search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலய"

    • இன்று இரவு தேர்பவனி நடக்கிறது
    • 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடை பெறுகிறது.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை (5-ந்தேதி) வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி 1-ம் திருநாள் முதல் தொடர்ந்து 8-ம் நாள் நேற்று வரை காலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை , 6.45 மணிக்கு கூட்டு திருப்பலியும், மறையுரையும், இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் நாளான இன்று (4-ந்தேதி) காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடந்தது. இதில் கன்னியா குமரி காசா கிளாரட் அருட்பணி டன்ஸ்டன் தலைமை தாங்கி மறை உரையாற்றினார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு சிறப்பு திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர் நடை பெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட செயலர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன் தலைமை தாங்குகிறார். சென்னை சட்டப்பணி அருட்பணி எம்.சி.ராஜன் மறையுரையாற்று கிறார். இரவு 9 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி யும் நடைபெறுகிறது.

    10-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்ட திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண் ரூபஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் அருட்பணி எட்வின் வின்சென்ட் மறை யுரையாற்றுகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடை பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறை மக்கள், பங்குப்பேரவை யினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களில் ஒன்றான மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.

    விழாவின் முதல் நாளான வருகிற 6-ந்தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு புனித ஜோசப் தொடக்கப் பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 14-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஆலஞ்சி வட்டார முதல்வர் பேரருட்பணி தேவதாஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி ஆடம்பர மாலை ஆராதனை நடத்துகிறார். இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    விழாவின் 15-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் மரிய டேவிட் தலை மை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 7 மணிக்கு இரையுமன் துறை பங்குத்தந்தை அருட்பணி சூசை ஆன்றனி தலைமை தாங்கி, மலையாள திருப்பலி நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன் னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர், சிறப்பு வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை பங்குத்தந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்குத்தந்தை மகிமை நாதன், பங்கு இறைமக்கள், பங்குபேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ், ஜோண் ஆப் ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ், பங்குபேரவை உறுப்பினர்கள், விழாக்குழு பொறுப்பாளர்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றம் கல்வி மேம்பாட்டிற் காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவ தற்கான விண்ணப்பப் படி வங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபனை் மையினர் நல அலுவல கங்கள், மாவட்ட சிறு பான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச் சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்ட ஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய் யப்பட்ட திருச்சபைகளிட மிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்காணும் திருச்சபை களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

    மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பி னர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங் கப்பட்டு வரும் நலத் திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

    கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சமும், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித் தொகை ரூ.20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 5 ஆயிரமும், திருமண உதவித் ெதாகை ஆண்களுக்கு ரூ. 3 ஆயிரம் (ம) பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித் தொகை ரூ. 3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 வழங்கப்படும்.

    மேலும், விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், மெழுகு தீபமேந்தி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு,சேலம் மறை மாவட்ட ஆயர். அருட்செல்வம் ராயப்பன் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து புனித அந்தோணியார், அன்னை மரியாள், புனித பத்தாம் பத்திநாதர் ஆகியோர் திருவுருவத்துடன், 3 திருத்தேர்பவனி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேர்பவனி ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை பங்குத்தந்தை ஜெயசீலன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • 108 சங்காபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.
    • ஆலயத்தின் மண்டல அபிஷேக நிறைவு விழாவினை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் எண்ணும் ஞானவேல்வி விழா சிறப்பாக நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் 450 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில், மூலவர் வல்லப விநாயகர், கன்னிமூல கணபதி, பானலிங்க விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், மகா காலபைரவர் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளன.

    இந்த ஆலயத்தின் மண்டல அபிஷேக நிறைவு விழாவினை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் எண்ணும் ஞானவேல்வி விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணி முதல் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக திருவாசகம் முழுவதும் உள்ள அனைத்து பாடல்களையும் பாடினர். அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.

    மேலும் கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி ஆகிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் கலசம் வைக்கப்பட்டு யாக வேள்விகளுடன் 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு வானவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க உற்சவர் வல்லப விநாய கரின் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஶ்ரீ வல்லப விநாயகர் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

    ஏற்காடு லாங்கில் பேட்டை புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா

    ஏற்காடு:

    ஏற்காடு லாங்கில் பேட்டை புனித அந்தோணியார் தேர் திருவிழா நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நேற்று முன்தினம் வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது.

    நேற்று புனிதர்களின் தேர்கள் எடுக்கப்பட்டு புனித அந்தோணியாரின் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    திருவிழாவின் போது பஸ் நிலையம், மற்றும் டவுன் பகுதியில் புனிதர்களின் திரு உருவ மின் கோபுரங்கள், ஜண்டா மேளம், லாங்கில் பேட்டை ஊர் முழுவதும் மின்சார பல்புகள் அமைக்கப்பட்டு வானவேடிக்கை சிறப்பாக அமைந்ததது . விழாவில் ஆண், பெண் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×