட்டன.

    பொக்லைன் மூலம் நேற்று அதிகாலை வாய்க்கால் வெட்டி மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கின் முன் பாதி பகுதிகள் சேறும், சகதியுமான மாறியிருந்தன. பொக்லைன் மூலம் நுழைவாயில் பகுதியில் எம் சாண்ட் கொட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு சேறும், சகதியும் சரி செய்யப்பட்டன. மழை வெள்ளம் உள்ளே புகுந்ததால் அரங்கின் முன் பாதி பகுதியில் அமைந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் பாதிக்கப்பட்டன.

    பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து வரவேண்டாம் என தகவல் அளிக்கப்பட்டது. மேலும் விடுமுறை நாள் என்பதால் புத்தகத் திருவிழாவை காண வந்த பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிந்தனை அரங்க பகுதிகள் மண் கொட்டப்பட்டு சீரமைக்கப்பட்டன. பணிகள் நிறைவு பெற்ற பிறகு மாலை புத்தகத் திருவிழாவுக்கும், திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றத்திற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    • புத்தக திருவிழாவில் மக்கள் குவிகின்றனர்
    • ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    கரூர்:

    கரூர் திருமாநிலையூரில் புத்தகத் திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தொல்லியல் அரங்கம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம், உணவரங்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சிந்தனை நிகழ்ச்சியில், படிப்பறிவே, பட்டறிவே என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. செந்தில்கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் மண்மணம் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தகத் திருவிழாவில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் ஆர்வமுடன் புத்தகங்களை பார்வையிட்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

    • புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்தது

    கரூர்:

    கரூர் புத்தக திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, கரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய புத்தக திருவிழா அரசு விழாவாக நாளை (19-ந் தேதி) தொடங்கி வரும் 29 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    குறிப்பாக 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணிவரை நற்சிந்தனைகள் உள்ளடங்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய வகையில் சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற்று சிறப்பிக்க உள்ளனர்.

    மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவி, மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான பேருந்து வசதி, குடிநீர் வசதிகள், ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்த மாபெரும் புத்தக திருவிழா சிறப்பாக அமைய அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

    மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), பொதுபணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) சச்சிதானந்தம், மகளிர் திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாதபாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் கோட்டாட்சியர் ரூபினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • குற்றாலத்தில் சாரல் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
    • மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    குற்றாலத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கிய சாரல் திருவிழாவில் தோட்டக்கலை துறை சார்பில் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்துகண்டு ரசித்தனர்.

    குற்றாலத்தில் சாரல் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து பராசக்தி கல்லூரியில் புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது.

    காண வரும் மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழாவில் ரூ.ஆயிரத்துக்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் ரூ.7 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • புதுகை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா, சின்ன ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடக்கும் புதுகை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை, அரியாணி பட்டி, மஞ்சப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கந்தர்வ–கோட்டை வட்டார கல்வி அலுவலர் வெங்க–டேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்விஜய–லட்சுமி முன்னிலை வகி–த்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா, சின்ன ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×