search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மக்கள் நீதிமன்றம்"

    • நிலுவையில் உள்ள 11072 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
    • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வினை, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஸ்வர்ணம் ஜெ நடராஜன் வருகிற சனிக்கிழமை 12 ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 20 அமர்வுகளாக காலை 10 மணியளவில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்திற்குரிய சிறு குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 11072

    விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டுகிறோம் என்று கூறினார்.

    • 2019ம் ஆண்டு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டபவருக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம் பெற்று கொடுக்கப்பட்டது.
    • பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    தாராபுரம் :

    திருப்பூரில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், குடும்ப நல நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் நீதிபதி ஸ்ரீ குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி மற்றும் வழக்கறிஞர்கள் பாலகுமார், பழனிசாமி, ராஜேந்திரன், பாலாஜி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதிகள் நீதிபதி தர்மபிரபு மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே. எஸ். பாபு , முனிசிப் மதிவதனி, ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் 2019ம் ஆண்டு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்ட தென்தாரை பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 24) என்பவருக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம் பெற்று கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வக்கீல் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 13ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற உள்ளது.
    • தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்வி கடன், வங்கி கடன், குடும்ப வன்முறை வழக்கு, காசோலை, நுகர்வோர் வழக்கு உள்ளிட்டவை பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    தேனி:

    தேனி மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட ப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்தம பாளையம், ஆண்டிபட்டி, போடி வட்ட சட்டப்பணிகள் குழுவில் வருகிற 13ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற உள்ளது.

    நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சொத்து மற்றும் பணம் சம்மந்தப்பட்ட வழக்கு, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு,

    கல்வி கடன், வங்கி கடன், குடும்ப வன்முறை வழக்கு, காசோலை, நுகர்வோர் வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்கு பிரச்சி னைகளை சமாதானமாக வும், நிறைவாகவும் சுமூக மாகவும் தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெறும்.
    • தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினம் தீர்வு காணப்படவுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை யத்தின் தலைவருமான (பொறுப்பு) முனுசாமி தெரிவித்துள்ளதாவது:-

    மாவட்ட அளவில் நீதிமன்றகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதளின்படியும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அந்தந்த நீதிமன்றகளிலேயே மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

    சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெறும்.

    இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினம் தீர்வு காணப்படவுள்ளது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றகளில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 230 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
    • காசோலை மோசடி வழக்கு சம்பந்தமாக புகார் கொடுத்தவருக்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சிவகிரியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார்.

    சமரச மையத்தில் கிரிமினல் வழக்குகள் சம்பந்தமாக மொத்தம் 230 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

    சிவில் வழக்குகள் சம்பந்தமாக 114 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

    காசோலை மோசடி வழக்கு சம்பந்தமாக புகார் கொடுத்தவருக்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அபராதத் தொகையாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டது.

    மக்கள் நீதி மன்றத்தில் உறுப்பினர் வழக்கறிஞர் மருதப்பன், அரசு வழக்கறிஞர் பேட்ரிக் பாபு, நீதிமன்ற தலைமை எழுத்தர் கலாமணி, சிவகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கட சேகர், கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரலிங்கம் மற்றும் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய மக்கள் நீதிமன்றநிகழ்ச்சி நாளை காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது.
    • நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கொண்ட 20 அமர்வில் 7726 வழக்குகள் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படுகிறது

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் ஜெ. நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றநிகழ்ச்சி நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது.

    இதில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கொண்ட 20 அமர்வில் 7726 வழக்குகள் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    ×