விதை ஆய்வு துணை இயக்குநர் ஆய்வு

பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் விதை இருப்பு பராமரிப்பதில் சில அறிவுரைகளை வழங்கினார்.
விதை ஆய்வு துணை இயக்குநர் ஆய்வு
Published on

ஈரோடு:

பவானியில் உள்ள அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது முளைப்பு திறன் பரிசோதனை முடிவு அறிக்கை, விதை இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து விதை சுத்திகரிப்பு செய்யும் எந்திரங்களை பார்வையிட்டார்.

பின்னர் விதை இருப்பு பராமரிப்பதில் சில அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் பவானி வேளாண்மை விரிவாக்க மையத்திலும் ஆய்வு செய்து கோப்புகளை பார்வையிட்டு விதை இருப்பு, விதையின் ஈரப்பதம் சரியான அளவில் இருக்கும் படி பார்த்து கொள்ளவும் மற்றும் பூச்சிகள் தாக்காமல் விதை களை பாதுகாக்கவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது விதை ஆய்வாளர் ஆசைத்தம்பி உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com