search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்பத்தேர் உற்சவம்"

    • தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது.
    • தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. நேற்று இரவு அவினாசிலிங்கேசுவரர் கோவில் எதிரே உள்ள தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் - அம்பாள் சாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்ப குளத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தெப்ப தேர் விழாவை காண குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தெப்ப குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்.

    • அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது.
    • 41 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப தேர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம்.

    கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப தேர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.

    வருகிற 12-ந் தேதி கம்பம் எடுக்கப்பட்டு தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதற்கு முந்தைய நாளான 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தெப்பத்தேர் திருவிழாவை நடத்த நகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகத்தினரும் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்திலும் நடத்த முடிவு செய்தனர்.

    நீண்ட நாட்களாக திருவிழா நடத்தப்படாமல் இருந்ததால் இது குறித்து முறையான அனுமதி பெற்று நடத்த வேண்டும் என விரும்பி திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யாவிடம் மாவட்ட தி.மு.க. செயலாளர் மதரா செந்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, நகர் மன்ற துணைத் தலைவர் நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன் எழுச்சி பாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஊர் கவுண்டர் ராஜா, நகர் மன்ற உறுப்பினர்கள் அண்ணாமலை, ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ராஜவேல் ஆகியோர் மனு கொடுத்தனர்.

    மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் திருவிழாவின் பாரம்பரியம் எப்படி நடத்தப்படும்? தெப்ப தேருக்கான ஏற்பாடுகள் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்படும் என்பது குறித்து கேட்டார். மேலும் இதுகுறித்து விரிவாக பேச அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்தா லோசனை கூட்டம் நடத்திவிட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ×