search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைப்பணியாளர்கள்"

    • ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், தினமும் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும்.
    • தினசரி சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த திடக்கழிவிற்கான அளவை உரிய பதிவேட்டில், தினமும் பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சிகளில், தனியார் நிறுவனத்தினர் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் (சி.ஐ.டி.யு.,) சங்கத்தின் சார்பில், அதன் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

    அதனடிப்படையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-

    மாநகராட்சி, நகராட்சிகளில் தனியார் வாயிலாக மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகளில், சில நகர்ப்புற உள்ளாட்சிகளில் சட்ட விதிப்படி பணி மேற்கொள்ளப்படுவதில்லை.ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கூலி பிரதிமாதம் வழங்கப்படுவதில்லை என்ற புகார் வந்த வண்ணம் உள்ளது.

    ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், தினமும் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். பஸ் நிலையம், சந்தை, சாலை மற்றும் வீதிகளில் தேங்கும் குப்பை, கழிவுநீர், கால்வாயில் தேங்கும் கசடு, மண் உள்ளிட்டவற்றை சேகரித்து மக்கும், மக்காத கழிவுகளை தனியாக பிரித்து நுண் உர மைய கூடம், உலர்க்கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய குப்பைகளை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும்.

    தினமும் சேகரிக்கப்படும் குப்பையில் மக்கும் குப்பை, மக்காத மறு சுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய உலர் கழிவுகள், மக்காத எதற்கும் பயன்படாத பிற உலர் கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் டயர், நாப்கின், பயன்படுத்தப்படாத மருந்து, மருந்து அட்டைகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். தினசரி சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த திடக்கழிவிற்கான அளவை உரிய பதிவேட்டில், தினமும் பதிவு செய்ய வேண்டும்.

    நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு பணிக்கும் செயல்திறன் கணக்கிட்டு அதன்படி தொகை கணக்கிட்டு நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட வேண்டும். வீடு, கடை, வணிக வளாகம், சந்தைகளின் எண்ணிக்கை, அங்கு சேகரிக்கும் திடக்கழிவின் எடை, மக்கும் மற்றும் மக்காத குப்பையின் எடை, பஸ் நிலையங்களில் தினசரி சுத்தம் செய்யப்படும் நேர விவரம் ஆகியவற்றை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

    பணியாளர்களுக்குரிய சம்பள தொகையை பிரதி மாதம், 5ந்தேதிக்குள் ஒப்பந்ததாரருக்கு நிர்வாகங்கள் வழங்க வேண்டும். பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட வேண்டிய பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பங்கு தொகையை பிடித்தம் செய்து, ஒப்பந்ததாரரின் பங்குத் தொகையுடன் சேர்த்து உரிய கணக்கில் செலுத்தி ரசீது பெற்ற பின் அதனை சரிபார்த்த பிறகே அந்தந்த மாதத்திற்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு விடுவிக்க வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அரசின் குறைந்தபட்ச கூலி சட்டம் 1948ன் படி வெளியிடப்பட்ட அரசாணை எண் 36ன் படி, குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்.

    இவ்வாறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    • காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைபணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அவினாசி:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தேசிய கொடியேற்றிவைத்தார்.

    இதையடுத்து பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைபணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத்தலைவர் மோகன், வார்டு உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    • காங்கயம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் வழங்கினாா்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப்பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் - என் குப்பை எனது பொறுப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில், சுகாதாரத்தைப் பேணிக்காக்க மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்துத் தர பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி அந்தந்த பகுதியில் சிறப்பாக தூய்மை செய்ததற்காக தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் வழங்கினாா்.

    தாராபுரம், தினசரி சந்தை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் வே.ராமா், நகா்மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    இதேபோல காங்கயம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் வழங்கினாா்.காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்படபலா் கலந்து கொண்டனா்.

    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்
    • 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே தூய்மை பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 நாட்களில் மட்டும் 1000 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குப்பை தொட்டிகள் பல இடங்களில் நிரம்பி குப்பைகள் தேக்கத்தால் துர்நாற்றம் வீசியது. பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் கலெக்டர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4-ந் தேதி முதல் மீண்டும் பணிக்கு சென்றனர்.

    ஆனால் பேச்சுவார்த்தை யில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியா கவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனை அடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவாது இன்று (25-ந் தேதி) முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப்போரா ட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தூய்மை பணியாளர் சங்கத்தினர் கூறியதாவது:-

    கடந்த அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கோவை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று மாமன்ற கூட்டத்தில் எந்த அறிவிப்பும், தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் 3 ஆயிரம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    4 ஆண்டுகளாக போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட கலெக்டர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் ரூ.721, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529, நகராட்சியில் ரூ.606, ஊராட்சியில் ரூ.529 என ஊதிய உயர்வு அறிவித்தார்.

    பேரூராட்சி, நகராட்சி களில் இந்த கூலி வழங்கப்பட்ட நிலையில் மாநகராட்சியில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில் கூட தற்போது வரை வழங்கவில்லை. எனவே உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதுவரை தூய்மை பணியாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    உடுமலை உள்ளிட்ட திருப்பூர் மண்டலத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவுப்பணியாளர்கள் சென்னைக்கு செல்கின்றனர்.
    உடுமலை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் நிவாரணப்பணிகளுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி  உடுமலை உள்ளிட்ட திருப்பூர் மண்டலத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவுப்பணியாளர்கள் சென்னைக்கு செல்கின்றனர்.

    உடுமலை நகராட்சியில் இருந்து ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு மேற்பார்வையாளர் ஆகியோர் தலைமையில்  ஒரு டிரைவர் மற்றும் 20 துப்புரவுப்பணியாளர்கள் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தளவாடப்பொருட்களுடன் நிவாரணப்பணிக்காக புறப்பட்டு சென்றனர். 

    உடுமலையில் இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர்(கூடுதல் பொறுப்பு) எஸ்.எஸ்.சுரேஷ்குமார், நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
    ×