search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arogya Mata Birthday"

    • 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது.

    மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.

    அதன்படி ஆகஸ்ட் 29-ந் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் புனித கொடி ஏற்றப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது. அன்னையின் பிறந்தநாள் விழா நாளை (8-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.

    கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் தங்களின் ஆரோக்கியத்திற்காக இங்கு அன்னையிடம் வந்து வேண்டிக்கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.

    இன்று புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் அப்போது அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியபடியே அன்னை செல்வது சிறப்பு. மக்கள் வெள்ளத்தில் தேர் மெதுமெதுவாக வலம் வரும் அழகு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    ×