search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருமுனை கூட்டம்"

    • சோழவந்தான் அருகே தி.மு.க. இளைஞரணி சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
    • ராயபுரம், திருமால்நத்தம் ஆகிய கிளைக்கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே ரிஷபம் ஊராட்சி ராயபுரம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தி.மு.க. ஆட்சியின் 2 சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரிஷபம் சிறுமணி, திருவேடகம் பழனியம்மாள், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றதுணைத்தலைவர் கேபிள்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பால் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் அலெக்சாண்டர், நிர்வாகிகள் பெரியகருப்பன், சந்தானலட்சுமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வனிதா ரங்கநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன் ஆகியோர் பேசினர். ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகாவீரபாண்டி, கார்த்திகாஞானசேகரன், தென்கரை சோலைராஜன், மேலக்கால் பன்னீர்செல்வம், ராஜா, ஒன்றிய இளைஞரணி ரிஷபம், ராயபுரம், திருமால்நத்தம் ஆகிய கிளைக்கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் 

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
    • தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே நரிக்குடி ஒன்றியம் இருஞ்சிறை கிராமத்தில் தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ண குமார் தலைமை வகித்தார்.

    நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பா ளர்கள் சிதம்பர பாரதி,சேகர் மற்றும் ஜெகன் ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கி ணைக்க நரிக்குடி வடக்கு ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளரும்,தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான தங்கம் தென்ன ரசுவின் அறிவுறுத்தலின் பேரில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நெல்லை முத்தையா அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த ஏற்பாடுகளை இருஞ்சிறை தி.மு.க. கிளை செயலாளர் கர்ணன் வீரபாண்டி மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் திறம்பட செய்திருந்தனர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் சேர்மன் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன், பார்வதிநாதன், சிக்கந்தர், கண்ணன், பிச்சைமணி தங்கப் பாண்டியன், வீரசோழன் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் பல்வேறு பிரிவு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த வல்லுரில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை சார்பில் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழா தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு,கட்சி கொடியேற்றுதல்,நல திட்ட உதவிகள், தெருமுனை கூட்டம், வல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மா.உமாபதி தலைமை வகித்தார், பொறியாளர் அணி இணை செயலாளர் வல்லூர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவண மைய மாநில துணைச் செயலாளர் சி. நீலமேகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் தளபதி சுந்தர், திருவள்ளூர் நாடாளுமன்ற செயலாளர் நெடுஞ்செழியன் பொன்னேரி தொகுதி செயலாளர் சேகர், வல்லூர் ரவிமணி, நாதன், வடிவேல், மனோ, குமரவேல், மோத்தி, லலிதா, தேசியதிலகம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் துவக்கமாக வல்லூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து வட சென்னை அனல் நிலைய சாலை, வல்லூர்சாலை, உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் கிராமத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.

    • கூட்டத்தில் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
    • கல்வெட்டை திறந்துவைத்து மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் சிறப்புரையாற்றினார்.

    அம்பத்தூர்:

    பிரதமர் மோடி பதவி ஏற்ற 10-ம் ஆண்டு தொடக்க விழா, 50 அடி உயர கொடிக்கம்பம், கல்வெட்டு திறப்பு மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மேற்கு சென்னை மாவட்டம் அம்பத்தூர் வடகிழக்கு மண்டல 84-வது வட்டத்தில் மண்டல தலைவர் சற்குரு செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ராம்குமார் முன்னிலை வகித்தார். சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கல்வெட்டை திறந்துவைத்து மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் சிறப்புரையாற்றினார்.

    மாவட்ட தலைவர் மு. மனோகரன், பேச்சாளர் ஜெயக்குமார், மாநில, மாவட்ட மண்டல் வட்ட நிர்வாகிகள் பாஸ்கர், அருணாச்சலம், திருவேங்க டம், செல்வன், ஜெயலட்சுமி, தியாகராஜன் சுப்பிரமணிய ரெட்டியார், குமரன், தினேஷ் ராஜா, லதா, சசிகலா, தாட்சாயினி, சதீஷ், ரஜினிதனுஷ்கோடி, தினேஷ், பிரகாஷ் நிஷாந்தி, நிர்மல், சுபாஷ் சந்திர போஸ், ஐயப்பன்பிள்ளை, முகமது, குப்புசாமி, பாண்டி யராஜன், மகாலிங்கம், விமல்சந், பாலாஜி, முருகா, கிஷோர் ,வினோத், பிச்சாண்டி பத்மநாபன், மாரிச்சாமி, ரமேஷ்காந்த், இளம்பருதி, சம்பத், நகரத்தினம், மோகன் குமார், ஜோதி பாசு, மூர்த்தி சிவம், ஏழுமலை, வெள்ளை ரோஜா, வசந்தா, ரஞ்சனி, மீனா, கோகிலா, குமார், சிவராமன், ஸ்ரீதரன், சேதுரா மலிங்கம் போஸ், ராமநாதன், சுந்தர்ராஜ், காலிங்கண்ணன், கிருஷ்ண மூர்த்தி, கிருஷ்ணகுமார், பிரபா கரன், வரதராஜன், சதீஷ்குமார், கோபால், ராஜ், பாலாஜி, மகேஷ், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    ×