search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணம் அறிவிப்பு"

    • தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி 3 பேரின் உடல் பாகங்களை மீட்டனர்.
    • 3 பேரின் குடும்பத்துக்கும் இன்று ரொக்கமாக தலா ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்துள்ள கீழஉப்பிலிக்குண்டுவில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டியை சேர்ந்த கந்தசாமி (வயது 47), தென்காசி மாவட்டம் வடமலாபுரத்தை சேர்ந்த பெரியதுரை (25), சிவகிரி அருகன்குளத்தை சேர்ந்த குருசாமி (60) ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள்.

    தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி 3 பேரின் உடல் பாகங்களை மீட்டனர். பின்னர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தமழக அரசு சார்பில் விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இறந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு கல்குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி 3 பேரின் குடும்பத்துக்கும் இன்று ரொக்கமாக தலா ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்ததும் அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிசிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் இன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் பாக்கியராஜ் (62), ஞானம்மாள் (60), ராணி (40), சின்னபாண்டி (40) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.

    இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிசிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×