search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவக்கிரஹ பரிகாரம்"

    • சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, சிறப்பு அபிஷேகம்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூரில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆடி மாதம் வரும் சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில்இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    இதற்காக நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சணை தொடங்கியது. இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, நவக்கிரஹ பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை தொடர்ந்து 5.20 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோவில் முன்பு உள்ள சுரபி நதியில் நீராடி தங்கள் பரிகார பூஜைகளை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×