search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரியோதனன் படுகளம்"

    • மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை தெற்குபட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், பாரம்பரியம் மிக்க மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக "துரியோதனன் படுகளம்" நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இவ்விழாவைகான கோவளம், நெம்மேலி, கேளம்பாக்கம், திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்திருந்த சென்னைவாசி பக்தர்கள் பாரம்பரிய மகாபாரத கூத்து கலைஞர்களை வியப்பாக பார்த்து அவர்களுடன் நின்று செல்பி, போட்டோ எடுத்துச் சென்றனர்.

    • போளூர் சனிக்கவாடி கிராமத்தில் நடந்தது
    • பொது மக்களுக்கு அன்னதானம்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சனிக்கவாடி கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவிலில் இக்கோவில் அக்னி வசந்த விழா 9-ம் ஆண்டு நடைபெறுகிறது கடந்த ஜூன் 9-ந்தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவு தொடங்கியது.

    20 நாட்களும் மகாபாரத சொற்பொழிவு 7 நாட்கள் நாடகமும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று திரவுபதி அம்மன், கிருஷ்ணர், தருமர், அர்ஜுனன் ஆகிய சிலைகளுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது.

    காலையில் 10 மணியளவில் துரியோதனம் படுகளம் மதியம் 12 அன்னதானமும் மாலை 5 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெற்றது.

    முதலில் அக்னி கரகம் பயபக்தியுடன் தீயில் இறங்கியவுடன் பொதுமக்களும் அம்மனை வேண்டி விரதங்கள் இருந்து வேண்டுதலை நினைத்து பக்தியுடன் தீயில் இறங்கி அம்மன் அருள் பெற்றனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் தருமருக்கு பட்டாபிஷே கமும் பிறகு அன்னதானம் நடைபெற்றது விழா ஏற்பாடு களை பொது மக்களும் இளைஞர் அணிகள் ஏற்பாடு செய்தி ருந்தனர்.

    • 9-ந் தேதி கொடியேற்றம்
    • பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மகாபாரத பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, தினசரி மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் நடைபெற்றன. மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையடுத்து,

    பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மாலை தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

    • மாலையில் தீமிதி விழா நடைபெற்றது
    • ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த 5 புத்தூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு, பீமன், துரியோதனன் வேடமணிந்து நாடக நடிகர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தினர்.

    இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். இந்த விழாவில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து மகாபாரத சொற்பொழிவை கேட்டார். கோவில் சார்பில் விழாக்குழுவினர் பரசுராமன் உள்பட பலர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். மாலையில் கோவில் தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தபடி கோவிலை வலம் வந்தனர்.

    இரவில் முருகன் திருவிளையாடல் நாடகம் நடைபெற்றது. இன்று தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது
    • மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் 18-வது நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடக கலைஞர்கள் துரியோதனன் பீமன் திரவுபதி, காந்தாரி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு தற்போது உள்ள இளைஞர்களுக்கு மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர்.

    முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை காண 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை கண்டு களித்து சென்றனர்.

    • அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

    உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், நாடகக் கலை புத்துயிர் பெற வேண்டி மகாபாரத சொற்பொழிவு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து 67 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பொது மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • தீ மிதி விழா நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    சோளிங்கர்

    சோளிங்கர் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது.

    நிறைவு நாளான நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய் க யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து துரி யோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கட்டைக் கூத்து கலைஞர்கள் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் நடித்து காண்பித்தனர். தொடர்ந்து மாலையில் தீ மிதி திருவிழா நடந்தது. இதற்காக அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.

    அதன் அருகில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த சி பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    • காளசமுத்திரம் கோவிலில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 25-ந்தேதி அம்மனுக்கு அலகு நிறுத்தி மகாபாரத விழா தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவும், வருகிற 14-ந்தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகமும் நடைபெற உள்ளது.

    6-ந்தேதி இரவு 7 மணி அளவில் திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலை 6 மணி அளவில் தீமிதி விழா நடக்கிறது. அன்று மாலை பட்டிமன்றம் நடக்கிறது.

    மறுநாள் திங்கள்கிழமை தர்மர் பட்டாபிஷேகம், மாலை இன்னிசை பாட்டுக்கச்சேரியும் நடக்கிறது. 24.6.22 முதல் வருகிற 25.7.22 வரை 32 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 300-க்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந் துள்ள திரவுபதியம்மன் கோவிலில் 15 நாட்கள் நடைபெறும் தீமிதி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரத்தில் திரவுபதியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காப்புக்கட்டிய ஆண், பெண், குழந்தை என 300-க்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெற்றது.

    ×