search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை இயக்குநர்"

    • பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பின்னர் விதை இருப்பு பராமரிப்பதில் சில அறிவுரைகளை வழங்கினார்.

    ஈரோடு:

    பவானியில் உள்ள அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது முளைப்பு திறன் பரிசோதனை முடிவு அறிக்கை, விதை இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து விதை சுத்திகரிப்பு செய்யும் எந்திரங்களை பார்வையிட்டார்.

    பின்னர் விதை இருப்பு பராமரிப்பதில் சில அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் பவானி வேளாண்மை விரிவாக்க மையத்திலும் ஆய்வு செய்து கோப்புகளை பார்வையிட்டு விதை இருப்பு, விதையின் ஈரப்பதம் சரியான அளவில் இருக்கும் படி பார்த்து கொள்ளவும் மற்றும் பூச்சிகள் தாக்காமல் விதை களை பாதுகாக்கவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது விதை ஆய்வாளர் ஆசைத்தம்பி உடனிருந்தார்.

    • மத்திய-மாநில அரசுகள் ரூ.245 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவித்தன.
    • கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி :

    தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கட்டுமான குளறுபடி யால் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதை யாக நடந்து வருகிறது.

    ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த விபத்துகள் அதிகமாக நடக்கும். இதனால் மீன் பிடி துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று மத்திய-மாநில அரசுகள் ரூ.245 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறி வித்தன.

    இதற்கிடையில் தற்போ தைய தென் மேற்கு பருவக்கா ற்றின் தீவிர த்தால் மீண்டும் கடல் சீற்றம் அதிகமானதால் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் மணல் திட்டுகள் ஏற்பட்டது. இதனால் ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வள்ளங்கள் அந்த பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரையிலும் துறைமுகம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 12-ந் தேதி ஆழ்கடலில் இருந்து சுமார் 40-க்கும் அதிகமான படகுகளில் மீன் பிடித்து வந்து அவற்றை இறக்க முடியாமல் தேங்கியதாக தெரிய வருகிறது.

    தேங்கி இருந்த மீன்கள் சம்மந்தபட்ட துறையின் வாய்மொழி உத்தரவு அடிப்படையில் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் இறக்கி விற்கப்பட்டது.இந்நிலையில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் திறந்து மீன் பிடிக்க வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினர்.

    தொடர்ந்து மீன்வளத் துறை துணை இயக்குனர் அனுப்பியுள்ள அறிக்கை யில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் பரா மரிப்பு பணி முடியும் வரை படகுகளில் மீனவர்கள் அவரவர் கிராமங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தும் மீன்பிடிக்க சொல்லலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லக்கூடிய விசைப்படகுகள் மீன்வளத் துறை மூலம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தேங்காபட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யும் நிகழ்வுகள் அதிக மாக நடந்தது.இந்த அறிவிப்பி னால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ, சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், பிசியோதெரபி பட்டதாரிகள் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.

    எனவே வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 8-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    ×