search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பணம் கொள்ளை"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
    • கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அவரது மனைவியும் மகனும் வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தனர்.

    நேற்று மாலை அவர்கள் வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் பீரோவை உடைத்து 42 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த சூரை கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 45) விவசாயி. நேற்று காலை உமாபதி, அவரது மனைவி, பிள்ளைகளுடன் வீட்டை பூட் டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றார். மதியம் வீட் டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் நிலத்திற்கு சென்றுள்ளனர்.

    மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உமாபதி வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சுமார் 9 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    நகை திருடு போன பீரோ, உடைக்கப்பட்ட கதவில் இருந்த மர்ம கும்பலின் கைரேகை களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க செயின், டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றிருந்தனர்.
    • இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள் (வயது50). பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மாரியம்மாள் வீட்டை பூட்டி விட்டு கடந்த 8-ந்தேதி காவனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார்.

    உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க செயின், டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றிருந்தனர்.

    இதுகுறித்து மாரியம்மாள் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மயக்க மருந்து தெளித்து துணிகரம்
    • முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் கைவரிசை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே கெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 48), விவசாயி. இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன் கள் உள்ளனர். இவரது வீட் டில்பெற்றோர் உள்பட 6 பேர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கதவுகளை பூட்டிவிட்டு தூங்க சென்ற னர். பாஸ்கரன், மனைவி மற் றும் அவரது பிள்ளைகள் ஒரு அறையிலும் பெற்றோர் ஹாலிலும் தூங்கிக்கொண்டி ருந்தனர்.

    அதிகாலை 4 மணிக்கு பாஸ்கரன் மயக்க நிலையில் எழுந்தார். அவரது பெற்றோர் கண் விழிக்காததால் அவர் களை எழுப்ப முயன்றார். அவர்களும் மயக்கமாக உள் ளது என கூறினர். வீட்டின் பின்பக்கம் உள்ள கதவு பூட் டிய நிலையில் இருந்தது. அந்த கதவு திறக்கப்படவில்லை. ஆகவே முன்பக்க கதவைத் திறந்து வெளியே, வந்து பின் பக்க கதவைத் திறந்தார். பின் னர் பெற்றோர் படுத்துக் கொண்டிருந்த எதிர் அறை திறந்து கிடந்ததை பார்த்தார்.

    உடனே. அனைவரையும் தட்டி எழுப்பி உள்ளே சென்று பார்த்தபோது அறை யில் இருந்த பீரோ உடைக்கப் பட்டு அதில் வைக்கப்பட்டி ருந்த நகைபெட்டியையும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வைத்தி ருந்த பணப்பையையும் காண வில்லை. மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் அருகில் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மணி என்பவரது வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம கும்பல் வீட்டின் கதவுகளை உடைக்க முடியாமலும் பக் கத்து வீட்டில் இருந்த பன்னீர் செல்வம் என்பவரின் வீட்டில் உள்ளே சென்று பூஜை அறை யில் இருந்த அம்மன் தாலி சரடை திருடி செல்லாமல் சென்றுள்ளனர்.

    மேலும் கெங்கநல்லூரில் 4 வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பாஸ்கரன், மணி, பன்னீர் செல்வம் ஆகியோர் அணைக் கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநா வுக்கரசு, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவா சன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வந்து கைரேகை களை பதிவு செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    பாஸ்கரன் வீட்டில் நகைப் பெட்டியில் இருந்த 42 பவுன் நகைகளும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். மேலும் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.7 லட் சம், ரூ.3 லட்சம், ரூ.1 1/2லட்சம் உள்ளிட்ட 3 ரொக்க பத்திரங் களும் திருட்டு போய் உள் ளது. முன்பக்க வாசல் வழி யாக மர்ம நபர்கள் வீட்டுக் குள் வந்து தூங்கி கொண்டி. ருந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்துவிட்டு பின் பக்க வாசல் வழியாக திருடி சென்று உள்ளனர்.

    பன்னீர்செல்வம் என்பது வீட்டில் திருடும்போது 2பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் கெங் கநல்லூர் பகுதியில் இருக்கும் 4 வீடுகளில் திருட்டு நடந்துள் ளது. ஒரே இரவில் 7 வீடுக ளுக்கு மேல் 8 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளனர். நள்ளி ரவு 12 மணி முதல் 2 மணி வரை இந்த கொள்ளை சம்ப வம் நடந்திருக்கலாம். '

    இவ்வாறு அவர்கள் கூறி

    னர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சோதனைக்கு வந்தவர்கள் போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பதை உறுதி செய்தனர்.
    • வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பழைய குண்டூர், பிரகதி நகரை சேர்ந்தவர் எர்ரம் செட்டி கல்யாணி. தொழிலதிபரான இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் 3 நபர்கள் டிப் டாப் உடை அணிந்து காரில் வந்தனர்.

    அவர்கள் கல்யாணி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டனர். பின்னர் கல்யாணி வீட்டில் இருந்தவர்களிடம் வருமான வரித்துறையில் இருந்து வருகிறோம்.

    உங்கள் வீட்டில் ஏராளமான நகை பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    உங்கள் வீட்டில் சோதனை செய்வதற்காக வந்துள்ளோம் எனக் கூறி ஒவ்வொரு அறையாக சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வீட்டில் இருந்த ஏராளமான சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ.50 லட்சம் பணம், 50 பவுன் தங்க நகைகளள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட நகை பணத்திற்கு உண்டான ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பொருட்களை மீட்டு செல்லுமாறு தெரிவித்துவிட்டு அவசர அவசரமாக காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

    சோதனைக்கு வந்தவர்கள் போலி வருமானவரித்துறை அதிகாரிகள் என தாமதமாக உணர்ந்த கல்யாணி இதுகுறித்து குண்டூர் பழைய போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சோதனைக்கு வந்தவர்கள் போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பதை உறுதி செய்தனர்.

    மேலும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்கையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதனால் சோதனைக்கு வந்து சென்ற மர்மநபர்கள் யார் என கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    சினிமா பாணியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர்.

    • தினேஷ் கீரப்பாக்கம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார்.
    • கோபிநாத் என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கீரப்பாக்கம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் நகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். தங்க நகை என நினைத்து கவரிங் நகைகளையும் அள்ளி சென்று உள்ளனர்.

    இதேபோல் கீரப்பாக்கம் துலுக்காணத்தம்மன் தெருவை சேர்ந்த கோபிநாத் என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    • புலிக்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடையில் இருந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த புலிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்ராஜ். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடையில் இருந்தார்.

    பின்னர் மதியம் வீட்டிற்கு சென்றபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கிராம் தங்கம், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • நள்ளிரவில் மர்மநபர் முகத்தை துணியால் மூடியபடி வங்கியை திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

    கடந்த 20-ந்தேதி வங்கியில் வழக்கமான பணிகள் நடந்தது. மாலையில் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை மூடி விட்டுச் சென்றனர்.

    நேற்று காலை வங்கி மேலாளரான சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 32) என்பவர் வங்கியை திறக்க வந்தார். அப்போது வங்கியின் பூட்டு திறந்து இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பணம் மற்றும் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரும் திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.2 லட்சத்து 91 ஆயிரம் ரொக்கப்பணமும், 18 பவுன் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து மேலாளர் சுபாஷ்சந்திர போஸ் அன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வங்கிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வங்கியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் மர்மநபர் முகத்தை துணியால் மூடியபடி வங்கியை திறந்து கொண்டு உள்ளே செல்கிறார். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளியே செல்கிறார்.

    இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளையன் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    வங்கியின் சாவி மேலாளர் மற்றும் அக்கவுண்டன்ட் ஒருவரிடம் மட்டுமே இருந்துள்ளது. கொள்ளையடித்த நபர் பூட்டை உடைக்காமல் சாவியை வைத்து பூட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதனால் அந்த நபரிடம் சாவி எப்படி சென்றது, கள்ளச்சாவி போட்டு அந்த நபர் திருடிச்சென்றாரா அல்லது வேறு எதுவும் மர்மம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வாங்கி வந்ததாக கூறி டாக்டரிடம் லட்டை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது.
    • லட்டு சாப்பிட்ட சில நிமிடங்களில் டாக்டர் மயங்கிவிட்டார்.

    திருப்பதி:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆயுர்வேத டாக்டர். இவர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்வதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ்சில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணித்த இளம்பெண் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இதன் மூலம் இளம்பெண்ணுடன் அறிமுகம் ஆனார்.

    தொடர்ந்து அந்த பெண் லாட்ஜூக்கு செல்லலாமா? என அழைத்துள்ளார். இதையடுத்து டாக்டரை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு லாட்ஜூக்கு இளம்பெண் அழைத்து சென்றார்.

    அப்போது அந்த இளம்பெண் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வாங்கி வந்ததாக கூறி டாக்டரிடம் லட்டை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது. இதனால் லட்டு சாப்பிட்ட சில நிமிடங்களில் டாக்டர் மயங்கிவிட்டார்.

    மயக்கம் தெளிந்து எழுந்தபோது, அவரிடம் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு இளம்பெண் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து டாக்டர் ஸ்ரீகாளஹஸ்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட லாட்ஜூல் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது, அந்த இளம்பெண் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் நகைகளை கொள்ளையடித்து தப்பிய பெண்ணை தேடி வருகின்றனர்.

    • பொருட்கள் எரிந்து சேதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் புதுத்தெருவில் உள்ள கந்தசாமி என்பவரது வீட்டில் அவர்களது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த 6 சவரன் நகை, ரூ.14,000 ஆயிரம் ரூபாய் எரிந்து நாசமானது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விசாரணையில் நகை, பணத்தை திருடிவிட்டு வீட்டிற்கு தீ வைத்துவிட்டு கும்பல் தப்பி சென்றது தெரியவந்தது.

    வீட்டுக்கு தீ வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே தெருவில் 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • வீட்டில் இருந்த நகை பணம் மாயமானதை கண்டு வானூர் போலீசில் புகார் செய்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள புளிச்சப்பள்ளம் மேட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். அவரது மனைவி ஜெயம் (வயது 55). நேற்று இரவு கணவன்-மனைவி 2 பேரும் வீட்டில் தூங்கினர்.

    அப்போது மர்ம நபர்கள் அங்கு வந்தனர். வீட்டுக்கதவை கடப்பாரையால் நெம்பி உள்ளே சென்றனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஜெயம் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல்போட்டார். உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து இருளில் ஓடி மறைந்தனர்.

    சிறிதுநேரம் கழித்து அதே பகுதியில் உள்ள வேலு என்பவரது வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த ரூ.5 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதேபோல அந்த தெருவில் ராஜன் வீடு உள்பட 3 வீடுகளிலும் நகை பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

    ஒரே தெருவில் 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் இருந்த நகை பணம் மாயமானதை கண்டு வானூர் போலீசில் புகார் செய்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

    அப்போது ஜெயம் வீட்டில் கிடந்த கடப்பாரையை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது.
    • வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகநாதன் (59). இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா (35).

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெகநாதன் வீட்டில் இருந்தார். அப்போது இரவு 8.30 மணி அளவில் இவரது வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்த படி வந்தனர். அவர்கள் கையில் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி யசோதா ஆகியோர் கத்தி கூச்சலிட முயன்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து அவர்கள் பயத்தில் அமைதியானார்கள்.

    பின்னர் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

    தொடர்ந்து ஜெகநாதன் அவரது மனைவி யசோதா ஆகியோர் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் வந்து சென்றது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து ஜெகநாதன் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×