search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holidays for schools"

    • மதுரை-ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மதுரை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் அடுத்து 4 தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டகளில் கன மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சில இடங்களில் லேசான தூரல் மழை பெய்தது. இன்று மதுரையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டி ருந்தது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி-கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

    இன்று காலை முதல் மதுரை நகர் மற்றும்புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தர விட்டார்.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று காலை வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. பிற்பகலுக்கு பின் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலோர பகுதிகளான ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதி களில் கடல் காற்று அதிகமாக இருந்தது. இதனால் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    அவ்வப்போது கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீன வர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    டெல்லியில் காற்று மாசு காரணமாக ரெயில்வே, மெட்ரோ ரெயில், விமான நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான பணிகளும் 21-ந் தேதி வரை நிறுத்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசு பரவி வருகிறது. காற்று மாசுவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த காற்று தரமேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதையொட்டி டெல்லியில் வருகிற 21-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வருகிற 21-ந் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். ரெயில்வே, மெட்ரோ ரெயில், விமான நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான பணிகளும் 21-ந் தேதி வரை நிறுத்தப்படுகிறது. 

    விமான நிலையம்

    டெல்லியை சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் 5 மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை வருகிற 30-ந் தேதி வரை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்...செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்

    கனமழை தொடர்வதாலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. இதை தொடர்ந்து சென்னைக்கு விடுக்கப்பட்டு இருந்த அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை நேற்று மாலை விலக்கப்பட்டது.

    இருப்பினும்  செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில்  பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

    கனமழை தொடர்வதாலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும்  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

    மேலும் திருவள்ளூர்  மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை விட்டப்பட்ட நிலையில் நாளையும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குளங்கள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையினால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இன்று காலையிலும் இடைவிடாது மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கொடைக்கானல் மலை கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக பள்ளி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து சேதமாகி உள்ளது. இதனை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதிப்பு நிலவரங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வருவாய்த்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையினால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது.

    கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தளங்களான குணா குகை, தூண்பாறை, பைன் மரச் சோலை, மோயர் சதுக்கம், பசுமைப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலை பல்வேறு இடங்களில். இன்னும் சீரமைக்கப்படாமல் ஆபத்தை விளைவிக்கும் சாலையாக உள்ளது. பைன் மரச்சோலையிலிருந்து குணா குகை போன்ற அடுத்த சுற்றுலாத்தளங்களுக்கு செல்லும் வளைவுச் சாலையில் மோசமான குழி ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது.

    கார்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அச்சத்துடனேயே தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இந்த சாலை உயிரிழப்போ, வேறு ஏதும் விபரீத நிகழ்வுகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்தது.

    குறிப்பாக சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், ஆனைமடுவு, ஏற்காடு கரியகோவில் காடையாம்பட்டி, தம்மம்பட்டி, மேட்டூர், எடப்பாடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை டவுணில் தேனீக்களில் கொட்டி 30 மாணவ- மாணவிகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை டவுண் தெற்கு மவுண்ட்ரோட்டில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் எதிரே ஜவகர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ராட்சத மரத்தின் மீது 3 அடி உயரத்தில் பெரிய தேனீ கூடு இருந்தது.

    இந்நிலையில் இன்று வீசிய பலத்த காற்றில் அந்த தேனீ கூடு கீழே விழுந்தது. இதையடுத்து இதில் இருந்து ஏராளமான தேனீக்கள் வெளியேறி அருகில் உள்ள பள்ளிகளில் புகுந்தது. இதில் கல்லணை பள்ளியில் இருந்த சுமார் 25 மாணவிகளையும், ஆசிரியைகளையும் கொட்டியது. இதனால் அலறியடித்து கொண்டு மாணவிகள் வெளியேறினர்.

    இதையடுத்து அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனீக்கள் அருகில் உள்ள ஜவகர் பள்ளி மாணவர்கள் 5 பேரையும் தாக்கியது. மேலும் அவ்வழியாக வாகனத்தில் மற்றும் நடந்து சென்றவர்களையும் தாக்கியது. இதையறிந்த பெற்றோர்கள் ஏராளமானவர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து கல்லணை மற்றும் ஜவகர் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் டவுண் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×