search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vallabha Ganesha"

    • 108 சங்காபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.
    • ஆலயத்தின் மண்டல அபிஷேக நிறைவு விழாவினை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் எண்ணும் ஞானவேல்வி விழா சிறப்பாக நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் 450 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில், மூலவர் வல்லப விநாயகர், கன்னிமூல கணபதி, பானலிங்க விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், மகா காலபைரவர் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளன.

    இந்த ஆலயத்தின் மண்டல அபிஷேக நிறைவு விழாவினை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் எண்ணும் ஞானவேல்வி விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணி முதல் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக திருவாசகம் முழுவதும் உள்ள அனைத்து பாடல்களையும் பாடினர். அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.

    மேலும் கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி ஆகிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் கலசம் வைக்கப்பட்டு யாக வேள்விகளுடன் 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு வானவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க உற்சவர் வல்லப விநாய கரின் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஶ்ரீ வல்லப விநாயகர் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

    ×