search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுரையீரல் பிரச்சினை"

    • தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
    • சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது அவசியம்.

    வாய் துர்நாற்றம் என்பது மூச்சு விடும் போது வாயில் இருந்து வெளிப்படும் ஒரு விரும்பத்தகாத வாடை அல்லது உணர்வாகும். இதற்கு பெரும்பாலும் வாய் அசுத்தம் காரணமாக இருந்தாலும் சில சமயங்களில் நோய்களை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. பல் இடுக்குகளில் அதிக உணவுத் துகள்கள் தங்குதல், மோசமான வாய் சுகாதாரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், நீர்ச்சத்து குறைபாட்டால் வாய் வறட்சி ஆகியவை பொதுவான காரணங்களாகும்.

    சர்க்கரை நோய், குடல் புண், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் (ஈறு தொற்று, சீழ்) பல் சிதைவு, தொண்டை அழற்சி, செரிமானக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை, மன அழுத்தம் ஆகியவை மருத்துவக் காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதிக மசாலா கலந்த உணவுகளை (பூண்டு, வெங்காயம்) உண்ணும் போது அவை வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

     சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறுகளில் தொற்று மற்றும் வாய் வறட்சி ஏற்படுவதாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது உடலில் குளுக்கோஸ் ஆற்றலை பயன்படுத்தாமல் கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்த முயற்சிக்கும் போது கீட்டோன்ஸ் அதிகரிப்பதாலும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் வாயில் பாக்டீரியா தொற்று அதிகரித்து வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது. சர்க்கரை நோயாளிகள் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம்:

     தினமும் இரண்டு முறை (காலை தூங்கி எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்) பல் துலக்க வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது, தினமும் நாக்கைச் சுத்தம் செய்வது அவசியம். வாய் வறட்சி ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று குளோர்ஹக்ஸிடின் கொப்பளிப்பான் பயன்படுத்தலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    • வயதுக்கு ஏற்ப நுரையீரல் திறன் குறைய வாய்ப்புண்டு.
    • நுரையீரல் பிரச்சினைகள் நுரையீரல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.

    உங்களின் வயதுக்கு ஏற்ப நுரையீரல் திறன் குறைய வாய்ப்புண்டு. இதனால் நுரையீரல் பராமரிப்பு நடவடிக்கைகளை வாழ்க்கை முறையில் இணைப்பது அவசியமாகும். நுரையீரல் நலனுக்கும் அதை பலப்படுத்துவதற்குமான சில பயிற்சிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன.

    நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குளிர் மற்றும் அதிக மாசு ஆகியவை மனிதர்களிடையே சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே காற்று மாசு அதிகமாக இருக்கும் பகுதிகள், கடும் குளிர் நிலவும் பகுதிகளில் ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற நோய்களை உடையவர்கள் உள்ளவர்கள் நுரையீரலை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

    நீங்கள் வாழும் நகரத்தில் மாசு அளவு மிதமானதாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும் வயதுக்கு ஏற்ப நுரையீரலின் திறன் குறையும்.

    புகைபிடித்தல், காற்று மாசுபாடு மற்றும் பிற நுரையீரல் பிரச்சினைகள் நுரையீரல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். இதற்கு சுவாசப் பயிற்சி செய்வதால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் மோசமடைவதைத் தடுக்க முடியும்.

    உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்த சில பயனுள்ள பயிற்சிகள்.

     ஆழ்ந்த சுவாசம்

    இந்த சுவாச பயிற்சியைத் தொடங்க அமர்ந்தோ அல்லது படுத்த நிலையிலோ இருங்க வேண்டும். அதன் பிறகு ஒரு கையை மார்பு பகுதியிலும் மற்றொரு கையை வயிற்றிலும் வைக்கவும், அடுத்ததாக ஆழமாக மூச்சை இழுத்து அடிவயிற்றை விரிவுபடுத்த முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து மெதுவாக மூச்சை வெளியே விட்டு உங்கள் வயிற்றை சுருங்க வைக்கும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து ஆழ்ந்த சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

     சுருக்கப்பட்ட உதடுகள்

    சில விநாடிகளுக்கு மூக்கின் வழியாக காற்றை உள்வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு உதடுகளை சுறுக்கி சில விநாடிகளுக்கு மூச்சை வெளிவிடவும். இந்த எளிய பயிற்சி உங்கள் சுவாசத்தை ஒழுங்குபடுத்தவும், காற்றுப்பாதைகளை நீண்ட நேரத்திற்கு திறந்து வைத்திருக்கவும் உதவுகிறது.

    மூச்சு தக்கவைப்புடன் ஆழ்ந்த சுவாசம்

    உங்கள் மூக்கு வழியாக காற்றை ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். சில நிமிடங்களுக்கு மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இதன் பிறகு வாய் வழியாக காற்றை மெதுவாக வெளியிடவும். இந்த பயிற்சி நுரையீரல் திறனை மேம்படுத்த உதவுகிறது

    சுவாச முறையில் மாற்று

    முதுகெலும்பு நேரான நிலையில் இருக்கும்படி உட்கார வேண்டும். பின்னர் உங்கள் வலது கட்டைவிரலை பயன்படுத்தி மூக்கின் வலது துவாரத்தை மூடவும். தற்போது மூக்கின் இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும். நன்கு கவனியுங்கள் மூச்சை உள்வாங்கிய பிறகு மூக்கின் இடது துவாரத்தை வலது கையின் மோதிர விரலால் மூடி மூக்கின் வலது துவாரத்தை திறக்கவும். உங்கள் வலது துவாரம் வழியாக மூச்சை வெளிவிடவும். இது பயிற்சிக்காக மட்டுமே...

    ஆனால் எப்போதும் வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளிழுத்து அதை மூடி, இடது துவாரம் வழியாக வெளிவிடவும். இந்த சுழற்சியை பல முறை செய்யவும்.

     ரிப் ஸ்ட்ரெட்ச்

    இந்த பயிற்சியை செய்ய உங்கள் இடுப்பில் கைகளை வைத்து நிமிர்ந்து நிற்கவும். உங்கள் நுரையீரல் முழுமையாக நிரம்பும் வரை காற்றை மெதுவாக உள்ளிழுக்கவும். தற்போது சுமார் 20 விநாடிகளுக்கு மூச்சை பிடித்து வைத்திருங்கள். படிப்படியாக மூச்சை வெளிவிடவும். தேவைக்கேற்ப மீண்டும் பயிற்சி செய்யவும்.

     மூட்டு பயிற்சி

    இது உடலின் மேல் மற்றும் கீழ் மூட்டு தசைகளுக்கான பயிற்சியாகும். உங்கள் திறனுக்கு ஏற்றவாறு பளுதூக்குதலும் இதில் அடங்கும். டிரெட்மில் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது ஆகியவை பயனுள்ள மூட்டு பயிற்சிகளாகும். இந்த பயிற்சிகளை வாரத்திற்கு மூன்று முறையாவது தொடர்ந்து பன்னிரண்டு வாரங்களுக்கு செய்வதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

    ×