குளச்சல் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள்- வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

பலத்த காற்று எதிரொலிகுளச்சலில் இன்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.
குமரி கடலில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் வள்ளங்கள்.
குமரி கடலில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் வள்ளங்கள்.
Published on

கன்னியாகுமரி:

மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும், 8-ந் தேதி குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. வரை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனை தொடர்ந்து மீனவர்கள் குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்கு செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்ப ட்டு உள்ளன.

இன்று கரை திரும்பிய விசைப்படகுகளில் சிறிய இறால் எனப்படும் புல்லன் மற்றும் கிளி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.

காற்று எச்சரிக்கை காரண மாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.இதனால் குளச்சலில் இன்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com