search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்"

    • நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் மேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி ஆகிய கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

    மேலும், தேவன்குடி அண்ணாமலை நகர் பகுதியில் சுமார் 20 குடிசை வீடுகளில் மழைநீர் புகுந்ததால், சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டுஉரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம், சோமேஸ்வரபுரம் சாந்தி கார்த்திக், விவசாய சங்க தலைவர் விக்ரமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், வேளாண்மை துறை அதிகாரிகளும் உள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருவாலி, நாராயணபுரம்,மங்கைமடம், புதுப்பட்டினம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேரில்பா ர்வையிட்டு பாதிப்பு குறித்து விசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    எடமணல், வேட்டங்குடி, அகர வட்டாரம், புதுப் பட்டினம் ஆகிய பகுதிகளில் கனமழை பாதிப்பை பார்வையிட்டு புதுப்பட்டினத்தில் 300 குடும்பங்களுக்கு, அரிசி , சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சீர்காழி பகுதியில் பெய்த44 சென்டிமீ ட்டர் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    தொடர் மழையால் வீடுகள், மீனவர்கள், இரால் குட்டைகள் அழிவு ஏற்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரண தொகை வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும்.

    நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு பருப்பு,சர்க்கரை,கோதுமை இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டும்.

    பழையார் துறைமுகத்தில் 300 விசைப்படைகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் முடங்கியு ள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்டத் தலைவர் சங்கர்,மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
    • வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    வேளாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குநர் குடவாசல் மற்றும்வ லங்கைமான் (பொ) கோ.ஜெயசீலன் லெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.

    வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள்நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால்,நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.

    துார் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரி க்கலாம் முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் (அல்லது) நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

    நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால்ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன்18 கிலோ ஜிப்சம்4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.

    போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்டபிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.

    இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    குலைநோயின் சிறு புள்ளிகள் காணப்ப ட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் பூசணக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களைஅணுகி விபரம் தெரிந்து கொள்ளவும்‌.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொடர் மழையால் நீரில் மூழ்கி வாழை, நெற்பயிர்கள் சேதமானது.
    • விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் காயாம்பட்டி வருவாய் கிராமத்தில் விவசாயிகள் நெல், தென்னை, வாழை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த வருடங்களில் பருவமழை காலத்தில் தொடர்மழை பெய்வதால் மதுரை மாவட்டத்தின் எல்லையில் உள்ள செம்மிணிபட்டி கிராமத்திற்கு உட்பட்ட கருப்பாச்சி கண்மாய் துார் வாரததால் சுமார் 25 ஏக்கருக்கு மேல் பட்டா இடத்தில் நீர்பிடிப்புக்கு உள்ளாகிறது.

    அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மற்றும் நெல் நடவு செய்தனர். தற்போது சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி வாழை பயிரிட்ட நிலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது. இதனால் சுமார் 25 ஏக்கர் வாழை, நெற் பயிர்கள் கண்மாய் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

    இதனால் வருடம் தோறும் பெருத்த நஷ்டத்தை இந்த பகுதி விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயி ராமநாதன் கூறுகையில், அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், மதுரை- சிவகங்கை என இரு மாவட்ட அதிகாரிகளும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி எங்களது கோரிக்கை களை நிறைவேற்ற முடியாமல் தட்டிக்கழிப்பதாக குற்றம் சாட்டினார்.

    • பாக்டீரியா நோய்க்கிருமிகள் பாசன நீர் மூலமாகவும், காற்று மூலமாகவும், விதைகள் மூலமாகவும் பயிரில் வேகமாக பரவும் தன்மை கொண்டது.
    • நோய் அதிகம் இருந்தால் ஸ்டெரெப்டோ மைசின் சல்பேட் 300 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைட் 1250 கிராம் ஒரு எக்டேருக்கு என்ற முறையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் தற்போது முன்கார் பருவ நெல் சாகுபடி சுமார் 1,900 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.

    தற்போது நெற்பயிர்கள் தூர்கட்டும் பருவத்தில் உள்ள நிலையில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது. இவற்றின் அறிகுறி மற்றும் கட்டுப்படுத்தல் முறைகள் குறித்து ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லி ராணி தெரிவித்துள்ளதாவது:-

    பாக்டீரியா, இலைகருகல் நடவுசெய்த 3-4 வாரத்தில் பயிரில் தோன்றுகிறது. இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் கருகியது போன்ற அறிகுறிகள் தென்படும். இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகிறது.

    இந்த பாக்டீரியா நோய்க்கிருமிகள் பாசன நீர் மூலமாகவும், காற்று மூலமாகவும், விதைகள் மூலமாகவும் பயிரில் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனை கட்டுப்படுத்திட விதைகளை விதைக்கும் முன்னர் சூடோமோனாஸ் 10 கிராம் ஒரு கிலோ நெல் விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.

    நாற்றுகளின் வேர்களை சூடோமோனாஸ் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம்.

    பரிந்துரை செய்யப்பட்ட யூரியா உரத்தினை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4: 1 எந்த விகிதத்தில் ஒரு நாள் கலந்து வைத்திருந்து வயலில் மேலுரமாக இடலாம்.

    வேப்பங்கொட்டை சாறு 5 சதம் அல்லது 3 சதம் வேப்பம் எண்ணைய் கரைசல் நோய் தோன்றும் போதும்.

    பின்னர் 10 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம். நோய் அதிகம் இருந்தால் ஸ்டெரெப்டோ மைசின் சல்பேட் 300 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைட் 1250 கிராம் ஒரு எக்டேருக்கு என்ற முறையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    மேலும் விவரங்களுக்கு தென்திருப்பேரை உதவி வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

    ஏர்வாடி பகுதியில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இவரது வயலுக்கு அருகில் ஏர்வாடியை சேர்ந்த பழனி என்பவர் நெல் சாகுபடி செய்து வருகிறார். பழனி தனது நெற்பயிருக்கு களைக்கொல்லி மருந்து தெளித்தாக கூறப்படுகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே உள்ள கரம்பத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (60). விவசாயி. இவர் ஏர்வாடி பகுதியில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இவரது வயலுக்கு அருகில் ஏர்வாடியை சேர்ந்த பழனி என்பவர் நெல் சாகுபடி செய்து வருகிறார். பழனி தனது நெற்பயிருக்கு களைக்கொல்லி மருந்து தெளித்தாக கூறப்படுகிறது.

    பழனி தெளித்த களைக்கொல்லி மருந்தால் கோவிந்தராஜன் சாகுபடி செய்திருந்த பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டு காய், பிஞ்சுகள், பூக்கள் கருகி வீணாகியதாக கூறப்படுகிறது. பருத்தி செடிகள் பாதிப்பு குறித்து கோவிந்தராஜன் மெலட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மெலட்டூர் போலீசார் பருத்தி செடிகள் பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×