search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்மாழ்வார் விருது"

    • “நம்மாழ்வார் விருதுடன்” பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
    • கோ.சித்தர், மகர் நோன்புச்சாவடி, தஞ்சாவூர் மாவட்டம் முதல்பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2023-2024-ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான "நம்மாழ்வார் விருதுடன்" பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

    கோ.சித்தர், மகர் நோன்புச்சாவடி, தஞ்சாவூர் மாவட்டம் முதல்பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம், கே.வெ.பழனிச்சாமி, பொங்கலூர், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் மற்றும் கு. எழிலன், அச்சுக்கட்டு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் பரிசாக ரூ.1.00 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மைத்துறை அதிகாரி தகவல்
    • மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதால் நஞ்சற்றவிளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட வே ளாண்மை இணை இயக்கு னர் வாணி (பொறுப்பு) வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம் பூச்சிக் கொல்லி ஆகியவற்றைத் தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்ப டுவதோடு, மண வளத்தை யும பாது காக்கும் சாகுபடி முறையாகும்.

    அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணு யிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச் செய்து அதில் உள்ள ஊட்டச் சத்துக்களை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன, நுண்ணுயிர்கள் ஊட்டச் சத்துக்களை மொதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதால் நஞ்சற்றவிளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

    மக்களின் உடல் நலத்தை காக்கவும் மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும் நீடித்த நிலையான வேளாண் மையினை உறுதிபடுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 14-ந் தேதி வெளியிட்டார். இயற்கை விவசாயம் செய்யும் தன் னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2023-2024-ம் ஆண்டு பட்ஜெட்டில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி மற்ற விவசாயி களையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழக்கப் படும் என அறிவிக்கப்பட்டது.

    நம்மாழ்வார் விருது பெற விம்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும், குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும்.

    வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்- அமைச்சர் வழங்க உள்ளார். முதல் பரிசு ரூ.2,5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன் றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப் புள்ள பதக்கம் வழங்கப்ப டும்.

    விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான வழிமுறைகள் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வே ளாண்மை உதவி இயக்கு னர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள லாம். குமரி மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்க லாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விருதுநகரை சேர்ந்தவர்கள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் இயற்கை விவசாய சாகுபடி யில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப் படுவதோடு மண்வளத்தை யும் பாதுகாப்பது விவசாய சாகுபடியாகும்.

    வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணு யிர் கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச்செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன. நுண்ணுயிர் கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால், மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

    மக்களின் உடல் நலத்தை காக்கவும், மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை உறுதி படுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

    இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, மற்ற விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.

    நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக்கட்ட ணம் ரூ.100 செலுத்த வேண் டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டி ருக்க வேண்டும். மேலும், அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்க உள்ளார். முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 இலட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.

    விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
    • விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100

    திருவண்ணாமலை:

    இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப் படுத்த, 2023-24-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், இயற்கை வேளாண் மையில் சிறந்து விளங்கும்.

    விவசாயிகளுக்கு 'நம்மாழ்வார் விருது' வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் ஹர குமார் கூறியதாவது:-

    நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ் நெட்' இணையதளத்தில் வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.

    விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும்.

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    இதில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினத்தில் முதல் அமைச்சரால் வழங்கப்படும்.

    முதல் பரிசு ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 2-ம் பரிசு ரூ.1.50 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 3-ம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய பதக்கம் வழங்கப்படும். நம்மாழ்வார் விருதுக்கான விவரம் மற்றும் விண்ணபிக்கும் வழிமுறைகளை, வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி தெரிந்து கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    ×