search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஐந்து மாதங்களில் பிஎஸ்என்எல் 5ஜி? டெலிகாம் மந்திரி அதிரடி!
    X

    ஐந்து மாதங்களில் பிஎஸ்என்எல் 5ஜி? டெலிகாம் மந்திரி அதிரடி!

    • இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாட்டின் முக்கிய பகுதிகளில் 5ஜி சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

    மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் ஐந்து முதல் ஏழு மாதங்களுக்குள் 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க பிஎஸ்என்எல் வைத்திருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் இதே போன்ற அப்கிரேடு செய்யப்பட இருப்பதாக மத்திய டெலிகாம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.

    தற்சார்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் டெலிகாம் துறை வளர்ச்சி நிதியை ஆண்டிற்கு ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 4 ஆயிரம் கோடியாக உயரத்த அரசு திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். கோடக் வங்கி தலைமை செயல் அதிகாரி உதய் கோடக், இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் பங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்து இருந்தார்.

    அதில் பிஎஸ்என்எல் இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் உறுதியான நிறுவனமாக மாறழும் என தெரிவித்தார். இதோடு நாடு முழுக்க பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் கிராமபுறங்களில் 1 லட்சத்து 35 ஆயிரம் மொபைல் டவர்களை வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் முழுமையாக களமிறங்காத நிலையே தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    "டெலிகாம் தொழில்நுட்ப ஸ்டாக் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இது 4ஜி தொழில்நுட்ப ஸ்டாக் ஆகும். அடுத்த ஐந்து முதல் ஆறு மாத காலத்திற்குள் இவை 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க உள்ள 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் தொழில்நுட்ப ஸ்டாக் வெளியிடப்படும்," என அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.

    5ஜி டெஸ்டிங் செய்வதற்கான உபகரணங்களை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ்-இடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைகளை துவங்க முடியும்.

    Next Story
    ×