search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொல்லியல்"

    • பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
    • நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் குமணன் தொழு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான, செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வருசநாடு குமணன்தொழு அருகில் அருவா தீட்டுப்பாறை பகுதியில், மொக்கை என்பவரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் 5 க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பல கல்வட்டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.

    குமணன் தொழுவிலிருந்து வெள்ளையம்மாள்புரம், சின்னமனூருக்கு கால்நடையாக செல்வதற்கு பழமையான பாதை ஒன்று இவ்வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக்கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

    பெருங்கற்காலம் தொட்டு தற்காலம் வரை தீட்டுக்கற்களில் அருவா உள்ளிட்ட ஆயுதங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப்புக்குரியது.

    வருசநாட்டுப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன.

    • குமரிக்கல்பாளையம் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருக்கிறது.
    • 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழி, பல 100 ஆண்டுகளுக்கு முன் உள்ளவைகளை பார்வையிட்டனர்.

    ஊத்துக்குளி,அக்.9-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா, காவுத்தம்பாளையம் பஞ்சாயத்தில் உயர்மின் கோபுர திட்டத்தின் கீழ் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குமரிக்கல்பாளையம் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருப்பதால் அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் மத்திய தொல்லியல் துறை திருச்சி கண்காணிப்பாளர் காளிமுத்து மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இங்குள்ள 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழி, பல 100 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த இரும்பு ஆலைக்கழிவுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

    இது குறித்து களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், ஒரு வாரத்துக்குள் தொல்லியல் ஆய்வுக்குழுவினருடன் முகாமிட்டு, அங்குள்ள தொல்லியல் எச்சங்கள் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். இங்குள்ள தொல்லியல் எச்சங்களை பார்க்கும் போது இது, கீழடி, ஆதிச்சநல்லுார் நாகரித்துக்கு முற்பட்டதாக கூட இருக்கலாம் எனவும் கணிக்கின்றனர்.

    இந்த இடத்தை விரிவாக ஆய்வு நடத்தும் போது தமிழர்களின் பல மறைக்கப்பட்ட பாரம்பரியம், கலாசார தகவல்கள் வெளிவர வாய்ப்புண்டு என்றார்.

    • நாகையில் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று தகவல் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும்.
    • 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அண்மையில் நாகப்பட்டினம் வருகை தந்து, சூடாமணி விகாரம் இருந்த நாகை நீதிமன்ற வளாகம், 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், பழைய கோட்டாட்சியர் அலுவலகம், நாகை அருங்காட்சியகம், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டு 3 நாள்கள் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் அந்த ஆய்வு முடிவுகளை அறிக்கையாக அளித்துள்ளனர். அறிக்கையின் முதல் பிரதியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணா வழங்கினார்.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்தித்து, நாகையில் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று தகவல் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

    • வெம்பக்கோட்டை அருகே தொல்லியல் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
    • தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35 ஆண்டு களுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

    இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடுவை மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணி யப்படும் பதக்கம், பெண் சிற்பங்கள், சங்குவளை யல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதையடுத்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

    இங்கு கண்டெ டுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இங்கு கோடை விடுமுறையில் சுற்றுலா பயணி கள் மற்றும் பொது மக்கள் தொல்பொருட்களை பார்வையிட்டு தொன்மை யான மனிதர்களின் வர லாற்றை அறியும் வகையில் தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட் டுள்ளது.

    அகழ்வாராய்ச்சி தளத்தில் காட்சிப்படுத்து வதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் கண்காட்சி தொடங்க உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

    ×