search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகளுக்கு விடுமுறை
    X
    பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை நீடிப்பு - கொடைக்கானலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குளங்கள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையினால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இன்று காலையிலும் இடைவிடாது மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கொடைக்கானல் மலை கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக பள்ளி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து சேதமாகி உள்ளது. இதனை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதிப்பு நிலவரங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வருவாய்த்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையினால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது.

    கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தளங்களான குணா குகை, தூண்பாறை, பைன் மரச் சோலை, மோயர் சதுக்கம், பசுமைப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலை பல்வேறு இடங்களில். இன்னும் சீரமைக்கப்படாமல் ஆபத்தை விளைவிக்கும் சாலையாக உள்ளது. பைன் மரச்சோலையிலிருந்து குணா குகை போன்ற அடுத்த சுற்றுலாத்தளங்களுக்கு செல்லும் வளைவுச் சாலையில் மோசமான குழி ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது.

    கார்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அச்சத்துடனேயே தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இந்த சாலை உயிரிழப்போ, வேறு ஏதும் விபரீத நிகழ்வுகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×