search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்
    X

    ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்

    • ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் கலெக்டர் பங்கேற்று தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 'முகவை சங்கமம்" என்னும் 5-வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 9-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுடன் புத்தகத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவு வருகை தந்து புத்தகங்கள் வாங்கிச் செல்லும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மேலும் புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரங்குகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் தங்கள் துறையின் மூலம் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் வழங்க வுள்ள நலத் திட்டங்களின் விவரம் குறித்து ஒவ்வொரு நாளும் வருகை தரும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து அரசின் திட்டங்களை பெறுவதற்கு துறை அலுவலர்கள் உறு துணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×