search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகளுக்கு விடுமுறை"

    • கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
    • பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நாளை நடைப்பெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள,

    1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம், 4. அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும் 9.எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள், 10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது.

    • நெல்லையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.
    • தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லையில் அதிகனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    வெள்ள பாதிப்பால் தொடர்ந்து 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும்.
    • வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் என்றும் வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை.
    • ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் விடுமுறை அறிவிப்பு.

    சென்னை:

    சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், அரசு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு நாளைய தினம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி இருப்பதன் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் இன்றும், நாளையும் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
    • ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் (26-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஒருநாள் தாமதமாக 27-ந்தேதி உருவாகிறது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 29-ந்தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    • பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை காரணமாக அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் கரையை நோக்க நகர்ந்து வருகிறது
    • புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல், இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை நெருங்கி வருவதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவயம் வெளியிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வட தமிழகம், புதுச்சேரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ×