search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்க விழா"

    • பள்ளியில் 7-ம்வகுப்பு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மறைமுகத்தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
    • பதவி பெற்ற மாணவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-2024 ம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. முன்னதாக மாணவர் மன்றத்திற்கான புதிய நிர்வாகிகளை பள்ளியில் 7-ம்வகுப்பு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மறைமுகத்தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.

    பள்ளியின் மாணவர் மன்ற தலைவர்களாக கியோன் அபிஷேக், தர்ஷினி , துணைத்தலைவர்களாக ஹியக் நரசிம், கீர்த்தனா, விளையாட்டுத்துறையின் செயலாளராக யதுகிருஷ்ணா ஆகியோர் பதவியேற்று கொண்டனர். மேலும் பல்வேறு அணியின் செயலர்கள், துறையின் செயலர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரிய பொறுப்பாளர்கள் ஆகியோர் பொறுப்பேற்று க்கொண்டனர்.

    பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு ரோட்டரி அமைப்பின் முன்னாள் ஆளுநர் இளங்குமரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்து மாணவர்களிடையே தலைமைப்பண்பினால் கிடைக்கும் பெருமை பற்றியும், ஒற்றுமையின் பலன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.

    முடிவில் பள்ளியின் மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோருடன் இணைந்து பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • மாணவ கண்மணிகள் தங்கள் கடமைகளை உணர்ந்து நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
    • எதிர்காலத்தில் சிறப்பா னதொரு கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள மாதம்பட்டியில் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 2023- 2024 ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் லட்சுமி அறக்கட்டளையின் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் தலைமை வகித்தார். உழைப்பே உயர்வு என்றும் முயற்சி திருவினையாக்கும் என்பதில் சிறிய ஐயமில்லை ஆகவே மாணவ கண்மணிகள் தங்கள் கடமைகளை உணர்ந்து நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    லட்சுமி அறக்கட்டளையின் செயல் இயக்குனர் மாதுளம் பூ தான் வழங்கிய முன்னுரையில் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தால் உண்டாக்கும் பயன்கள் பற்றி வேலைவாய்ப்பு குறித்து தெளிவாக பேசினார் .

    அறக்கட்டளையின் இயக்குனர் உதயகுமார் மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் சிறப்பானதொரு கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

    மேலும் தொழில்நுட்ப படிப்பின் நன்மைகள் மற்றும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் பேராசிரியர்களின் அனுபவங்கள் ஆகியவை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் கல்லூரியின் முதல்வர் சரவணன் அவர்கள் வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதலாம் ஆண்டு துறை தலைவர் கவிதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் விரிவுரையாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இக்கல்லூரியின் பயிலும் மாணவர்களுக்கு ஹாஸ்டல் மற்றும் கேண்டீன் வசதிகள் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • தொடக்க விழா நிகழ்ச்சி ஊட்டி ஏ.டி.சி.யில் நடந்தது.
    • ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்

    ஊட்டி,

    கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், ஊட்டி நகர ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி ஊட்டி ஏ.டி.சி.யில் நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். தி.மு.க துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.இராசா கல்வெட்டினை திறந்து வைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தை தொடங்கி வைத்தார்,

    சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்தார். ்மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோவன், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, தொ.மு.ச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், ஆட்டோ தொ.மு.ச. தலைவர் ஸ்டான்லி, துணை தலைவர்கள் பாபு, நாகர்ஜூணன், துணை செயலாளர்கள் மைக்கல் ராஜ், பிரான்சிஸ்சேவியர், பொருளாளர் சிவானந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், தியாகு, முஜி, ஊட்டி நகர துணை செயலாளர்கள் இச்சுபாய், கிருஷ்ணன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், பிரியா, மேரி பிளோரீனா, ஜெகதீஷ் மற்றும் கட்சி நிர்வாகி்கள் ஆட்டோ பாபு, குமார், சுரேஷ், ஹென்றி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பாபி, பிரதாப், மேத்யூ,. ராகுல், உத்ரேஷ், உதயகுமார், மணிகண்டன், உமாசங்கர், அசோக், கிரன், வினோத், பிரவீன், தொ.மு.ச நிர்வாகிகள் ஆனந்தன், முத்துகுமார், சீனிவாசன், அமிர்தராஜ், சந்திரன், ரகுராம், சிவசண்முகம், கணேஷ், பாண்டியன், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    முடிவில் ஊட்டி நகர ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பிரபு சகாயநாதன் நன்றி கூறினார்.

    • புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
    • திருப்பூரில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிலில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட தண்ணீர் சுத்திகரிப்பு (ஆர்.ஓ.) டீலர்ஸ் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டு சங்க அலுவலகம் திருப்பூர் ஓம் சக்தி கோவில் எதிரே அமைந்துள்ளது. சங்க அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். தலைவராக ராஜகோபால், துணை தலைவராக குணமுகிலன், செயலாளராக மணிகண்டன், துணை செயலாளராக முகமது ஷரீப், பொருளாளராக நவநீதராஜா, துணை பொருளாளராக ஷக்கீர், நிர்வாகிகள் செய்யதப்ப நிஜாம், சங்கர் ஆகியோர் பொறுப்பேற்றார்கள்.

    கூட்டத்தில், திருப்பூரில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிலில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. தொழிலை மேம்படுத்தவும், நெறிமுறைப்படுத்தவும், போலி உதிரிபாகங்கள் மற்றும் போலி நிறுவனங்களை தடுக்கவும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உதிரிபாகங்களுக்கான விலையை நிர்ணயம் செய்வது, உறுப்பினர்களுக்கு சங்கத்தின் சார்பில் சர்வீஸ் பை வழங்குவது, சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை, தொழில் சார்ந்த உதவிகளை வழங்குவது, இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்ப்பது, உறுப்பினர்களிடம் சந்தா வசூலிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
    • தாய்மார்களின் விபரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகப்பேறு இறப்பு மற்றும் சிசு மரணம் ஆகியவற்றை முற்றிலும் வராமல் தடுக்கும் விதமாக 24 மணி நேர சேவை மையம் கடலூர் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் வம்சம்கடலூர் என்ற திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பொதுப்பணி த்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா.இராஜேந்திரன், இராதாகிருஷ்ணன், சிந்தனைச் செல்வன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. 24 மணி நேர மகப்பேறு சேவை மையத்திற்கென பிரத்தியோகமாக தொலைபேசி எண்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி தொலைபேசி எண்கள் 7598512042, 7598512045 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்திய மருத்துவ சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க உறுப்பினர்களிடம் தங்களது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களின் விபரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    • நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
    • ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் இதற்கான துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். இளமுருகு வரவேற்றார். உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணி, உடுமலை ரோட்டரி சங்க தலைவர் சத்தியம் பாபு உடுமலை கட்டுநர்வல்லுனர் சங்க தலைவர் ரவி ஆனந்த் ஆகியோர் பயிற்சி குறித்து பேசினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தான் படிக்கும் காலங்களில் போட்டி தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விளக்கி பேசினார். நிறைவாக லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நன்றி கூறினார். ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த நீட் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் நூலகம் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இது தவிர பள்ளி மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் வகையில் ஞாயிறு தோறும் இலவச ஓவியம், சிலம்பம், பேச்சுப்போட்டி, யோகா ஆகியவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    • விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
    • . இத்திட்டத்தை தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தொடங்கி வைத்தார்.

     விழுப்புரம்:

    விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தை தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி கம்சு தொடங்கி வைத்தார். முன்னதாக அனைவரையும் மக்கள் தொடர்பு ஆய்வாளர் தங்க ராஜ் வரவேற்றார். தலைமை அஞ்சலக உதவி அதிகாரிகள் சாதிக்பாஷா , ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மத்திய அரசு அறிவித் துள்ள பிரத்யேக சிறு சேமிப்பு திட்டத்திற்கு, 'மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் மகளிர் அல்லது சிறுமிகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். மகிளா சேமிப்பு திட்டத்தின் கீழ் மகளிர் அல்லது சிறுமிகள் பெயரில் மட்டுமே சிறுசேமிப்பு கணக்குகள் தொடங்க முடியும். மேலும்தொடர்ந்து, 2025-ம் ஆண்டு வரும் வரை, இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சேமிப்பு பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் வசதியும் உள்ளது. நிகழ்ச்சியில் முதலீட்டாளர்கள் அமுதா, பிரியா விழுப்புரம் மாவட்ட சிறப்பு சிறுசேமிப்பு முகவர் மதுரை வீரன் மற்றும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • ஆனந்த நகரில் நுண்ணுயிர் செயலாக்க மைய பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ஓசூர்,

    தூய்மை பாரத திட்டம் (யு), 2.0 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பில் ஆனந்த நகரில் நுண்ணுயிர் செயலாக்க மைய பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் மம்தா சந்தோஷ், மாநகராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். பல்லடம் தமிழ் சங்கத்தலைவர் ராம். கண்ணையன், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். போதை ஒழிப்பு மன்றத்தை துவக்கி வைத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேசுகையில்:-

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வரும் காலத்தில் போதைப் பொருள் இல்லா தமிழகமாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். இந்த போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கடைப்பிடித்து போதைப் பொருள் இல்லா தமிழகமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் அண்ணா துரை, பாலசுப்பிரமணியம், தமிழ்ச்சங்க செயலாளர் கருப்புசாமி, மற்றும் சுரேஷ், கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை சூர்யா நகர் அருகே ஜெய பாரத் ஹோம்சின் டைட்டன் சிட்டி தொடக்க விழா நடந்தது.
    • இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது

    மதுரை

    மதுரையை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யாநகரில் டைட்டன் சிட்டி என்ற பெயரில் 300 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நடந்தது.

    ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார். ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குநர் நிர்மலாதேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், சகோதரர்கள் அழகர், முருகன், செந்தில், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

    மதுரை மற்றும் கோவையில் எங்களது நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு வீடுகளை கட்டி தர சொல்கிறார்கள். நாங்களும் தரமான வீடுகளை கட்டித்தந்து கட்டுமானத்துறையில் அனைவரும் பாராட்டும் வகையில் வீடுகளை கட்டித் தருகிறோம்.

    மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளோம் என்றார்.

    அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இதனை ஆயிரக்

    கணக்கானோர் கேட்டு ரசித்தனர்.

    • ஜெய பாரத் ஹோம்ஸ் சார்பில் டைட்டன் சிட்டி தொடக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி மதுரையில் இன்று மாலை நடக்கிறது
    • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    மதுரை

    ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யா நகரில் டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்திற்கான தொடக்க விழா இன்று (5-ந் தேதி) மாலை நடக்கிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்கிறார்.

    இதுகுறித்து ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்ட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.ஜெயகுமார் தலைமை தாங்குகிறார். நிர்வாகி ஜெ.நிர்மலாதேவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்தகக் கண்காட்சி தருமபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
    • மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி தருமபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ளது.

    இந்த புத்தக கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார். தகடூர் புத்தகப் பேரவை தலைவர் டாக்டர் செந்தில், செயலாளர் சிசுபாலன், நெடுஞ்சாலைத்துறை தனி தாசில்தார் அதியமான், வாசகர் வட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நூலகங்களில் தன்னார்வலர்களாக இணையும் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பழனி, தகவல் புத்தக பேரவை ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம், நூலக ஆய்வாளர் மாதேஸ்வரி, இருப்பு சரிபார்ப்பு அலுவலர் மாதேஸ்வரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் ரங்கராஜன், மேலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

    ×