search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி மரவகண்டி அணையில் படகு சவாரி தொடங்க வேண்டும்-அமைச்சரிடம் மனு
    X

    ஊட்டி மரவகண்டி அணையில் படகு சவாரி தொடங்க வேண்டும்-அமைச்சரிடம் மனு

    • 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வரும் நிலையில் அந்த தொழிலும் கொரோனா காலத்திற்கு பின்பு முற்றிலுமாக முடங்கி உள்ளது.
    • சுற்றுலா பயனாளி களுக்கான படகு சவாரியை ஏற்படுத்த வேண்டும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மசினகுடி ஊராட்சி மன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்

    காலம் காலமாக வாழ்ந்து வரும் இந்த மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொண்டு வந்த நிலையில் அவற்றில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மாற்று தொழிலாக சுற்றுலா தொழிலை செய்து வருகின்றனர்.

    குறிப்பாக மசினகுடி மாவ னல்லா, வாழைத்தோட்டம், மாயார், தெப்பக்காடு உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த ஏராளமானோர் ஜீப்புகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

    தற்போது 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வரும் நிலையில் அந்த தொழிலும் கொரோனா காலத்திற்கு பின்பு முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் ஜீப் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வழி காட்டிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலா திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக மசினகுடி மரவுக்கண்டி அணையில் படகு குளம் அமைத்து சுற்றுலா பயனாளி களுக்கான படகு சவாரியை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா அமைச்சர் ராமச்சந்திரனிடம் நேற்று மனு அளித்தார். அதில் தமிழக வளர்ச்சி கழகம் முலம் படகு சவாரி தொடங்கி மசினகுடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    Next Story
    ×