search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவனி"

    • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 1-ம் திருவிழாவையொட்டி நடந்தது
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    புகழ்பெற்ற கோவில் களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லும் ஒன்று. இந்தக் கோவி லில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டா டப்படுகிறது. இந்த திருவிழா நேற்று தொடங்கியது.

    1-ம் திருவிழாவான நேற்று மாலை கொட்டாரம் ஆர். சி.தாணுவின் சமயஉரையும் இரவு 7 மணிக்கு "இறை அருளை பெறுவதில் சிறந்த நெறி பக்தி நெறியா? தொண்டு நெறியா?" என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாக னத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி வரும்போது பக்தர் களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாட லுடன் கூடிய நாதஸ் வர இசையுடன் அம்ம னின் வாகன பவனி நிறை வடைந்தது.

    அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை முன்சென்றது. நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மா சனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி யும் அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    நிகழ்ச்சியில் கன்னியா குமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, நாகர்கோவில் கெங்கா ஜூவல்லர்ஸ் அதிபர்கள் பகவதியப்பன், கெங்காதரன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன் சிலர் பிரேமலதா, தொழில் அதிபர் சிவலிங்கம், வருமான வரித்துறை அலுவலர் ராஜசேகரன், வணிகவரி மற்றும் விற்பனை ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன், சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன கிளைமட பொறுப்பாளர் எம். வி. நாதன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன், தலைவர் வேலாயுதம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    2-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் நடந்தது.

    மாலை 6.30மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 7 மணிக்கு தேசிய விருது பெற்ற டாக்டர் காஷியப்ப மகேஷ் குழுவினரின் சிறப்பு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது 8 மணிக்கு வணிக வரித்துறை சார்பில் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், மெழுகு தீபமேந்தி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு,சேலம் மறை மாவட்ட ஆயர். அருட்செல்வம் ராயப்பன் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து புனித அந்தோணியார், அன்னை மரியாள், புனித பத்தாம் பத்திநாதர் ஆகியோர் திருவுருவத்துடன், 3 திருத்தேர்பவனி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேர்பவனி ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை பங்குத்தந்தை ஜெயசீலன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • பரப்பற்று ஜங்சன், கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்தது.
    • பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவில் கணபதி ஹோமம், அகண்டநாம ஜெபம், அன்னதானம், தீபாரா தனை, லட்சார்ச்சனை, சுழலும் சொல்லரங்கம், பகவத்கீதை பாராயணம், சமய வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நான்காம் நாளான நேற்று காலை சுமங்கலி பூஜை, மாலை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சீர்வரிசை யுடன் யானைமீது சந்தனகுடம் பவனி நடந்தது.

    பவனியானது பரப்பற்று ஜங்சன், கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்தது. இரவு சமய மாநாடு, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஐந்தாம் நாளான இன்று காலை 9 மணிக்கு பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு உறியடி, 5 மணிக்கு சுதர்சன ஹோமம், 6.45க்கு திருவிளக்கு பூஜை, இரவு 10.30 மணிக்கு நெய்யப்பம் சுடுதல், இரவு 12 மணிக்கு அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • சுசீந்திரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஜகத்குரு ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது.
    • நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஜகத்குரு ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாள் மாலை 4 மணிக்கு அலங்கார ஊர்தியுடன் மந்த்ராலயத்தில் இருந்து சிங்காரி மேளம் முழங்க பல்லக்கில் ராகவேந்திரர் பவனி வந்தார். நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சதீஷ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இலங்கை அகதிகள் பறக்கும் காவடியாக கொம்பு தப்பட்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
    • அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும் சமபந்தி விருந்தும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் ஈழத் தமிழர் குடியிருப்பில் வன பேச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்கொடை விழா 3 நாட்கள் நடந்தது.

    இதையொட்டி முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம் பெருமாள்புரம் ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதி வரை இலங்கை அகதிகள் பறக்கும் காவடியாக கொம்பு தப்பட்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    இந்த பறக்கும் காவடி யில் இலங்கை அகதிகள் 2 பேர் முதுகில் அலகு குத்தி காவடியை தோளில் சுமந்தபடி பவனியாக வந்தனர். பால்குடங்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு சிறப்பு பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடந்தது.2-வதுநாள் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து நையாண்டி மேளமும் வில்லிசையும் நடந்தது. மதியம் சாமி, சாஸ்தா, மற்றும் காலசாமிக்கு பூஜையும் நடந்தது. அதன் பிறகு சமபந்தி விருந்து நடந்தது. இரவு நையாண்டி மேளம், கொம்புதப்பட்டை மேளம்மற்றும் வில்லிசை போன்றவை நடந்தது.

    அதன் பிறகு அலங்கார தீபாராதனையும் பூப்படைப் பும் நடந்தது. 3-வது நாள் அதிகாலையில் சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார தீபாராதனைநடந்தது. அதன் பிறகு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சமபந்தி விருந்து நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் பெருமாள்புரம் ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் இலங்கை அகதிகள் செய்து இருந்தனர்.

    • திருவாதவூரில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் பவனி நடந்தது.
    • இன்று அவர் சித்தி பெற்ற நாளாகும்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற பொன்மொழிக்கேற்ப திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர். இன்று அவர் சித்தி பெற்ற நாளாகும்.

    இதனை முன்னிட்டு திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் ேகாவிலில் இருந்து மாணிக்கவாசகர் சப்பரத்தில் புறப்பட்டு அருகில் உள்ள பிறந்த வீட்டிற்கு சென்று பக்தர்களுக்கு இன்று காலை அருள் பாலித்தார்.

    பல்வேறு மாவட்ட ங்களில் வந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட சிவனடியார்கள் அவரது வீட்டுக்கு வந்து இருந்து திருவாசகம் படித்தனர். கோவிலின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா விற்கான ஏற்பாடுகளை மாணிக்கவாசகர் கோவில் அறங்காவலர்கள் மனோஜ் பிரபாகர், சீனிவாசன், சுசீந்திரன், முருகன், சேது மாதவன், கார்த்திகேயன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×