தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா

இன்று இரவு தேர்பவனி நடக்கிறது3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடை பெறுகிறது.
தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா
Published on

கன்னியாகுமரி:

தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை (5-ந்தேதி) வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி 1-ம் திருநாள் முதல் தொடர்ந்து 8-ம் நாள் நேற்று வரை காலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை , 6.45 மணிக்கு கூட்டு திருப்பலியும், மறையுரையும், இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

9-ம் நாளான இன்று (4-ந்தேதி) காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடந்தது. இதில் கன்னியா குமரி காசா கிளாரட் அருட்பணி டன்ஸ்டன் தலைமை தாங்கி மறை உரையாற்றினார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு சிறப்பு திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர் நடை பெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட செயலர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன் தலைமை தாங்குகிறார். சென்னை சட்டப்பணி அருட்பணி எம்.சி.ராஜன் மறையுரையாற்று கிறார். இரவு 9 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி யும் நடைபெறுகிறது.

10-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்ட திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண் ரூபஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் அருட்பணி எட்வின் வின்சென்ட் மறை யுரையாற்றுகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடை பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறை மக்கள், பங்குப்பேரவை யினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com