search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசார வாகனம்"

    • தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு இவையெல்லாம் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கான வாகன அனுமதியை பல்வேறு கட்சிகளும் அணுகக்கூடும். இது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு மற்றும் வாகனத்தின் தற்காலிக புகை அளவு சான்றிதழ்கள் இவையெல்லாம் இருக்க வேண்டும். இவை இல்லாதபோது, அந்த வாகனங்கள் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்படாது.

    பொதுவாகவே அனைவரும் பதிவுசான்றிதழ் வைத்திருப்பார்கள். ஆனால் காப்பீடு, தற்காலிக புகை அளவு சான்றிதழ் உள்ளிட்டவை இருக்காது. ஆகவே அப்படிப்பட்ட வாகனங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் அனுமதி கிடையாது. கடைசி நேரத்தில் பலரும் எங்கள் வாகனங்களுக்கு, பிரசாரத்தில் அனுமதி தரப்படவில்லை என்பதற்கான காரணங்களில் மேற்கண்ட ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன.
    • அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்வற்றை மும்முரமாக செய்து வருகின்றன. வேட்பாளர் தேர்வு முடிந்ததும், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். வீதி, வீதியாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரிப்பார்கள்.

    இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பிரசார வாகனங்களும் தயார் செய்யப்படும். அந்த வாகனங்களில் சென்று தான் அவர்கள் பிரசாரம் செய்வார்கள்.

    அரசியல் கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தான் பலருக்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

    இவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரன், போன்றவர்களுக்கும் பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர்.

    அந்த வகையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தலைவர்களுக்கான பிரசார வாகனம் தயாரிக்கும் பணிகள் கோவையில் தொடங்கிவிட்டது. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தலைவர்களுக்கான பிரசார வாகனம் பிரத்யேக வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அந்த பிரசார வாகனம் தயாரிக்கும் நிறுவத்தின் உரிமையாளரான முகமது ரியாஸ் கூறியதாவது:-

    நாங்கள் 55 வருடங்களுக்கு மேலாக பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். பல முக்கிய தலைவர்களுக்கும் நாங்கள் பிரசார வாகனத்தை தயாரித்து கொடுத்துள்ளோம். 95 சதவீதம் நாங்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பிரசார வாகனங்களை தயார் செய்து கொடுக்கிறோம்.

    தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த தலைவர்களுக்கு பிரசார வாகனம் தயாரித்து கொடுத்துள்ளோம்.

    அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.

    முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், வீட்டில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளும் பிரசார வாகனத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினர். அதற்கு ஏற்ப பிரசார வாகனங்களில் படுக்கை, அமருவதற்கு ஷோபா, கழிப்பறை, எல்.இ.டி வி, மற்றும் விளக்குகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது தலைவர்கள் நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்களை விரும்புவதில்லை.

    அவர்கள் பெரும்பாலும் சுழலும் இருக்கை, திறந்த கூரை, கால்களை அகலமாக நீட்டிக்கொள்வதற்கு வசதியான படிகள், தலைவர்களுடன் வரக்கூடிய பாதுகாவலர்கள், முக்கிய நிர்வாகிகள் நிற்பதற்கு வசதியாக அகலமான படிக்கட்டுகள், பொதுமக்களை பார்க்கும் வகையில் 360 டிகிரி கோணத்தில் சுழலும் சி.சி.டி.வி கேமிராக்கள் இருக்கும் வகையில் அமைத்து தரும்படி தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப நாங்களும் வாகனங்களை தயாரித்து வருகிறோம்.

    கூடுதல் வசதிகள் அவர்கள் விருப்பப்பட்டு கேட்டால் அதனையும் செய்து கொடுத்து வருகிறோம்.

    1. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 20 -ந் தேதி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது
    • பிரச்சார வாகனத்துடன் பேரணியாக வந்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக எழுச்சி மாநாட்டு பிரச்சார வாகனத்திற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மதுரையில் ஆகஸ்டு 20 -ந் தேதி அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    இதற்கான சிறப்பு பிரச்சார வாகனத்தின் பயணத்தை சேலத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள அறிவொளி பூங்கா முன்பு பிரச்சார வாகனத்திற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து முக்கிய வீதிகளின் வழியாக அதிமுகவினர் பிரச்சார வாகனத்துடன் பேரணியாக வந்தனர்.

    அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பிருந்து மதுரை நோக்கிய பிரச்சார வாகனத்தின் பயணத்தை மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் செல்வம், மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், ஞானசவுந்தரி கனகராஜ் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சத்யசிவக்குமார், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கதர் சீனு, நகரமன்ற உறுப்பினர்கள் நரேஷ், சந்திரபிரகாஷ், பேரவை மாவட்ட துணைத்தலைவர் ரேடியோ ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் போர் மன்னன் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது.
    • பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை தொடங்கினார். இதற்காக குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது.

    பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் கொடியசைத்து வாகனத்தை வழி அனுப்பி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் நடைபயணம் முடியும் வரை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உலா வரும்.

    மாவட்ட பொதுச்செ யலாளர் வக்கீல் ஜெகநாதன், பொருளாளர் முத்துராமன், நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், மாநகர தலை வர்கள் ராஜன், வேணு கிருஷ்ணன், சிவசீலன், தோவாளை ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர்லால், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ கோபால், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரவிசந்திரன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பிரசார வாகனத்தை கொடிஅசைத்தார். பின்னர் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் சந்திரசேகரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் மற்றும் தனியார் தொழிற்சாலை அலுவலர்கள், ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.
    • ஒரு பகுதியாக, எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வள மையம் அருகே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.

    அப்போது கலெக்டர் சாந்தி கூறியதாவது:- தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண 2022-ம் ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையானது 2025-ம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெறவேண்டும் என்பதேயாகும். குழந்தைகள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படை கணித செயல்பாடுகளை செய்யும் திறன்களையும் வளர்த்தெடுப்பதில் எண்ணும் எழுத்தும் திட்டம் ஒரு முக்கியப் பங்கை வகுக்கிறது.

    கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும் முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டுச் செல்ல "எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்" நிகழ்வு அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பிரசார வாகனம் அனைத்து வட்டார வள மையங்களுக்கும் செல்கிறது.

    எனவே இந்த எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடும் பிரசார நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி, உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×