என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி
  X

  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 1-ம் திருவிழாவையொட்டி நடந்தது
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு

  கன்னியாகுமரி:

  புகழ்பெற்ற கோவில் களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லும் ஒன்று. இந்தக் கோவி லில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டா டப்படுகிறது. இந்த திருவிழா நேற்று தொடங்கியது.

  1-ம் திருவிழாவான நேற்று மாலை கொட்டாரம் ஆர். சி.தாணுவின் சமயஉரையும் இரவு 7 மணிக்கு "இறை அருளை பெறுவதில் சிறந்த நெறி பக்தி நெறியா? தொண்டு நெறியா?" என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாக னத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

  கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி வரும்போது பக்தர் களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாட லுடன் கூடிய நாதஸ் வர இசையுடன் அம்ம னின் வாகன பவனி நிறை வடைந்தது.

  அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை முன்சென்றது. நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மா சனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி யும் அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

  நிகழ்ச்சியில் கன்னியா குமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, நாகர்கோவில் கெங்கா ஜூவல்லர்ஸ் அதிபர்கள் பகவதியப்பன், கெங்காதரன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன் சிலர் பிரேமலதா, தொழில் அதிபர் சிவலிங்கம், வருமான வரித்துறை அலுவலர் ராஜசேகரன், வணிகவரி மற்றும் விற்பனை ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன், சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன கிளைமட பொறுப்பாளர் எம். வி. நாதன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன், தலைவர் வேலாயுதம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  2-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் நடந்தது.

  மாலை 6.30மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 7 மணிக்கு தேசிய விருது பெற்ற டாக்டர் காஷியப்ப மகேஷ் குழுவினரின் சிறப்பு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது 8 மணிக்கு வணிக வரித்துறை சார்பில் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

  Next Story
  ×