search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகளுக்கு விடுமுறை"

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் குறைந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது
    • புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தஞ்சை:

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 700 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதன் வேகம் குறைந்து கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் மேற்கு வட மேற்கில் நகர்ந்து இது புயலாக வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.

    • காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு உட்பட குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை-ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மதுரை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் அடுத்து 4 தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டகளில் கன மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சில இடங்களில் லேசான தூரல் மழை பெய்தது. இன்று மதுரையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டி ருந்தது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி-கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

    இன்று காலை முதல் மதுரை நகர் மற்றும்புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தர விட்டார்.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று காலை வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. பிற்பகலுக்கு பின் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலோர பகுதிகளான ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதி களில் கடல் காற்று அதிகமாக இருந்தது. இதனால் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    அவ்வப்போது கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீன வர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    • தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை.

    தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை (5-ந்தேதி) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    கனமழை காரணமாக ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கும், நான்கு மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை நின்றாலும், வெள்ளம் தேங்கிய நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், வானம் மேகமூட்டமாக உள்ளது.

    ராணிப்பேட்டையில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
    ×