search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்கா தேவி"

    • நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
    • அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

    நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.

    அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

    இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு,

    அடுத்த 3 நாட்கள் மஞ்சள்

    நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.

    வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:

    முதல் நாள் பச்சை,

    இரண்டாம் நாள் மஞ்சள்,

    மூன்றாம் நாள் நீலம்,

    நான்காம் நாள் கருநீலம்,

    ஐந்தாம் நாள் சிவப்பு,

    ஆறாம் நாள் கிளிப்பச்சை,

    ஏழாம் நாள் இளஞ்சிவப்பு,

    எட்டாம் நாள் பச்சை/அரக்கு பார்டர்,

    ஒன்பதாம் நாள் வெந்தய கலர்.

    • இங்கு, ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
    • இதை நினைவு கூறும் விதத்தில் “ராமலீலா” என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்ளில் ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.

    ராமபிரான் இலங்கைக்கு போருக்கு சென்றபோது பேராற்றலும், பலமும் வேண்டி அம்பிக்கையை பூஜித்தார்.

    இதை நினைவு கூறும் விதத்தில் "ராமலீலா" என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    விஜயதசமி அன்று ராவணனின் உருவத்தை பத்து தலைகளுடன் செய்து அதை நெருப்பிட்டு எரிக்கிறார்கள்.

    அந்த பொம்மைக்குள் பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை நிரப்பி மைதானங்களில் வைத்து கொளுத்தி விடுவார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு "ராவண தகனம்" என்று பெயர்.

    மனதில் உள்ள தீய எண்ணங்களை நீங்கி நல்லருள் பெற வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    • மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • “தஸ்ராத்” என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அரசு சார்பில் இங்கு மிகப் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்படும்.

    ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் மைசூர் சாமுண்டீசுவரியை ஒன்பது நாட்கள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம்.

    10வது நாளான விஜயதசமி நாளில் போருக்கு புறப்பட்டு செல்வர்.

    இதன் மூலம் தேவி அருளால் வெற்றி வாகை சூடி மகிழ்வர்.

    இன்றும் மைசூரில் தசரா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    "தஸ்ராத்" என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    இச்சொல்லே திரிந்து "தசரா" என்று வழங்கப்படுகிறது.

     முதல் ஒன்பது நாளும் நவராத்திரியாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறார்கள்.

    நவராத்திரியின் போது புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர்.

    • சிவாலயம் வழிபாடு பாவங்களை நீக்கி அம்மனின் அருள் பெற உதவும்.
    • பூரம் நட்சத்திரத்திற்கு 13 மற்றும் 15 நட்சத்திரங்கள் மிகவும் சேமம், நன்மை தரும் நட்சத்திரம்.

    பூரம் நட்சத்திரம் அம்மன் அவதாரம் செய்த நட்சத்திரம் என்பதனால், அம்மன் ஆலயங்கள் சென்று வழிபாடு செய்தல், துர்க்கா தேவி ஆலயம் சென்று வழிபாடுதல் கஷ்டங்களைக் குறைக்கும்.

    திருவாதிரைக்கு பூரம் ஆறாவது நட்சத்திரம் என்பதால் இவர்களுக்கு சிவாலயம் வழிபாடு பாவங்களை நீக்கி அம்மனின் அருள் பெற உதவும்.

    மேலும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் சென்று வழிபடுவது, கடன், நோய்கள் தீர நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடுவதும்.

    குடும்பப் பிரச்சினைகள் என்றால் துர்க்கா தேவி வழிபாடும், பிரச்சினை தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ திருவனந்தபுர ஆண்டவரை வழிபடுவதும் பலன் தரும்.

    திசா புத்தி காலத்திற்கேற்ற ஆலயங்கள் சென்று வழிபடுவதும் இவர்கள் வாழ்விற்கு துன்பங்கள் குறைய, நன்மைகள் பெருக வழிவகுக்கும்.

    பூரம் நட்சத்திரத்திற்கு 13 மற்றும் 15 நட்சத்திரங்கள் மிகவும் சேமம், நன்மை தரும் நட்சத்திரம். பரணி, சித்திரை நட்சத்திரம் போலவே அவிட்ட நட்சத்திரம் யோகம் தரும் நட்சத்திரமாகும். விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களாலும் நன்மைகள் கிடைக்கும்.

    பூரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதியின் பெயர்கள் ஆகாது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் ஒழுக்கம், தைரியம் மனம் இருப்பார்கள், தான தர்மம், காரியங்களில் முழுமையான ஈடுபாடு கொண்டு இருப்பார். நேர்மையுடன் திகழ்பவர் விவசாயத்தில் நாட்டமும் நிறைந்திருக்கும் ஏன்எனில் தலத்தில் சிவதீர்த்தம், நாகதீர்த்தம், ஞான பிரம்மா தீர்த்தம், இந்தி தீர்த்தம், ஸ்கந்ததீர்த்தம், குரு தீர்த்தம், எனும் ஏழுதீர்த்தம் இருப்பதால் இந்த நட்சத்திரம் இவ்வளவு சிறப்பு பெற்றஸ்தலம் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை முதல் பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர்ததூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீஹரிதீதேஸ்வரர் ஆலயம் ஆகும்.

    இந்த நட்சத்திரதலத்தில் பூராநட்சத்திர நாளான்று இத்தலத்தில அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை போறு பெறலாம். இதற்கு ஆடி பூரம் உகந்த நாளாக கருதப்படுகிறது.

    ×