search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிரஜ் சோப்ரா"

    • 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.
    • ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார்.

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தற்போது உலக தடகள போட்டியிலும், தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார். ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார். செக் குடியரசை சேர்ந்த ஜான் ஜெலன்சி, நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் தார்கில்சென் ஆகியோர் ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இருந்தனர்.

    ஜெலன்சி 1992, 1996, 2000 ஒலிம்பிக்கிலும், 1993, 1995, 2001 உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், தார்கில்சென் 2008 ஒலிம்பிக்கிலும், 2009 உலக தடகளத்திலும் தங்கம் வென்று இருந்தனர்.

    • 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றார்
    • உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர்

    ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

    அவருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் "நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர்கள் என்று, இந்திய விளையாட்டு சாதனைப் பக்கத்தில் மேலும் தங்க பக்கத்தை இணைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தில் ''உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல் விளையட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ×