search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஅள்ளி மூகாம்பிகை கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
    X

    மாரண்டஅள்ளி மூகாம்பிகை கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

    • மாணவ கண்மணிகள் தங்கள் கடமைகளை உணர்ந்து நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
    • எதிர்காலத்தில் சிறப்பா னதொரு கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள மாதம்பட்டியில் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 2023- 2024 ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் லட்சுமி அறக்கட்டளையின் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் தலைமை வகித்தார். உழைப்பே உயர்வு என்றும் முயற்சி திருவினையாக்கும் என்பதில் சிறிய ஐயமில்லை ஆகவே மாணவ கண்மணிகள் தங்கள் கடமைகளை உணர்ந்து நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    லட்சுமி அறக்கட்டளையின் செயல் இயக்குனர் மாதுளம் பூ தான் வழங்கிய முன்னுரையில் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தால் உண்டாக்கும் பயன்கள் பற்றி வேலைவாய்ப்பு குறித்து தெளிவாக பேசினார் .

    அறக்கட்டளையின் இயக்குனர் உதயகுமார் மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் சிறப்பானதொரு கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

    மேலும் தொழில்நுட்ப படிப்பின் நன்மைகள் மற்றும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் பேராசிரியர்களின் அனுபவங்கள் ஆகியவை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் கல்லூரியின் முதல்வர் சரவணன் அவர்கள் வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதலாம் ஆண்டு துறை தலைவர் கவிதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் விரிவுரையாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இக்கல்லூரியின் பயிலும் மாணவர்களுக்கு ஹாஸ்டல் மற்றும் கேண்டீன் வசதிகள் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×