search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைப்படகுகள்"

    • கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடி:

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதைத்தொடர்ந்து அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் மீன்படிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று முதல் கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அந்த வகையில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மாவட்டத்தில் உள்ள 200 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.

    • கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
    • 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.அவற்றுள் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.

    குளச்சல் :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகு களும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்களும் மீன்பிடித் தொழில் செய்து வரு கின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் குளச்சல் சுற்று வட்டார பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.இன்று காலையிலும் மழை பெய்தது.9 மணிவரை மழை நீடித்தது.தொடர்ந்து மேக மூட்டமாக இருந்து வருகிறது.

    காற்றின் வேகமும் அதிக மாக உள்ளது. இதனால் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.

    இதனால் மீன் வரத்து குறைந்தது.இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.அவற்றுள் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.

    • 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
    • 100-க்கும் மேற்பட்ட புதிய படகுகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. துறைமுகத்தின் அருகே படகு கட்டும் தளமும் உள்ளது.

    கேரள பதிவு எண் கொண்ட 2 கடத்தல் படகுகள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு படகு கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இந்த படகுகளில் திடீரென தீ பிடித்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த னர். நாகர்கோவில் தீய ணைப்பு நிலைய அலுவலர் ஜான் தாமஸ் தலைமையிலும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நள்ளிரவு 1 மணி வரை போராடி தீ அணைக்கப்பட் டது. இருப்பினும் 2 கடத்தல் படகுகளும் தீயில் எரிந்து நாசமாயின. தீயணைக்கும் படை வீரர்களின் துரித நடவடிக்கையால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட புதிய படகுகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

    கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    படகு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. யாராவது சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாமா? அல்லது மர்மநபர்கள் விஷம செயலில் ஈடுபட்டி ருக்கலாமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விசைப்படகுகள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் தான் கடலுக்கு செல்ல முடியும்.
    • கடலுக்கு செல்வதற்காக தளவாட பொருட்களை ஏற்றி மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளது.

    இந்த விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் 14 ந்தேதி முடிய மீன்கள் இனப்பெருக்க காலமாக கண்க்கிடபட்டு விசைப்படகுகள் மீன் பிடி தடைகாலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகு கள் கரைக்கு ஏற்றி மராமத்து செய்யப்பட்டு புதிய வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றது.

    மீன்பிடி வலைகள் சரிபார்க்கப்பட்டது.

    ஜூன் 14 புதன்கிழமை நேற்றுடன் தடைகாலம் நிறைவடைந்தா லும் இன்று(வியாழக்கிழமை) என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது.

    விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் தான் கடலுக்கு செல்ல முடியும்.

    எனவே வருகிற 17-ந்தேதி சனிக்கிழமை அதிகாலை கடலுக்கு செல்வதற்காக விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல் மற்றும் மீன் பிடி வலை உள்ளிட்ட தளவாட பொருட்களை ஏற்றி மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

    இதனால் தடைகாலம் முடிந்தும் கூடுதலாக 2 நாள்கள் சேர்த்து 63 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவ ர்கள் கடலுக்கு மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர்.

    • சின்னமுட்டத்தில் வலைகளை மீனவர்கள் சீர் செய்தனர்
    • தடைக்காலம் முடிய 4 நாட்களே உள்ளன

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்க ளில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெ ருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வரு கிறது. அதேபோல இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தடை அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை யிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்சந்தைகளும் வெறிச் சோடி கிடக்கின்றன.

    இதற்கிடையில் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் தடை காலம் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள், தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் படகுகளை கரையேற்றி உடைந்த பகுதியை சீரமைப்பது, பச்சை நிற வர்ணம் தீட்டு வது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டி ருக்கிறார்கள். வருகிற 15-ந்தேதி அதி காலை 5 மணிக்கு சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்பட குகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. இதனால் துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.

    • இன்னும் 10 நாளில் மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளது.
    • மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பேராவூரணி:

    தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி முடிய 60 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க நடைபெற மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், மல்லிபட்டினம் துறைமுகத்தில் 147 விசைப்படகுகள் உள்ளது. விசைப்படகுகள் வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் நாட்டுப் படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்னும் 10 நாளில் மீன் பிடி தடைக் காலம் முடிய உள்ள நிலையில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிப்பு நடைபெற்று வருகிறது.

    மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்த்து புதிய வர்ணம் பூசும் பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.

    • கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.
    • போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்களின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி ;

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்பட குகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது.

    குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. ஒரு விசைப்ப டகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட் களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

    இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் ஜூன் 1-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் தடைக்காலம் தொடங்குகிறது. இதை யொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. பெரும்பான்மை யான விசைப்படகுகள் கரை திரும்பி விட்டன.

    கடந்த 3 நாட்களாக மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. அவை மீன் பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும். இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்களின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர

    சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பும் மீனவர்கள்

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க நாளை முதல் தடை அமுலுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் 2 மாதகாலம் களை இழந்து வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கும். இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இல்லை.

    இந்த 2 மாத காலமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் அபாயநிலை ஏற்படும்.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பும் ஏற்படும். நாளை தடை காலம் தொடர்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகுகளுடன் நேற்று முதல் அவசர அவசரமாக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரைக்கு திரும்பிய வண்ணமாக உள்ளனர்.

    • தற்போது விசைப்படகுகளில் மீன்பிடி சீசன் நன்றாக இருக்க வேண்டிய சீசனாகும்.
    • விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.

    இந்நிலையில் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் லேசான காற்று வீசுவதாலும், மீன்கள் கிடைக்காததாலும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே இன்று காலை கரை திரும்பின. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் குளச்சலில் இன்று மீன்வரத்து வெகுவாக குறைந்தது.

    இதுகுறித்து விசைப்படகு மீனவர் ஒருவர் கூறியதாவது:-

    தற்போது விசைப்படகுகளில் மீன்பிடி சீசன் நன்றாக இருக்க வேண்டிய சீசனாகும். ஆனால் ஆழ்கடல் பகுதியில் தற்போது மீன்கள் கிடைக்கவில்லை. இதனுடன் கடலில் லேசான காற்றும் வீசுகிறது. இதனால் விசைப்படகினர் கரை திரும்பி உள்ளனர் என்றார்.

    விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    • பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.
    • மீன்கள் கிடைக்காததாலும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே இன்று காலை கரை திரும்பின

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.

    இந்நிலையில் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் லேசான காற்று வீசுவதாலும், மீன்கள் கிடைக்காததாலும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே இன்று காலை கரை திரும்பின. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் குளச்சலில் இன்று மீன்வரத்து வெகுவாக குறைந்தது.

    இது குறித்து விசைப்படகு மீனவர் ஒருவர் கூறியதாவது:-

    தற்போது விசைப்படகுகளில் மீன்பிடி சீசன் நன்றாக இருக்க வேண்டிய சீசனாகும்.ஆனால் ஆழ்கடல் பகுதியில் தற்போது மீன்கள் கிடைக்கவில்லை. இதனுடன் கடலில் லேசான காற்றும் வீசுகிறது.இதனால் விசைப்படகினர் கரை திரும்பி உள்ளனர் என்றார்.

    விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    • ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது.
    • ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ராமேசுவரம்:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கடல் காற்று அதிகமாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

    அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, தொண்டி, மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூ ரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    திடீர் தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலையும் ராமேசுவரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பாம்பனில் கடற்கரையில் உள்ள குடிசை வீடுகளில் கடல் தண்ணீர் புகுந்தது.

    சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்க த்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வானிலை எச்சரிக்கை காரணமாக கடலுக்குச் செல்லவில்லை
    • குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 300 விசை படகுகள், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசை ப்படகுகள் ஆழ் கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

    இந்த நிலையில் மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதி யில் 40 கி.மீ.முதல் 50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், இது அதிகரித்து 60 கி.மீ.வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை.

    அவை குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.மேற்கு கடற்கரை பகுதியில் காற்று எச்சரிக்கை விடுக்கப்படா ததால் சில படகுகள் குமரி மேற்கு கடற்கரை பகுதிக்கு சென்று தொழில் செய்து வருகின்றன.

    இது தவிர காற்று எச்சரிக்கை காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாது காப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

    இதனால் குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.

    ×