search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎஸ்என்எல்"

    • இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாட்டின் முக்கிய பகுதிகளில் 5ஜி சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

    மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் ஐந்து முதல் ஏழு மாதங்களுக்குள் 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க பிஎஸ்என்எல் வைத்திருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் இதே போன்ற அப்கிரேடு செய்யப்பட இருப்பதாக மத்திய டெலிகாம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.

    தற்சார்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் டெலிகாம் துறை வளர்ச்சி நிதியை ஆண்டிற்கு ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 4 ஆயிரம் கோடியாக உயரத்த அரசு திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். கோடக் வங்கி தலைமை செயல் அதிகாரி உதய் கோடக், இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் பங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்து இருந்தார்.

    அதில் பிஎஸ்என்எல் இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் உறுதியான நிறுவனமாக மாறழும் என தெரிவித்தார். இதோடு நாடு முழுக்க பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் கிராமபுறங்களில் 1 லட்சத்து 35 ஆயிரம் மொபைல் டவர்களை வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் முழுமையாக களமிறங்காத நிலையே தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    "டெலிகாம் தொழில்நுட்ப ஸ்டாக் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இது 4ஜி தொழில்நுட்ப ஸ்டாக் ஆகும். அடுத்த ஐந்து முதல் ஆறு மாத காலத்திற்குள் இவை 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க உள்ள 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் தொழில்நுட்ப ஸ்டாக் வெளியிடப்படும்," என அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.

    5ஜி டெஸ்டிங் செய்வதற்கான உபகரணங்களை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ்-இடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைகளை துவங்க முடியும்.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • புது பிஎஸ்என்எல் பைபர் பிராட்பேண்ட் சலுகையின் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலை பிராட்பேண்ட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது பழைய பெயரில் கிடைக்கும் புது சலுகை ஆகும். ரூ. 499 சலுகை பிஎஸ்என்எல் பைபர் சேவையின் பேசிக் திட்டம் ஆகும். முன்னதாக இந்த சலுகை ரூ. 449 விலையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 449 பிஎஸ்என்எல் சலுகை அதே பலன்களுடன் வேறு பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய ரூ. 499 சலுகை தற்போது பிஎஸ்என்எல் பைபர் பேசிக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பழைய ரூ. 449 சலுகை பைபர் பேசிக் நியோ என அழைக்கப்படுகிறது. இரு சலுகைகளும் வழங்கப்படும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலையில் பிராட்பேண்ட் சலுகையை வழங்கி வந்துள்ளது. எனினும், கடந்த சில காலமாக இந்த சலுகை நீக்கப்பட்டு இருந்தது.

    தற்போது பிஎஸ்என்எல் ரூ. 499 சலுகையில் 40Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இத்துடன் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் தள்ளுபடி, அதிகபட்சம் ரூ. 500 வரை தள்ளுபடி பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் ரூ. 449 பைபர் பேசிக் நியோ சலுகையில் முன்பை போன்றே 30Mbps வேகத்தில் மாதம் 3.3TB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இரு சலுகைகள் தவிர பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 775 மற்றும் ரூ. 275 போன்ற சலுகைகளை விரைவில் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு சலுகைகளும் சுதந்திர தினத்தை ஒட்டி விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டவை ஆகும்.

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் பேன்சி செல்போன் எண்களை மின்னணு ஏல முறையில் விற்பனை செய்ய உள்ளது.
    • ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள் ஏலத்தில் பங்கேற்று பேன்சி எண்களை ஏலம் எடுக்கலாம்.

    சென்னை:

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் பேன்சி செல்போன் எண்களை மின்னணு ஏல முறையில் விற்பனை செய்ய உள்ளது. ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள் ஏலத்தில் பங்கேற்று பேன்சி எண்களை ஏலம் எடுக்கலாம்.

    இதுதொடர்பான மேலும் விவரங்களை www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த ஏலம் நாளை மறுநாள் (7-ந்தேதி) முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்தியாவில் எப்போது 4ஜி சேவைகள் வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பிஎஸ்என்எல் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

    பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் 4ஜி வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை கொண்டு 4ஜி சேவைகள் எப்போது வெளியிடப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிட பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருகிறது.

    எனினும், 4ஜி வெளியீட்டில் பிஎஸ்என்எல் ஏராளமான தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. எனினும், எப்போது 4ஜி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டர் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் இந்தியா-வை ட்விட்டரில் டேக் செய்து பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். இவரது கேள்விக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, "சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான காரியம். இதற்கு தேவையான தொழில்நுட்ப உபரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்து இருக்கிறது. 

    • பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இரு சலுகைகளும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தீபாவளி சலுகையாக இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து உள்ளது. இவை நாடு முழுக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. எனினும், சில வட்டாரங்களில் இந்த சலுகை வழங்கப்படாமலும் இருக்கலாம். பிஎஸ்என்எல் தீபாவளி சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கும் புது சலுகைகளின் விலை முறையே ரூ. 1198 மற்றும் ரூ. 439 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட பிரீபெயிட் சலுகை விரும்புவோருக்கு ஏற்ற வகையில் பிஎஸ்என்எல் ரூ. 1198 சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயனர்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டா, 300 நிமிட வாய்ஸ் கால், ஒவ்வொரு மாதமும் 30 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இந்த சலுகை நிறைவு பெறும் வரை ஒவ்வொரு மாதமும் பலன்கள் புதுப்பிக்கப்படும்.

    பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மொத்தத்தில் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். வாய்ஸ் காலிங் மட்டும் பயன்படுத்த விரும்புவோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். இந்த இரு சலுகைகளும் பிஎஸ்என்எல் தீபாவளி சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு புதிய பிஎஸ்என்எல் சலுகைகளை பயனர்கள் அதிகாரப்பூர்வ பிஎஸ்என்எல் வலைதளம் மட்டும் பிஎஸ்என்எல் செல்ப்கேர் செயலியில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். 

    • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இந்தியாவில் விரைவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர 2023 வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ அடுத்த தலைமுறை டெலிகாம் சேவைகளை தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் வழங்க துவங்கி உள்ளன. இதனிடையே பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 269 மற்றும் ரூ. 769 விலையில் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    புதிய பிஎஸ்என்எல் பிரீபெயிட் சலுகைகள் 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. மேலும், இவை அதிக டேட்டா பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ. 269 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகை மொத்தத்தில் 60 ஜிபி டேட்டா வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் ரூ. 269 சலுகையில் பிஎஸ்என்எல் டியூன்ஸ் வசதி வங்கப்படுகிறது. இத்துடன் இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட், ஹார்டி மொபைல் கேம் சேவை, சாலஞ்சஸ் அரீனா கேம்ஸ், லிஸ்டின் பாட்காஸ்ட் சேவை, லாக்டுன் மற்றும் சிங் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

    பிஎஸ்என்எல் ரூ. 769 சலுகையிலும் ரூ. 269 சலுகையில் கிடைக்கும் பலன்களே வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், சிங், இரோஸ் நௌ எண்டர்டெயின்மெண்ட் என ரூ. 269 சலுகையில் வழங்கப்பட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 4ஜி சேவை வழங்குவததற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் 2019 ஆண்டு வாக்கில் 4ஜி சேவைகளை வெளியிட திட்டமிட்டது. எனினும், உள்நாட்டு நிறுவனங்கள் வழங்கும் உபகரணங்களை கொண்டு தான் 4ஜி சேவைகளை வெளியிட வேண்டும் என அரசு அறிவித்தது. இதை அடுத்து தான் இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு தாமதமானது. மேலும் 4ஜி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் அறிக்கையை பிஎஸ்என்எல் வெளியிட்டது.

    இந்த கோரிக்கைக்கு டிசிஎஸ் நிறுவனம் மட்டுமே பதில் அளித்தது. இதை அடுத்து பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான சோதனைகள் துவங்கின. அந்த வகையில், பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இணைந்து நாடு முழுக்க 4ஜி சேவையை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக இரு நிறுவனங்கள் இடையே ரூ. 16 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளன.

    இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சலுகைகளை வழங்குவது மற்றும் விலை நிர்ணயம் பற்றி இரு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
    • பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன் ஐடியா) என இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டில் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மிக விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னமும் 4ஜி சேவையை நாடு முழுக்க வெளியிட திண்டாடி வருகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலின் படி பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


    திடீரென 4ஜி வெளியீடு தாமதமாக என்ன காரணம் என்றும் டெலிகாம் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிட விசேஷ உபகரணங்களை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்து இருக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

    உபகரணங்களை வாங்கும் பணிகளை பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு தான் நிறைவு செய்யும். 4ஜி அப்கிரேடு பணிகளில் பிஎஸ்என்எல் உள்நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்தும், இதுவே வெளியீட்டு தாமதமாக காரணம் ஆகும். இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் போதே பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளையும் வெளியிட முடியும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    • நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வழங்கப்படுகிறது.
    • புதுச்சேரியில் ஒரு கிராமத்தில் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது.

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கும், நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.

    இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கரூர்,மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம் சிவகங்கை, தென்காசி, உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் ஒரு கிராமத்திலும் பி.எஸ்.என்.எல்.4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    அவசர உதவிக்கு தொடர்புகொள்ளும் 108 எண் சேவை அரை மணி நேரமாக தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தொடர்பு சீராகியுள்ளது. #108 #Emergency
    சென்னை:

    ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர வசதிக்கு நாடு முழுவதும் 108 என்ற தொலைபேசி எண் அமலில் உள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் இணைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 108 எண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தது. 
    இதனால், தற்காலிகமாக 044-40170100 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    தற்போது, கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து 108 எண் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ×