search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்திருவிழா"

    • பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவி சாமிபுரம் கிராமத்தில் மதனகிரி முனீஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தியை அமர்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்து தேரை நிலை நிறுத்தினர்.

    இதில் விழா கமிட்டி தலைவர் சமபங்கிராம ரெட்டி, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் நீலம்மா ஜெயராமன், மல்லசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேகா முனிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர ஆர்த்தி, தொழில் அதிபர் சுரேஷ் பாபு, வசந்தகுமார், துரைசாமி, டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, ஊராட்சி மன்ற செயலாளர் விஸ்வநாத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விழா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று இரவு நாடகம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • நேற்று இரவு பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
    • தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அன்னசாகரம் ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திரவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    9-ம் நாளான நேற்று மாலை விநாயகர் ரதம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஈரோடு சிவகிரி செங்குந்தர் சமூகத்தினர் பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுரசித்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விழா நடைபெற்றது. சிவ சுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார். தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது அவர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி, அன்னசாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரளாமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சென்றனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குத்த மரபினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • தேன்கனிக்கோட்டை அருகே கவுரம்மாதேவி தேர் திருவிழா நடைபெற்றது.
    • இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு.

    தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே கும்மளாபுரம் கிராமத்தில் கவுரம்மா கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கும்மளாபுரம் கிராமத்தில் வீரபத்திரசாமி கோவில் அருகில் உள்ள கவுரம்மா தேவி கோவில் தேர்திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.

    ஆண்டு ஆண்டு காலமாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் மற்றும் கவுரம்மாதேவி தேர் திருவிழாயைட்டி கடந்த வினாயகர் சதுர்த்தி நாளில் கோவில் திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. தேர்திரு விழாவையொட்டி நவராத்திரி முதல் நாளில் சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவில் விநாயகர் மற்றும் கவுரம்மா தேவிக்கு தனிதனியாக தேர் அமைந்து 120 பேர் தேரை சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊரில் முழுவதும் ஊர்வலம் வந்தனர். பிறகு அருகில் கவுரம்மா ஏரியில் முதலில் விநாயகரையும் பிறகு கவுரம்மா சிலைகளை தண்ணீரில் கரைத்தனர். இந்த ஊரில் தவிர வேறு எங்கும் கவுரம்மா கோவில் இல்லை முன்னதாக இங்கு விசேஷ பூஜைகளும் 101 கிணற்றில் தண்ணீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேசம் செய்தனர்.

    இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு. இந்த கிராமத்தில் 101 ஏரிகள், 101 குளங்கள் 101 கோயில்கள், 101 வில்வமரம், உள்ள இடம் என்று புராணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கவுரம்மா தேவின் உருவத்தை களிமண்ணால் சிறப்பு அலங்காரம் செய்து தங்கத்தாலி அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் தேவியின் களிமண் சிலையை மூழ்கடித்து 3 நாள் கழித்து அம்மன் தேவி சிலை கழுத்தில் இருந்த தங்கத்தாலி ஏரியில் மேலே மிதக்கும் இந்த தாலியை எடுத்து அம்மன் சன்னிதானத்தில் வைத்து கோவிலை பூட்டிவிடுவது வழக்கமாகும்.

    இத்திருவிழாவில் மடாதிபதிகள், சுற்றுபுற பல கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு கர்நாடக ஆந்திர மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மீண்டும் கோவில் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது.

    மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.

    அதன்படி ஆகஸ்ட் 29-ந் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் புனித கொடி ஏற்றப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது. அன்னையின் பிறந்தநாள் விழா நாளை (8-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.

    கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் தங்களின் ஆரோக்கியத்திற்காக இங்கு அன்னையிடம் வந்து வேண்டிக்கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.

    இன்று புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் அப்போது அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியபடியே அன்னை செல்வது சிறப்பு. மக்கள் வெள்ளத்தில் தேர் மெதுமெதுவாக வலம் வரும் அழகு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    • 20 அடி உயர தேரை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்.
    • ஆடியபடி செல்லும் தேர் எங்காவது ஒரு சில இடங்களில் பாரம் தாங்காமல் சாய்ந்து விடும்.

    திருவாரூர்

    திருவாரூர் ஒன்றியம் தப்பளாம்புலியூர் கிராமத்தில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சக்கரம் இல்லாத இந்தத் தேரை 2 வாரைகள் என பெரிய பல்லக்கு கம்புகள் மீது கட்டி பக்தர்கள் தோளிலும், தலையிலும் தூக்கி கொண்டு இடமும், வலமுமாக ஆடியபடி வீதி வீதியாக செல்வதுடன், ஆடியபடி செல்லும் தேர் எங்காவது ஒரு சில இடங்களில் பாரம் தாங்காமல் பக்கவாட்டில் சாய்ந்து விடும்.

    அப்போது தேரில் உள்ள அம்மனும், பூசாரியும் சாய்ந்து விழுவதும், பின்னர் பூசாரி எழுந்து அம்மனை நேராக வைத்தவுடன் மீண்டும் பக்தர்கள் தூக்கி செல்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.

    இப்படி சாய்ந்து, மீண்டும் எழுந்து செல்வதால் இவ்வூர் அம்மன், விழுந்து எழுந்தாளம்மன் என்ற அழைக்கப்பட்ட நிலையில் நாளடைவில் மறுவி குளுந்தாளம்மன் என அழைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு தேர் யார் வீட்டின் முன்பு சாய்கிறதோ அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்பதும், யாருடைய வயலில் சாய்கிறதோ அந்த வயலில் விளைச்சல் பெருகும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கையாகும். நிலையை அடைந்தது கடந்த 20-ந் தேதி தொடங்கி தேர்திருவிழாவில் 3 நாட்கள் தேரோட்டம் நடந்தது.

    வாரைகளின் மீது 20 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட தேரை பக்தர்கள் தங்களின் தோள்களில் தூக்கிச் செல்லப்பட்ட தேர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நேற்று நிலையை அடைந்தது. தேரை சாய்த்து வணங்கும் விநோத திருவிழாவை தப்பளாம்புலியூர், காரியாங்குடி, பல்லாவரம், வாஞ்சூர், இலங்கைசேரி உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் சிறப்புமிக்க விழாவாகும்.

    • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று, சாமிக்கு பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
    • இதே போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருக பெருமானின் வேட மணிந்து நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் ஸ்ரீ குழந்தை வடிவேல் முருகன் ஆலயத்தின் 53-ம் ஆண்டு ஆடி கிருத்திகை தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 4-ம் தேதி ஊர் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றுதல் மற்றும் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கங்கனம் கட்டுதலுடன் இடும்பன் சாமிக்கு முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனை தொடர்ந்து 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சாமிக்கு கங்கை பூஜையுடன் காவடிகள் அலங்கரித்தல் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.

    அதனையடுத்து பிற்பகல் 2 மணியளவில் விரதம் இருந்த பக்தர்கள் முருக பெருமானின் கோவிலில் பூசாரியின் மூலம் அலகு குத்துதல், முதுகில் தேர் இழுத்தல், உடல் முழுவதும் எழுமிச்சை பழம் கோர்த்தல், பால் காவடி எடுத்தல், பன்னீர் காவடி எடுத்தல், புஷ்ப காவடி எடுத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்டவைககளுடன் சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் இருந்து ஊர்வ லமாக சென்று கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று, சாமிக்கு பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

    இதே போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருக பெருமானின் வேட மணிந்து நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

    இத்தேர் திருவிழாவிற்கு சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த 7-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பாஸ்கர், ஊர் கவுண்டர்கள் முத்து, ராஜா, பழனி, கண்ணன், செந்தில் மந்திரி கவுண்டர், ராஜா உள்ளிட்டோர் செய்திரு ந்தனர்.

    இதனை தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ஏற்காடு லாங்கில் பேட்டை புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா

    ஏற்காடு:

    ஏற்காடு லாங்கில் பேட்டை புனித அந்தோணியார் தேர் திருவிழா நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நேற்று முன்தினம் வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது.

    நேற்று புனிதர்களின் தேர்கள் எடுக்கப்பட்டு புனித அந்தோணியாரின் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    திருவிழாவின் போது பஸ் நிலையம், மற்றும் டவுன் பகுதியில் புனிதர்களின் திரு உருவ மின் கோபுரங்கள், ஜண்டா மேளம், லாங்கில் பேட்டை ஊர் முழுவதும் மின்சார பல்புகள் அமைக்கப்பட்டு வானவேடிக்கை சிறப்பாக அமைந்ததது . விழாவில் ஆண், பெண் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×