என் மலர்
நீங்கள் தேடியது "நாகை மழை"
- தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நாகை:
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.
- 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
- அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக அப்பொழுது யாரும் செல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 284 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வேடசந்தூரில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதில் அங்குள்ள காம்பவுண்டு சுவர் இடிந்து தரைமட்டமானது.
வேடசந்தூர் அருகே தனியார் நிறுவனத்தின் சோப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையின் எதிரே தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததுடன் கற்கள் 15 மீ. தூரம் தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக அப்பொழுது யாரும் செல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் காம்பவுண்டு சுவர் இடிந்து சிதறி கிடப்பதை கண்டு கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த கற்களை அங்கிருந்து ஊழியர்கள் அகற்றினர். இடி தாக்கி காம்பவுண்டு சுவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






