search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு சவாரி"

    • 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வரும் நிலையில் அந்த தொழிலும் கொரோனா காலத்திற்கு பின்பு முற்றிலுமாக முடங்கி உள்ளது.
    • சுற்றுலா பயனாளி களுக்கான படகு சவாரியை ஏற்படுத்த வேண்டும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மசினகுடி ஊராட்சி மன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்

    காலம் காலமாக வாழ்ந்து வரும் இந்த மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொண்டு வந்த நிலையில் அவற்றில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மாற்று தொழிலாக சுற்றுலா தொழிலை செய்து வருகின்றனர்.

    குறிப்பாக மசினகுடி மாவ னல்லா, வாழைத்தோட்டம், மாயார், தெப்பக்காடு உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த ஏராளமானோர் ஜீப்புகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

    தற்போது 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வரும் நிலையில் அந்த தொழிலும் கொரோனா காலத்திற்கு பின்பு முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் ஜீப் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வழி காட்டிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலா திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக மசினகுடி மரவுக்கண்டி அணையில் படகு குளம் அமைத்து சுற்றுலா பயனாளி களுக்கான படகு சவாரியை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா அமைச்சர் ராமச்சந்திரனிடம் நேற்று மனு அளித்தார். அதில் தமிழக வளர்ச்சி கழகம் முலம் படகு சவாரி தொடங்கி மசினகுடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். 

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • மார்ச் மாதத்துக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    கோவை

    கோவை குறிச்சி குளத்தில்படகு சவாரி இயக் குவதற்கான வசதிகள் உள்ளதா என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

    கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி, குமாரசாமி, செல்வம்பதி, கிருஷ்ணாம்பதி மற்றும் குறிச்சி குளங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் மேம் பாட்டு பணிகள் நடந்து வருகின்றன,

    குறிச்சி குளத்தில் சைக்கிள் டிராக், 20 அடி உயர திருவள்ளுவர் சிலை, அலுமினியத்தால் ஆன ஜல்லிக்கட்டு சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஒயிலாட்டம் சிலை, குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகின்றன. இந்த பணிகளை, 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    வருவாய் ஈட்டும் வகையில், வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய களத் தில் இயக்குவதுபோல், குறிச்சி குளத்திலும் படகு சவாரி இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட் டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்று லாத்துறை மேலாண் இயக்குனர் சந்திப் நந்துாரி ஆகியோர் குறிச்சி குளத்ததில் ஆய்வு செய்தனர். அப்போது குறிச்சி குளத்தின் வரைபடத்தை மாநகராட்சி கமிஷனர் பிதாப் காண்பித்து என்னென்ன பணிகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து விளக்கினார். அப்போது, படகு சவாரி இயக்குவதற் கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது குறித்து, சுற்றுலா துறையினருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    • பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
    • அனைத்து கோரிக்கை–களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம் என ஒன்றியகுழு தலைவர், ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.வட்டாரவளர்ச்சி அலுவலர் வெ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றியகுழு துணை தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அருள்நம்பி, சாகுல்ஹமீது, செய்யது முகமது, சுதாகர், பாமா, அமுதா, அருந்ததி, ராஜலட்சுமி ஆகியோரும், அதிமுகவை சேர்ந்த சிவ.மதிவாணன் (ஓபிஎஸ்அணி), மீனவராஜன், கருப்பையன், கவிதா, உமா (அதிமுக எடப்பாடி அணியை சார்ந்தவர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். அனைத்து கோரிக்கை–களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம் என ஒன்றியகுழு தலைவர், ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர்.

    மனோரா சுற்றுலா தலத்தில் கூடுதலாக ஒரு படகு இயக்கப்படும் எனவும், மேலும் ஒரு கழிப்பறை கட்டப்படும் எனவும் தெரிவித்தனர். கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.சடையப்பன் (கி.ஊ) நன்றி கூறினார்.

    • படகு சவாரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
    • தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    கோவை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    இதில் உக்கடம்- சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தின் கரைப்ப குதியில் நடைபாதை, சிறார்களுக்கான விளையா ட்டு உபகர ணங்கள், இருக்கைகள், தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த வாலாங்குளத்தில் பொழுது போக்கு பயன்பாட்டுக்காக படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினருடன் இணைந்து ரூ.45 லட்சம் மதிப்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான படகுகளும் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்த படகு இல்லத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (24-ந் ேததி) திறந்து வைக்கிறார். ஈச்சனாரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தபடியே இந்த படகு இல்லத்தை திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து மாநகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    வாலாங்குளம் படகு இல்லத்தில் பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் என மொத்தம் 20 படகுகள் இயக்கப்பட உள்ளன. பெடல் படகில் 2 பேர் செல்லலாம். துடுப்பு படகில் ஓட்டுபவர் உள்பட 4 பேர் செல்லலாம். மோட்டார் படகில் ஒரே சமயத்தில் 8 பேர் செல்லலாம்.

    30 நிமிடத்துக்கு பெடல் படகுக்கு ரூ.300, துடு ப்பு படகுக்கு ரூ.350, மோட்டார் படகுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் தற்காலிகமாக 20 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது என்றனர்.   

    • சாரல் திருவிழா இந்த மாத இறுதியில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
    • வெண்ண மடை குளத்தில் ஓரிரு நாட்களில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா இந்த மாத இறுதியில் அரசு சார்பில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    சாரல் திருவிழா நடத்துவதற்கான கோப்பு மனுக்கள் அனைத்தும் தமிழக சுற்றுலா துறைக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பண்பாட்டு கலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக சாரல் திருவிழா நடத்தப்படும் என்றும் கூறினார்.

    தற்பொழுது ஐந்தருவி செல்லும் பாதையில் அமைந்துள்ள வெண்ண மடை குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் படகுசவாரி எப்போது தொடங்கப்படும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றன. இன்னும் ஓரிரு நாட்களில் படகு சவாரி தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×