search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெற்பயிர்களை காக்கும் வழிமுறைகள்-வேளாண் அதிகாரி தகவல்
    X

    நெற்பயிர்களை காக்கும் வழிமுறைகள்-வேளாண் அதிகாரி தகவல்

    • வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
    • வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    வேளாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குநர் குடவாசல் மற்றும்வ லங்கைமான் (பொ) கோ.ஜெயசீலன் லெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.

    வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள்நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால்,நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.

    துார் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரி க்கலாம் முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் (அல்லது) நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

    நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால்ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன்18 கிலோ ஜிப்சம்4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.

    போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்டபிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.

    இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    குலைநோயின் சிறு புள்ளிகள் காணப்ப ட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் பூசணக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களைஅணுகி விபரம் தெரிந்து கொள்ளவும்‌.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×