search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜதா"

    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
    • பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள்.

    ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி சென்று வாக்களித்தார்.

    பின்னர் அசோக் கெலாட் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள். அடுத்த ஐந்தாண்டுக்கு அவர்களை இங்கு பார்க்க முடியாது. இது மோடிக்கான தேர்தல் இல்லை. இது மாநில சட்டசபை தேர்தல். அவர்களை மீண்டும் ஐந்தாண்டு இங்கே பார்க்க முடியாது. நாங்கள் இங்கேதான் இருப்போம். அதோடு மக்களோடு இருப்போம்" என்றார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி அங்கு 200 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த மாதம் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்தது.

    கடந்த 6-ந்தேதி மனுதாக்கல் முடிந்தது. மறுநாள் 7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு 200 தொகுதிகளிலும் 1875 பேர் களத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வேட்பாளர்களில் 183 பேர் பெண் வேட்பாளர்கள்.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 200 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் தொடங்கியது. ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை குறி வைத்து அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசின.

    ராஜஸ்தான் மாநில தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகள் களத்தில் நின்றாலும் உண்மையான போட்டி பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் மிக, மிக தீவிரமாக பிரசாரம் செய்தன.

    ராஜஸ்தான் மாநில மக்களை கவரும் வகையில் 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை காங்கிரஸ் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளாகும்.

    மேலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டங்களையும் ராஜஸ்தான் காங்கிரஸ் அறிவித்து அதிரடி காட்டியது. பாரதிய ஜனதாவும் சில அறிவிப்புகளை வெளியிட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு மிக, மிக வலுவான தலைவர் இல்லா விட்டாலும் மிக வலுவான அடி மட்டம் வரையிலான பூத் கமிட்டி அமைப்புள்ளது. அடுத்தப்படியாக பிரதமர் மோடியை மட்டுமே அந்த கட்சி நம்பி இருப்பது இந்த தேர்தலில் தெரிகிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் பிரதமர் மோடி ராஜஸ்தானில் பல சுற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க. பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், பிரியங்கா இருவரும் ராஜஸ்தான் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிரமாக ஆதரவு திரட்டினார்கள். இந்த வார தொடக்கத்தில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.

    இதையடுத்து ஓட்டுப் பதிவுக்கு நேற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மித்சிங் சமீபத்தில் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. ஓட்டுப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 51 ஆயிரத்து 756 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

    இந்த வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் அதிகாலை முதலே வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வமுடன் திரண்டு வந்தனர். இதனால் ராஜஸ்தானில் பெரும்பாலான தொகுதிகளில் தொடக்கம் முதலே நல்ல விறுவிறுப்பு இருந்ததை காண முடிந்தது.

    காலை 9 மணி வரை முதல் 2 மணி நேரத்தில் சுமார் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஓட்டுப்பதிவை சுமூகமாக நடத்தி முடிக்க துணை நிலை ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் ஓட்டுச்சாவடிகளில் 2 அடுக்கு பாதுகாப்பை வழங்கினார்கள். பதற்றம் ஏற்படலாம் என்று கருதப்படும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

    கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது 74.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தடவை அதைவிட சற்று அதிகம் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றப் போவது காங்கிரசா? அல்லது பாரதீய ஜனதாவா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களிலும், பாரதிய ஜனதா 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

    இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

    என்றாலும் காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுக்கு தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பது தெரியும்.

    ஒரு தடவை ஆட்சி அமைத்த கட்சி அடுத்த தேர்தலில் ஆட்சி அமைப்பதில்லை. எனவே இந்த தடவை தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களது நம்பிக்கையும் ஆசையும் பலிக்குமா? என்பது டிசம்பர் 3-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

    • காங்கிரஸ் வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.
    • காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் இன்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். 5,25,38,105 வாக்காளர்கள் உள்ளனர். 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 199 தொகுதிகளிலும் 51,507 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 70 ஆயிரம் ராஜஸ்தான் போலீசார், 18 அயிரம் ராஜஸ்தான் ஹோம் கார்ட்ஸ், 2 ஆயிரம் ராஜஸ்தான் பார்டர் ஹோம் கார்ட்ஸ், மற்ற மாநிலங்களில் இருந்து 15 ஆயிரம் ஹோம் கார்ட்ஸ் அடங்குவர். மேலும், 120 ஆர்ஏசி கம்பெனிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    • பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம்.
    • முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை.

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது.

    பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானிலும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும், உண்மையில் ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அம்மாநில மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான ராஜேந்திர சிங் ஹதுடா விமர்சித்து பேசினார்.

    தனது சொந்த மாநில அரசையே ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா விமர்சித்து பேசியதை அடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • கடந்த 54 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 2 லட்சம் குற்றவழக்குகள்
    • 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் நாட்டின் 140 கோடி மக்களும் வெட்கப்படுகிறார்கள். மனித இனத்திற்கே வெட்கக்கேடானவை. இதுபோன்று ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் என எங்கு நடந்தாலும் அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட நாட்கள் மவுனம் சாதித்த பிரதமர் மோடி, தற்போது குறுகிய நேரம் பேசிய நிலையில், மற்ற மாநிலங்களை குறிப்பிட்டது அரசியல் நாடகம் எனத் தெரிவித்துள்ளது.

    மோடியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே, ராஜஸ்தானில்தான் இந்தியாவில் நடைபெற்ற பலாத்கார சம்பவங்களில் 22 சதவீதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வசுந்தரா ராஜே கூறியதாவது:-

    பெண்கள், குழந்தைகள், தலித்கள் மற்றும் தொழில்அதிபர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குலைந்துள்ளது. ராஜஸ்தானில்தான் பெண்களுக்கு எதிரான குற்றவழக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 54 மாதங்களில் 10 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ளன. 7500-க்கும் அதிகமானனோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பெண்களுக்கு எதிராக மட்டும் 2 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவில் நடைபெற்ற மொத்த சம்பவங்களில் 22 சதவீதம் ஆகும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட்டின் பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவம் நடந்தாலும், அவர்கள் மவுனம் காக்கிறார்கள்.

    மீடியாக்கள் தரவுகளின்படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 18 முதல் 19 பலாத்கார சம்பவங்களும், 5 முதல் 7 கொலைகளும் நடைபெற்ற வருகின்றன.

    அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனர். அவர்கள் அரசில் இருந்து யாரும் இதுகுறித்து பேசுவதோ, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோ கிடையாது.

    இவ்வாறு வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

    ×