search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியமன ஆணை"

    • வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பெரும் வளர்ச்சியில் இருக்கும் என மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
    • மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு பாதுகாப்பாக செயல்படுவதாகவும் பெருமிதம்

     கோவை.

    இந்தியா முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு ேவலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் இன்று 9-வது கட்டமாக 51 ஆயிரத்து 56 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    தபால்துறை, தகவல் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, நிதிசேவைகள் துறை, நுகர்வோர் துறை, பொது கல்வி துறை உள்ளிட்ட துறைகளில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    விழாவுக்கு பின் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரசு வேலை என்பது எல்லோருக்கும் ஒரு கனவு. அதனை நிறைவேற்றும் வகையில் 10 லட்சம் பேருக்கு அரசு துறையில் வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.

    அதன்படி தொடர்ந்து பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    வந்தே பாரத் ெரயில் சேவை, சந்திராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் 500 கம்பெனிகள் மட்டுமே இருந்தன. தற்போது கம்பெனிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. 1 லட்சம் கம்பெனிகள் தற்போது உள்ளது.

    இவற்றில் பெரும்பாலான கம்பெனிகளில் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களே சி.இ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்கள். வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பெரும் வளர்ச்சியில் இருக்கும்.

    இலங்கை கடற்படை தொடர்ந்து நமது நாட்டின் மீனவர்கள் மற்றும் படகுகளை பிடித்து வருகின்றனர். அதனை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் பேசி மீனவர்களையும், படகுகளையும் மீட்டு வருகிறது.

    மீனவர்களுக்காக புதிய அமைச்சகத்தையே பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். பி.எம்.எஸ் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களுக்கு படகுகளில் பாதுகாப்பு உபகரணங்களுக்காக ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், கிருஷ்ணா கல்லூரி தாளாளர் மலர்விழி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பயிற்சி சான்றிதழ்-பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • பேராசிரியர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் காட்டாம்பூரில் உள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் கேட்டரிங், சர்வே, நர்ஸிங், தையல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல்வேறு பாடப் பிரிவுகள் மத்தியரசின் தீனதயாள் உபத்தியாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    இக்கல்லூரியில் பயின்ற 30பேர் கொண்ட 9 திறன் பயிற்சி குழுக்களாக 270 பேருக்கு பயிற்சி சான்றி தழும், 10 பேருக்கு பணி நியமன உத்தரவும் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழா விற்கு கல்லூரி தாளாளர் காசிநாதன் தலைமை வகித்தார். பால கிருஷ்ணன், சுரேஷ் பிரபாகர், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி தொழில் துறை கூடுதல் ஆணை யாளர் ஜெயபாலன் மாண வர்களுக்கு பயிற்சி சான்றி தழ் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி மாணவர்கள் தொழில்துறை கல்விகளை முன்னெடுத்து அக்கறையுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் எனும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    • நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
    • மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.

    இந்த திட்டத்தின் கீழ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி வழங்கினார்.

    பணி நியமன முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கும் உறவு முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    வேலை வழங்கும் (ரோஸ்கர் மேளா) திட்டம் என்பது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தேசிய வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதுமாகும். இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதே நேரத்தில் நாடு முழுவதும் 45 இடங்களில் மோடியின் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டு பணி ஆணைகளை மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்கள்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தபால் துறை ஊழியர், தபால் துறை ஆய்வாளர், ரெயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்காளர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமைக் காவலர், உதவி கமாண்டன்ட், பள்ளி, கல்லூரி முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய 3 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.

    சென்னையில் அஞ்சல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி தி.நகர் வாணிமகாலில் நடந்தது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்று பணி ஆணைகள் வழங்கி ஆற்றிய உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    அதை தொடர்ந்து 11.05 மணிக்கு சென்னை மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 247 பேருக்கு வேலைக்கான பணி ஆணைகளை நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

    இவர்களில் 188 பேர் அஞ்சல் துறையிலும், ரெயில்வே துறையில் 60 பேரும், பாதுகாப்பு மற்றும் கல்வித்துறையில் தலா 15 பேரும், பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறையில் 8 பேரும், சுகாதாரத்துறையில் ஒருவருக்கும் வேலை வழங்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் பிரதமரின் திட்டம் பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. வேலைவாய்ப்பு பெற்றவர்களுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் முதன்மை அஞ்சல்துறை தலைவர் சாருகேசி, அஞ்சல் மற்றும் வணிக மேம்பாட்டு பிரிவின் தலைவர் ஸ்ரீதேவி, சென்னை மண்டல இயக்குனர் சோம சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருச்சி ரெயில்வே மகாலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டு திருச்சி மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 127 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 180 பேர் தபால் துறையிலும் 20 பேர் ரெயில்வே துறையிலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.

    சென்னையில் 247 பேர், திருச்சியில் 127 பேர், மதுரையில் 180 பேர் என மொத்தம் தமிழகத்தில் 574 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    • பணிக்காலத்தில் இறந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • இந்த ஆணையை ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகமாக இருந்தன.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூ டிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற மனுக்கள் திரும்ப திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகில், பரமக்குடி வட்டம், கொடிக்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 21.5.2018 அன்று பணியிடையே இறந்த மாரிமுத்து என்பவரது மனைவி கலையரசிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி யிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும், முதுகுளத்தூர் வட்டம், புளியங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 6.12.2017 அன்று பணியிடையே இறந்த சதீஸ் என்பவரது மனைவி ஜெயசிந்தியாவிற்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையி னையும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×