search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா
    X

    நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்ற காட்சி.

    உடுமலையில் நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா

    • நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
    • ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் இதற்கான துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். இளமுருகு வரவேற்றார். உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணி, உடுமலை ரோட்டரி சங்க தலைவர் சத்தியம் பாபு உடுமலை கட்டுநர்வல்லுனர் சங்க தலைவர் ரவி ஆனந்த் ஆகியோர் பயிற்சி குறித்து பேசினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தான் படிக்கும் காலங்களில் போட்டி தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விளக்கி பேசினார். நிறைவாக லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நன்றி கூறினார். ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த நீட் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் நூலகம் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இது தவிர பள்ளி மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் வகையில் ஞாயிறு தோறும் இலவச ஓவியம், சிலம்பம், பேச்சுப்போட்டி, யோகா ஆகியவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×